Dec 29, 2009

இரத்தம் சுண்டும் கால்கட்டு....

தம்பி! நாங்கெல்லாம் பேசாத கடவுள் மறுப்பா? எல்லாம் ரத்தம் சுண்டுனா சரியாய் போய் விடும்..
இப்படி பேசுபவர்களை கண்டால் முதலில் சற்று எரிச்சல் வரும் இப்பெல்லாம் அனுதாபமே வருகிறது.சரி இவங்களுக்கு எப்ப இரத்தம் சுண்டுச்சுன்னு பார்த்த எல்லாம் ஒரு கால்கட்டு போட்ட சரியாயிடும் அங்கதான்..
புண் உள்ள இடத்தில் தான் கட்டுப்போட வேண்டும் சம்பிரதாயத்திற்காய் காலில் கட்டு போடுவதால் ஏற்படும் சமுகத்தில் ஏற்படும் புண் பற்றி யாருக்கும் கவலையில்லாததால் அப்புண் புரையோடியுள்ளது,அதற்கு களிம்பு தடவி சரி செய்ய முடியாது அறுவை சிகிச்சை அவசியம்.

நம் சமூகத்தில் சாதி முறை என ஆரம்பித்து பக்கங்களை நிரப்ப வேண்டிய அவசியமில்லை எனெனில் இக்கட்டுரையை சற்று முற்போக்கு பேசுபவர்களே படிக்கும் படி எழுதியுள்ளேன்(அவர்கள் படிச்சு கிழிச்சலே போதும்) என் கோபத்திற்கான விடை இறுதியில் ஆக நேரடியாக விசயத்திற்கு வருவோம்....

கடவுள் மறுப்பு பேசுபவர்களை இங்கே இருவிதமாக பிரிப்போம்.அதாவது நம் சமூகத்தில் நிலவும் நாம் விருப்பபட்டு ஏற்று கொண்ட அல்லது நம் மேல் திணிக்கப்பட்ட குடும்ப அமைப்பு முறை அதனால் ஏற்பட்ட தலைமுறை(வாழ்வியல் கால அளவு தொடர்ச்சி) என்பதன் மூலம்
1.முதல் தலைமுறை பகுத்தறிவுவாதிகள்
2.ஒன்றுக்கு மேற்பட்ட தலைமுறை பகுத்தறிவுவாதிகள்..

முதலில் 2 ம் வகையினரை பற்றி பார்ப்போம்

தன்னுடைய பெற்றோர் அல்லது அவர்களின் பெற்றோர் இயல்பாக பகுத்தறிவுவாதிகளாக இருப்பதால் இவ்வழிக்கு வந்தவர்கள், இவ்விடத்தில் இன்னொன்றையும் ஆராய வேண்டும்,கரடுமுரடான இப்பாதை வழக்கம்போல்(மூத்தோர் சொல்லே வேதவாக்கு) என்றிருக்காமல் தன் அறிவுக்கும் சற்று பொருத்தி பார்த்து சரி என வருபவர்களே என்பதில் மாற்று கருத்திருக்காது..
என்னுடைய மகனும் என்னைப்போல சிறந்த பகுத்தறிவுவாதியாக வாழ்கிறான் எனப்பெருமைப் பட்டுக்கொள்ளும் தந்தைக்கும்,மகனின் வளர்ச்சியை பார்த்து பெருமை கொள்ளும் தந்தை(மதவாதி) எவ்வித்தியாசமும் இல்லை,நோக்கம் உயர்வானது உணர்வு ஒன்றே!..

ஆக, இம்மாதிரியான தோழர்களுக்கு எதிர்ப்பிருக்காது.இவர்கள் வெளியில் பேசும் எதையும் வீட்டினுள்ளும் பேசலாம்.இவர்கள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக அமைத்துக்கொள்ளலாம்.எவ்வித ஆதரவும் உண்டு..
இப்ப முதலாமவர்களையும் அவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் பற்றி ஆராய்வோம்..

சாமி இல்லையின்னு சொன்னான்! பரவாயில்லை சீக்கிரம் சாமி நல்ல புத்தியை தருமுன்னு நிணைச்சோம்,பாவிப்பய இப்ப சாதியில்லைங்கறான்.நமம சனம் எப்படி ஏத்துக்கும்...
இப்படிபட்ட பேச்சுகளுக்கிடயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள்...
பெரியாரியம் ஒரு ஈர்க்கதக்க தத்துவமா? இல்லை போதை தரும் பொருளா? அது ஒரு மருந்து காயமுள்ளவனுக்கு தேவைப்படும்.
இப்ப நம்ம பார்த்த முதல் தலைமுறை பகுத்தறிவுவாதிகளில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து எல்லோருக்கும் இது ஒரு மருந்து,அவர்களின் இரட்டை குவளை,செருப்பில்லா கால் என எல்லாவற்றிருக்குமான மருந்து அது..

சரி, இவர்கள் இப்படியென்றால் பிற்படுத்தபட்ட சமுகத்திலிருந்து வந்து பெரியாரியம் பேசுபவர்களுக்கு இது மருந்தா? வலியே இல்லாதவர்களுக்கு எதற்கு மருந்து?இவர்கள் அடிப்படையில் மனிதநேயம் மிக்கவர்களாகவும் நன்றியுணர்ச்சியுள்ளவர்களாகவும் உள்ளார்கள்.

மேற்கூறிய இரு வேறுபட்ட நிலையிலுள்ள தோழர்களும் தங்களின் பொருளாதார போராட்டங்களிடையே வாழ்வை பல்வேறு இடையூறுகளிடையே எதிர்கொள்கின்றனர்.அவ்வகையில் திருமணம் எனும் நிகழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மிக அதிகம்.

அடிப்படையாய் முள்ளை முள்ளால் எடுப்பது போன்று சாதி ஒழிய சாதிக்குள் கலப்பு ஏற்பட வேண்டும்,அவ்வகையில் உருவாகும் வருங்கால தலைமுறைகள் சாதீய அடையாளம் அற்றவர் ஆகி விடுகிறார்கள்,அதற்கான முறைகளை வரிசைப்படுத்துவோம்..
1.சாதியை மறுத்து சடங்களுடன் நடைபெறும் திருமணங்கள்(குளிப்பாட்ட வண்னாண்,செருப்பு மாட்டும் சக்கிலியன,மந்திரம் ஓதும் பார்ப்பான்) பெரும்பாலும் பெற்றோர் அனுமதியுடன் நடைபெறும் காதல் திருமணங்களாக இருக்கும் இதில் கூட நாம் நிணைப்பது சாத்தியமே,சடங்குகள் முடிந்தவுடன் சுவடுகள் அழிந்து போகும் உருவாகும் சுவடு கலப்பினமாய் இருக்கும்.இதிலிருக்கும் இன்னோர் சிக்கல் பிறக்கும் குழந்தை அப்பாவின் சாதியாய் வளரும் அதன் திருமண வயதில் பெற்றோர் ஆதிக்கம் இருக்கும்.

2.சாதி மற்றும் சடங்குகளை மறுத்து நடைபெறும் சுயமரியாதை திருமணங்கள் இதைத்தான் தீர்வாக பெரியார் சொன்னார், இதிலும் இருவகை உண்டு காதல் திருமணங்கள் பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்கள்.
இதில் காதல் திருமணங்களாக நடைபெறுபவை போராட்டங்கள் நிறைந்தவையாக இருக்கும், 2ம் தலைமுறை பகுத்தறிவுவாதி என்றால் கூட காதலித்த ஆண் அல்லது பெண்னிற்காய் சரி சடங்கு தானே போனால் போகட்டும் என செய்து விட்டு,பிறகு எவ்வித அடையாளங்களும் இல்லாமல் வாழ்வார்கள்..

ஆக சாதியை மறுக்கும் திருமணங்களில் இழையோடுவது காதல் என மேற்கூறியவற்றில் பார்த்தோம், இயல்பாகவே காதலிக்காத தோழர்களின் நிலை என்ன?

என்னுடைய பையனுக்கோ,பொண்னுக்கோ உறுதியாய் வேறு சாதியில் தான் திருமணம் செய்து வைப்பேன் நான் செய்த தவறை அவர்களும் செய்ய வேண்டாம்...
நீ..யாரை வேண்டுமானாலும் காதலி, ஆனால் நம்ம சாதிக்குள்ள வேண்டாம்...
இது என் காது குளிர நான் கேட்ட பகுத்தறிவுவாதிகளாக உள்ள பெற்றோரின் வார்த்தைகள்...


இப்ப,நிணைத்து பாருங்க முதல் தலைமுறை சேர்ந்த காதலிக்க தவறிய தோழர்கள் நிலையை?

தொலைக்காட்சிகளில் வரும் விவாத நிகழ்ச்சிகளில் எதாவது ஒரு பிரச்சனையை பற்றி விவாதிக்கும் போது உங்க வாழ்க்கையில் நடந்திருக்கா? பொதுவா பேசறதெல்லாம் வேண்டாம் எனச் சொல்லுவார்கள், ஆக உளறல் நாயகன் பாணியில் இக்கட்டுரையை எழுதும் நானே கட்டுரையின் கருவும் ஆனேன், ஆம் காதலிக்க தவறிய கொள்கையில் உறுதியாக இருக்க நிணைக்கும் முதல் தலைமுறை தோழர்களில் நானும் ஒருவன்..எனக்கு ஏற்பட்ட அனுபவங்களாய் இக்கட்டுரையை தொடர்கிறேன்..

பொருளாதாரத்தில் என் சொந்த காலில் நிற்பதாலும் ஓரளவு தெளிந்த நிலையில் இருக்கும் பெற்றோர்களாலும் சுயமரியாதை திருமணம் என்பது சற்று போராடினாலும் எனக்கு எட்டுவதாகவே தெரிந்தது..

சரி, இருக்கவே இருக்கு மையங்கள் பதிவோம்,தேடுவோம் எனத் தேடினால் ஏமாற்றம்தான் மிச்சம்,தேடலில் எனக்கு கிடைத்தவை...

தமபி! உங்களுக்குத்தான் பெண் தேடறீங்களா? பெரியங்க யாரும் பேச மாட்டாங்களா?(அனுமதித்தே பெருசு எங்க போய் பேசறது)
எதுக்கு தோழா! ரிசுக் எடுத்துக்கிறீங்க,வீட்டில் சொல்ற மாதிரி செய்யுங்க! பிறகு நமக்கு தகுந்த மாதிரி மாத்திக்கலாம்(முதல்ல கருப்பு சட்டையை கழட்டி வீசுடா என கத்த வேண்டும் போல இருந்தது)

நான் இந்த துறையில் இருக்கிறேன், எனக்கு அதே துறையிலேயே இருக்கும் துணை வேண்டும்(வாழ்க்கை ஒப்பந்தமா?வியாபார ஒப்பந்தமா? என்ற கேள்வி எனக்குள் இப்போது)

படிப்பு குறைவா இருக்கே நான் நிறைய படிச்சுட்டேன்(வீட்டிலேயே சும்மா இருப்பவர்கள் கூட சொல்கிறார்கள்)

உங்க சாதிக்குள்ளேயே நம்ம ஆளுகளா தேடுங்க என அறிவுரைப்பவர்கள்.
நான் மேல் சொன்ன அனைவரும் பெரியாரியல்வாதிகள், நான் அவர்களை குறை சொல்லவில்லை இருந்தாலும் எதற்கு முக்கியதுவம் தருகிறார்கள் என்ற வருத்தமே...


இவ்விடத்தில் மற்றுமொறு முக்கிய நிகழ்வையும் சொல்லியாக வேண்டும், எனது பெற்றோர் சாதி ஆதிக்கம் நிறைந்த சாதியில் பிறந்தவர்கள், எனவே பார்க்கறதுதான் பார்க்கற பொழங்கற சாதியாப்பாரு என்றனர்.

சுயமரியாதை திருமண முறை சட்டமாக்கபட்டது தோழர் ஐவாவின் மகள் திருமணத்தின் போதுதான்,அப்போது மாப்பிள்ளை பார்த்த பெரியார்,பெண் வீட்டிற்கு தோழர்கள் நல்லகண்னு,மணலி கந்தசாமி ஆகியோரை அனுப்பியுள்ளார் அப்போது பெண்னின் தாயார் கேட்ட கேள்வி பையன் புழங்கற சாதியா?
பொதுவாகவே நாங்க சாதி பார்க்க மாட்டோம், ஆனா புழங்காத சாதியா இருந்தா மகள் சிரமப்படுவாள் எனக்கூறிய பகுத்தறிவுவாதிகள் ஆகியோரைப்பார்த்த போது என் அம்மா எவ்வளவோ முற்போக்கு..

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண்னின் தந்தை எங்களிடம் கேட்டது பெற்றோர் சம்மதம் கட்டாயம் வேண்டும்(யாருக்கு திருமணம் என்பதே தெரியல போலும்)

அப்படி இப்படி என 2 ஆண்டுகள் ஓடிவிட்டன, இப்ப பிரச்சனை எப்படி போகுதுன்னா...

உனக்கு கொடுத்த காலம் முடிந்து விட்டது கருப்புசட்டைக்காரன் எவனும் உனக்கு பொண்னு தரப்போறதில்லை, இனி நாங்க பார்க்கிறோம் சரியான கட்டமைப்பு வைத்திருக்கும் மதவாதிகளுக்கு சுலபமான காரியம் இது...
இப்ப, என் நிலை சரி நம்ம சாதியா இருந்தாலும் பரவாயில்லை சடங்காவது இல்லாம பார்த்துக்கொள்ளலாம் என்ற என் நிலையில் இப்போது மற்றுமொறு அழுத்தம்...
கொள்கை பேசற வெங்காயங்கள் இப்படினா,மதவாதிகள் பையன் சாமி கும்பிடமாட்டானாம்,செயிலுக்கெல்லாம் போயிட்டு வந்தவனாம் என இருவர் தட்டி கழித்தவுடன் என் பெற்றோர் நிலை பொய் சொல்வது அதை உண்மையாக்க என் மீதான அழுத்தம்.

கடவுள் மறுப்பு கல்யானம் வரை பேசாதே,பார்ப்பான் வந்து திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,கண்ட கட்சியில சேர்ந்து வாசுது இல்லாம வீட்டை கட்டி சிரமம் பாரு..
அட, இப்படித்தான் இரத்தம் சுண்டுவதா? இப்ப புரியுதுங்களா? முதல் பக்கத்தில் பெருசுக மேல ஏற்பட்ட அனுதாபம்...
நியாமோ இல்லையோ தெரியல இப்ப என் கோபமெல்லாம் தோழர்கள் மேலதான்..

தம்பி..ஆதிக்க சாதியில பிறந்து சொந்தமா தொழில் செய்யும் உங்களுக்கே சுயமரியாதை திருமணம் செய்வதில் இவ்வளவு சிரமம் என்றால் நானெல்லாம் என்ன செய்வது? ஒடுக்கப்பட்ட சமுகத்திலிருந்து வந்து ஒரு சாதி சடங்கு திருமணம் செய்த தோழனின் குரல் நிறைய சிந்திக்க வைத்தது..
தோழர்களே!
நாம் அடைய நிணைக்கும் சாதி,மத,வர்க்க பேதமற்ற நிலை வர குடும்பம்,சொத்து,வாரிசு அதை ஒட்டி நடைபெறும் திருமண அமைப்பும் மாற வேண்டும், இவைகள் உடைய வேண்டாம் உதிர வேண்டும்,நாம் தான் உதிர்க்க வேண்டும்...

ஒரு கோட்டை அழிக்காமல் அதை சிறிதாக்க பக்கத்தில் பெரிய கோடு போடுவது தாத்தா காலத்து பார்முலா, ஆம் பகுத்தறிவுவாதிகள் குடும்பங்களாக இணைய வேண்டும்,நிறைய குடும்ப விழாக்கள் நடைபெற வேண்டும் அதன் மூலமே நிறைய சாதிக்க முடியும்..

முற்போக்கு அமைப்புகள் சரியான வாழ்க்கை திட்டத்தை தயார் செய்ய வேண்டும், கருப்பு சட்டை தலைவர்கள் தாலி எடுத்து தருவதை நிறுத்த வேண்டும்..

சுயமரியாதை திருமணம் செய்வதாய் உறுதியாய் முடிவெடுத்தால் அது அவர் சார்ந்திருக்கும் அமைப்பின் வேலைத்திட்டமாய் மாற வேண்டும்...

என் அன்புத் தம்பிமார்களே! தயவு செய்து வேறு சாதியில் காதலியுங்கள் இல்லையேல் இவர்கள் உங்களையும் கட்டுரை எழுத வைத்து விடுவார்கள்...


Dec 9, 2009

பெரியாரியல் பயிற்சி முகாம்...


பெரியார் திராவிடர் கழகம் நடத்தும்- கோவை திருப்பூர் மாவட்ட தோழர்களுக்கான பெரியாரியல் பயிற்சி முகாம் வரும் சனவரி 01,02,03-2010 ஆகிய தேதிகளில் உடுமலைப்பேட்டை,திருமூர்த்தி மலை படகுத்துறை ருக்குமணி திருமண மகாலில் நடைபெறவுள்ளது.

முகாம் நிகழ்ச்சிகள்

சனவரி 01-வெள்ளி

காலை 10 மணி

சமுதாய நிலை பெரியாருக்கு முன்னும் பின்னும்-விடுதலை இராசேந்திரன்

மதியம் 3 மணி

பெரியாரின் கடவுள் மறுப்பு-கொளத்தூர் மணி

மாலை 5 மணி

குழு விளையாட்டு

மாலை 6 மணி

புராணங்கள்-சிற்பி இராசன்

இரவு 8.30

குறும்படம் திரையிடல்

சனவரி 02-சனி

காலை 9

பெரியாரின் அரசியல்-விடுதலை இராசேந்திரன்

பகல் 11

மார்க்சியம்-ஒரு அறிமுகம்-ச.தமிழ்ச்செல்வன்

மதியம் 2

பெரியார் நடத்திய போராட்டங்களின் பின்னனி-கொளத்தூர் மணி

மாலை 4

பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு-வழக்கறிஞர் சு.துரைசாமி

மாலை 6

சோதிடம்-உலகம் தோன்றிய விதம்

இரவு 8

பங்கேற்பாளர் நேரம்

சனவரி 03-ஞாயிறு

காலை 9 மணி

பெரியாரின் திராவிடமும்,தமிழ் தேசியமும்-கொளத்தூர் மணி

பகல் 11 கழகத்தின் களப்பணிகள்-கு.இராமகிருட்டிணன்

தொடர்புக்கு

சு.துரைசாமி,திருப்பூர் மாவட்ட தலைவர் -98420 88466

கா.கருமலையப்பன்,திருப்பூர் மாவட்ட செயலாளர்-97883 24474

கோபால்,கோவை மாநகரத் தலைவர்-97877 22147

சாசித்,கோவை மாநகரச் செயலாளர்-98430 73082
Posted by Picasa

Dec 6, 2009

சமச்சீரும் மதவாதியும்...


சமச்சீர் கல்வித் திட்டத்தில் இந்து விரோத பாடத் திட்டங்களை திணிக்கக் கூடாது என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சமச்சீர் கல்வியில் முதலமைச்சர் ஆர்வம் காட்டும் போதே சந்தேகம் எழுந்தது. எல்லோருக்கும் ஒரே கல்வி என்ற பெயரில் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கவே இந்த தகிடுதத்தம் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்து விட்டது. இதை வரைவுத் திட்ட அளவிலேயே இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கிறது.மக்களால் புறந்தள்ளப்பட்ட ஈ.வெ.ரா.வின் இந்து விரோதக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்க முதலமைச்சர் முயல்கிறார். மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு தோற்றுப் போன நாத்திகப் புலம்பலைக் கல்வி என்ற பெயரில் மாணவர்களிடம் திணிக்க சதி செய்கின்றனர் தி.மு.க.வும் அதன் தலைவரும். சமச்சீர் கல்வி என்பது கல்வித் திட்டத்திலும் இருக்கும் நல்ல கருத்துக்களை ஒருங்கிணைப்பது என்ற பசப்பு வார்த்தையைக் கூறிய கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வரைவுத் திட்டத்திலேயே இந்து மதத்தைக் கேவலப்படுத்தும் அவலத்தை வெளியிட்டுள்ளார்.மூன்றாம் வகுப்பு பாடத்தில் ஈ.வெ.ரா.வின் தாக்கம், நான்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள், விழிப்புணர்வு பாடல்கள், ஐந்தில் மூட நம்பிக்கை, ஆறில் கட்டுக்கதை, எழில் அன்னை தெரசா சேவை, சமூக அறிவியலில் இஸ்லாமியர் வருகை, எட்டில் விழாக்கள் அவசியமா? ஒன்பதில் ஆற்றுச் சமவெளி நாகரிகம் இதில் கிறிஸ்தவமும், ஜுடோயிசமும் வருகிறது. அலகு2 இடைக்காலம் நிலமானிய முறைதிருச்சபையின் பங்கு, இஸ்லாமியர் நன்கொடை, பத்தாம் வகுப்பில் ஈ.வெ.ரா.வின் விழிப்புணர்வு சிந்தனை. என்னவிதமான சமச்சீர் கல்வி இது?


மாமா நம்ம கவலை நியாயம்தானுங்க,

இப்படியெல்லாம் வருங்கால தூண்களுக்கு சொல்லி கொடுத்தா அப்பறம் எங்களக்கெங்கே அடிமைகள்?சரி அதெல்லாம் இருக்கட்டும் இதற்கெதற்கு அரசாங்கத்தை எச்சரிச்சுட்டு,நமக்கு வசதியா மூன்றாம் வகுப்பில் கண்ணன் வெண்னெய் திருடுனது, ஐந்தில் ராமன் வில்லை வளைத்தது, எட்டில் விநாயகன் பால் குடிச்சது,பத்தாம் வகுப்பில் அறிவியலில் கடலுக்கடயில் பாலம் கட்டுவதெப்படி,அப்பறம் பாலியல் கல்வி அவசியமுன்னு முற்போக்குவாதிகள் சத்தம் போடறாங்க அதிலெயும் எதாவது உருப்படியா செய்வதற்கு முன்னடி கோபியர் லீலை,100 மனைவி சமாளிப்பதெப்படின்னு நம்ம அயிட்டங்களை எடுத்து விடனும்.இதுக்கு போராட்டமெல்லாம் வேண்டாங்க அதுதான் நமம ஆத்தா சரசுவதி தாமரையில் சும்மாதானே உட்கார்ந்திருக்காங்க அவங்களுக்கு ஒரு கோமம் போடுவோமா பேசா......
Posted by Picasa

டிசம்பர் 6.....


வருட இறுதியில் டிசம்பர் 6 வந்தாலே ஏதோ சுனாமி வருவது போல ஒரே அளப்பாரை,வெற்றி திருநாள் எனக் காவிப்பயல்களும்,மறக்க முடியுமா என இசுலாமிய சகோதரர்களும் மாற்றி மாற்றி சொல்லி கொண்டே போனதில் வசதியாய் மறந்து போனது அம்பேத்கர் நிணைவு நாள்என்பதே,அம்பேத்கர் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடு, ஆக திட்டமிட்டே அவரின் நிணைவு நாளை தேர்ந்தெடுத்துகலகம் செய்த பார்ப்பன பயங்கரவாதிகளின் சூழ்ச்சியை முறியடிக்க இந்நாளில் அண்னாரது புகழை உரக்க முழங்குவோம்.

அம்பேத்கர் நிணைவாய்...

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.
எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’
டிசம்பர் 6

குவளை ரெண்டு
மசுரு
ஒரே கல்லா....

தனியே
முடி திருத்தகம்-முட்டாள்
முதலில்
திருத்துமனதை...

சாதிகள் இல்லையடி
பாப்பாத்தீ....


சமபந்தி விருந்தாமே !!
கோமாதா குழம்பு வை...
Posted by Picasa

Dec 2, 2009

தேவநாத சங்கராச்சாரியர்.....

காஞ்சீபுரம், டிச. 1-
அர்ச்சகர் தேவநாதன் நேற்று மாலையில் விசா ரணை முடிந்து காஞ்சீபுரம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோர்ட்டு வளாகத்தில் அர்ச்சகர் தேவநாதன் வந்த போலீஸ் ஜீப்பை வழிமறித்து செருப்பு மற்றும் துடைப்பம் ஆகியவற்றால் தாக்கினர். சாணியை வாரி ஜீப் மீது வீசினர்.
தகவலறிந்த டி.எஸ்.பி. சமுத்திரகனி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆவேசமாக இருந்த பெண்களை கைது செய்து ஜீப்பில் ஏற்றிசென்றனர். பின்னர் அர்ச்சகர் தேவநாதனை போலீசார் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று நீதிபதி சுதா முன்பு ஆஜர்படுத்தினர்.
நீதிபதி சுதா அர்ச்சகர் தேவநாதனை மீண்டும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தேவநாதன் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அர்ச்சகர் தேவநாதனை செருப்பாலும், துடைப்பத்தாலும் தாக்கிய மக்கள் மன்ற அமைப்பாளர்களில் ஒருவரான மகேஷ் கூறியதாவது:-
கோவிலின் புனித இடமான கருவறையில் பெண்களுடன் காமவெறியாட்டம் நடத்திய காமகொடூரன் அர்ச்சகர் தேவநாதனை ஜாமீனில் விடுவிக்ககூடாது. மேலும் இந்த வழக்கில் பல உண்மைகள் வெளி வரவேண்டும். போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி பல உண்மைகளை வெளியில கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மத உணர்வுகளை சீர்கெடுத்த காமகொடூரன் தேவநாதனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
தேவநாதனை எந்த காலத்திலும் எந்த கோவிலிலும் அனுமதிக்கவே கூடாது. அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அர்ச்சகர் தேவநாதனுக்கு உரிய தண்டனை வழங்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் . காமகொடூரன் தேவநாதனை எங்கு பார்த்தாலும் அவரை விரட்டி, விரட்டி செருப்பால் அடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அர்ச்சகர் தேவநாதனுக்கு எதிராக கோர்ட்டு வளாகத்தில் போராட்டம் நடத்திய 47 பெண்கள் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 447 ஐ.பி.சி. (அத்து மீறி நுழைதல்), 143 சட்ட விரோதமாக கூடுதல், 341 வழிமறித்து தாக்குதல், 294 ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்
காஞ்சீபுரம், டிச. 1-
காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் வைத்து அர்ச்சகர் தேவநாதன் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து சிவகாஞ்சி போலீசார் தேவநாதனை பிடிக்க வலைவிரித்தனர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
2 முறை காவலில் எடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
செக்ஸ் லீலையில் ஈடுபட்ட தேவநாதனை மச்சேஸ்வரர் கோவிலுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு கருவறையில் பெண்களுடன் எவ்வாறு செக்சில் ஈடுபட்டேன் என்பதை தேவநாதன் நடித்து காட்டினார். அதன் பின்னர் கருவறையில் இருந்து ஒரு முக்கிய ஆதாரம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் தேவநாதன் தன் செல்போனில் பதிவு செய்த செக்ஸ் காட்சிகள் எவ்வாறு வெளியானது என விளக்கினார். காஞ்சீபுரம் கவரை தெருவில் உள்ள ஒரு செல்போன் கடையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த கடையை தேவநாதன் அடையாளம் காட்டினார்.
தேவநாதன் பல பெண்களுடன் செக்சில் ஈடுபட்ட காட்சிகள் செல் போனில் இருந்து ஒரு லேப்-டாப் (கம்ப்யூட்டர்) மூலம் டவுன்லோடு செய்யப்பட்டது தெரிய வந்தது. அந்த கடையில் இருந்து லேப்-டாப், உயர்ரக செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து தேவநாதனுடன் கோவில் கருவறையில் செக்சில் ஈடுபட்ட ஒரு பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-
நான் தினமும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வேன். மிகவும் பயபக்தியுடன் சாமி கும்பிடுவேன். அங்கு அர்ச்சகராக இருந்த தேவநாதன் பார்ப்பதற்கு அப்பாவி போல நல்லவராக காட்சி அளித்தார். அவரிடம் என் கஷ்டங்களை சொல்லுவேன். அவரும் ஆறுதலாக பேசுவார்.
ஒருநாள் எனக்கு கோவில் பிரசாதம் என்று சர்க்கரை பொங்கல் கொடுத்தார். பின்னர் ஒரு சாக்லெட் கொடுத்து சாப்பிட சொன்னார்.
நானும் சாமிக்கு வைத்து பூஜை செய்தது என்று நம்பி பிரசாதத்தை சாப்பிட்டேன். சிறிது நேரத்தில் எனக்கு மயக்கமாக இருந்தது. என்னை கோவிலின் கருவறைக்கு அர்ச்சகர் தேவநாதன் அழைத்து சென்றார். என் ஆடைகளை எல்லாம் களைந்தார். நான் தடுக்க முயன்றேன். ஆனால் மயக்கமாக இருந்ததால் என்னால் முடியவில்லை. என்னை அர்ச்சகர் தேவநாதன் கருவறையில் வைத்து கற்பழித்து விட்டார். அதை தனது செல்போனில் படம் பிடித்து அடிக்கடி என்னை மிரட்டி பலமுறை என் கற்பை சூறையாடினார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து தேவநாதன் மீது போலீசார் புதிதாக கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
போலீசார் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை அனைத்தையும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஒப்படைத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் காஞ்சீபுரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் விபசாரம் நடப்பதாகவும் அதில் அர்ச்சகருக்கு தொடர்பு உடையதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இது போல மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்கள் பலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், நவ. 29-
காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபடட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் ஏராளமான செக்ஸ் லீலையில் ஈடுபட்ட படம் ரகசிய காமிராவில் படமாக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆபாச படம் செல்போனில் தமிழ்நாடு முழுவதும் பரவி வருகிறது. மேலும் செல்போனில் டவுன் லோடு செய்து ஏராளமான சி.டி.க்கள் தயாரிக்க்பபட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அர்ச்சகரின் செக்ஸ் சி.டி.க்கள் அமோக மாக விற்பனை ஆகிறது. அதாவது ஆண்டாள் கோவில் வீதி, பெரிய பெருமாள் மேலமாட வீதி பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் அர்ச்ச கரின் செக்ஸ் சி.டி.க்கள் விற்பனை ஆகின்றன.
எனவே இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்
ஸ்ரீபெரும்புதூர், நவ. 29-
காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக பணி புரிந்து வந்தவர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில் காஞ்சீபுரம் கோர்ட்டில் தேவநாதன் சரண் அடைந்தார். அவரை 2 முறை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸ் விசாரணையில் அர்ச்சகர் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்த பெண்கள் யார்-யார் என்பது தெரிய வந்துள்ளது.
அர்ச்சகர் தேவநாதன் 25 பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகியுள்ளது. இதில் குண்டு பெண் ஒருவர் கருவறையில் வைத்து தேவநாதனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபடுவது போன்ற சி.டி.யும் ஒன்று அந்த பெண் யார் என்பது தற்போது அடையாளம் தெரிந்துள்ளது. கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் அப்பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பெரிய இடத்துப் பெண்கள் (தொழில் அதிபர்களின் மனைவிகள்) 3 பேரும் அர்ச்சகரின் வலையில் விழுந்துள்ளனர். 2 பள்ளி மாணவிகளின் வாழ்க்கையையும் தேவநாதன் நாசப்படுத்தியுள்ளார். விப சார அழகிகள் 3 பேரும் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இவர்கள் அனைவரிட மும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விசாரணை மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது.
அர்ச்சகர் தேவநாதன் தன்னுடன் உல்லாசமாக இருக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளார். இதற்காக கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை பணத்தையும் திருடியுள்ளார்.
இந்த பணத்தை வைத்துக் கொண்டு நட்சத்திர ஓட்டல்களிலும் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அர்ச்சகருடன் உல்லாசமாக இருந்த பெண்கள் பலர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு தப்பிச்சென்று விட்டனர்.
இவர்களது பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே சிவகாஞ்சி போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு நேற்று இரவு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமயில் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணயை தொடங்கியுள்ளனர்.
இனி வரும் நாட்களில் இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் அப்போது அர்ச்சகர் தேவநாதன் பற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர், நவ. 28-
காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் வைத்து பெண்களை ஆபாச படம் எடுத்த அர்ச்சகர் தேவ நாதன் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை முதலில் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது அவரிடம் இருந்து மேலும் முழுமையான விவரங்களை பெறுவதற்காக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த போலீசார் கோர்ட்டு உத்தரவுபடி 3 நாள் காவலில் எடுத்தனர்.
நேற்று இரவோடு இரவாக செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனை வேலூர் ஜெயிலில் இருந்து காஞ்சீபுரம் அழைத்து வந்தனர். இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் தலைமையிலான சிவகாஞ்சி போலீசார் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் தேவநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள், மெமரி கார்டுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
இதில் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் தேவநாதன் பெயரில் ரூ. 80 லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து தினந்தோறும் தீபாராதனை தட்டுகளில் விழும் காசை நம்பி குடித்தனம் நடத்தி வந்த குருக்கள் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் வந்தது எப்படி? என்று கண்டு பிடிக்கும் வேலையில் போலீசார் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மெமரி கார்டில் மேலும் 5 பெண்களின் ஆபாச படங்கள் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் யார்? எவ்வளவு நாட்களுக்கு முன்பு அந்த படம் எடுக்கப்பட்டது என்பன போன்ற கோணங்களில் தேவநாதனிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர்.
அப்போது அவர் ஒவ்வொருத்தரும் தங்கள் செல்போனில் அவா, அவாவுக்கு பிடித்தவாளை படம் எடுத்து வைத்திருப்பார்கள். அது நடிகையாக கூட இருக்கும். அதே போலதான் எனக்கு பிடித்த பொம்மனாட்டிகளை படம் பிடித்து வைத்திருந்தேன். இதெல்லாம் குற்றமென்னு சொன்னால் எப்படி? அவாளை யாருன்னு காட்டி கொடுக்கமாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார்.காட்டி வருகின்றனர்.அவரிடம் உரிய முறையில் விசாரித்து உண்மையை வெளிகொண்டு வரும் முயற்சியில் போலீசார் தீவிரம்
நன்றி- மாலைமலர்
இவ்வளவு நடந்த பின்னாடியும் தேவநாத சுவாமிகளை சங்கராச்சாரியர் ஆக்கலையினா சரியா இருக்காது சொல்லிபுட்டேன்.....

Nov 30, 2009

கருப்பு சட்டை போடக்கூடாது....


என்னடா! திடிரென்று இப்படி சொல்றானு பாக்கறிங்களா? அது இன்னும் 2 மாத்துக்கு மட்டும் தான்,கருப்பு சட்டையை போட்டுட்டு வெளிய போனால் சாமி மலைக்கு எப்ப? இதே கேள்வி தான்.

எனக்கு தெரிஞ்ச ஓட்டுநர் ஒருவர் மாலை போட்டுடார் அந்தாளு சொன்னத கேளுங்க '''சாமி ரோட்டில லாரிசாமி ஓட்டிட்டு வந்தப்ப ஒரு நாய்சாமி குறுக்க வந்துடுச்சு நான் மட்டும் பிரேக்சாமியை போடாம இருந்திருந்தா?'''மயக்கம் வர்றதொன்னுதான் பாக்கி கட்டுன பொண்டாட்டி பெத்த புள்ளயிலிருந்து எல்லாமே சாமிதான்...

இது போதாதுன்னு இப்படியெல்லாம பேசினா அய்யப்பன் உங்களை தண்டிச்சுடுவான் அப்படின்னு ஒர் கூட்டம்.

நமக்கு ஒரு யோசணை மலைக்கு போற வண்டியுல ஒரே ஒரு தட்டி வாசகம் தமிழிலும் மலையாளத்திலும் வச்சட்டு மலைக்கு போயிட்டு வர்ற (ஆ)சாமிகளுக்கு பாராட்டு விழா வச்சு பணமுடிப்பு வழங்கலாம் என்று முடிவு செய்துள்ளோம்.

என்ன சாமிகளா ரெடியா?
தட்டி வாசகம் இதோ '''கேரள அரசே!! உச்ச நீதி மன்ற ஆணையை ஏற்று முல்லை பெரியார் அனையின் நீர் மட்டத்தை உயர்த்து''''உயிரோட வந்த அடுத்த வருடம் சேர்ந்து மாலை போடலாம் சாமியோவ்வ்வ்வ்.....

அய்யப் ''பா''

நெடுஞ்சாலை பயணம்
அய்யப்பா! அய்யப்பா!
விபத்து
அய்யோ!!அப்பா!! அய்யோ!!அப்பா!!

பதினெட்டு படியேறி
குழியில்...

பம்பையில்
குளியல்
பன்றி காய்ச்சல்...

வரும் ஆண்டில்
அய்யப்பன்-டாசுமார்க்
புரிந்துணர்வு ஒப்பந்தம்...

இன்னும்
புலி பால் கறக்க
கேரளத்து பட்டிகள்...

பம்பையில்
முழ்கி எழுந்த
குடுமையில் பீய்...

(சாமியோவ் 2 படத்துக்கும் சம்பந்தமில்லீங்கோ...)
Posted by Picasa

Nov 29, 2009

சூலூர் முன்பதிவு நிதியளிப்பு....

 

 இன்று காலை 11 மணியளவில் சூலூர் கலங்கல் பாதை தோழர்.வே.ஆனைமுத்து அவைக்கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியார் சிந்தனைகள் 2 ம் பதிப்பிற்கான முன் பதிவு தொகையை தோழர்.வே.ஆனைமுத்து அவர்களிடம் அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல் தவணையாக 121 முன் பதிவிற்கான ரூபாய் 4,23,500 அய்யாவிடம் வழங்கப்பட்டது .200 முன்பதிவு என்று முடிவு செய்தது இன்னும் அதிகமாகலாம் என தோழர்கள் நம்பிக்கை தெரிவித்தனர் விழாவில் பாவேந்தர் பேரவை தோழர்களும் தமிழ் உணர்வளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Posted by Picasa

Nov 28, 2009

மன்மத பார்ப்பான்....

 


காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் கருவறைக்குள்ளேயே பெண் களுடன் சல்லாபம் புரிந்து.. அதை செல்போனிலும் படம் பிடித்த மன்மத குருக்கள் தேவநாதன் போலீஸில் சர ணடைந்து கம்பிஎண்ணிக்கொண்டிருக்க... அவன் லீலைகள் உலகெங்கும் செல்ஃபோனில் டாப் 1-ஆக போய்க்கொண்டி ருக்கிறது. இந்த நிலையில்...
நாம் தேவநாதனின் மன்மத விவ காரங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கினோம்.காஞ்சிபுரம் அருகே இருக்கும் தேவநாதனின் ஊரான பழைய சீவரம் கிராமத்தில் ஆஜரானோம். அங்கு அவனது பால்யகால அக்ரஹார நண்பர்களிடம் தேவநாதன் பற்றி நாம் விசாரித்தபோது...’""சின்ன வயசிலிருந்தே பிள்ளையாண்டா னின் நடத்தை சரியில்லை. நாங்க ஸ்கூல்ல படிக்கிறச்சே... அவன் தன்னோட பாட புஸ்தகத்துக் குள்ள கிளுகிளுப்பான லேடீஸ் படங்களை ஒளிச்சி வச்சி, ரசிச்சிண்டு இருப்பான். வயசுப் பையனா வளர்ந் ததும் ஏகக் கெட்டபேரை சம்பாதிச்சான். யாரும் இவனுக்குப் பெண்தர முன்வரலை. அப்புறம் அப்பா அம்மா இல்லாத அப்பாவிப் பொண்ணு கங்கா தலையில் இவ னைக் கட்டிவச்சிட்டாங்க. அவனுக்கு ஐஸ்வர்யா, சாருன்னு ரெண்டு பெண்பிள்ளைகள் இருந்தும்... பய திருந்தலை. கோயிலுக்கு வரும் பொம்பளைகளை மயக்கி... கோயில் கருவறையிலேயே சல்லாபிச்சும் பெட்ரூமில் சல்லாபிச்சும்.. அந்தக் கண்றாவிகளை அவனே தன் செல் போன்ல படமா எடுத்து வச்சிண்டிருந் திருக்கான்னா.... அவன் எப்படிப் பட்டவன்னு பாருங்கோ''’என்றார்கள் எரிச்சலாக.
தேவநாதனின் கிளுகிளு படங்கள் வெளியே வந்தது எப்படி தெரியுமா? தன் செல்போன் ஹேங் ஆக...அதில் இருந்த லீலைக் காட்சிகளை அழித்துவிட்டு... செல்போனை அங்குள்ள ‘பாலாஜி டெலிகாம் சர்வீசஸசில் தேவநாதன் ரிப் பேருக்குக் கொடுக்க... அவனது புத்தியை அறிந்திருந்த கடைக்காரர்... அந்த செல்போனின் பேரண்ட்ஸ் டாக்குமெண்ட்டு களைத் தேடியிருக்கிறார். அப்போதுதான் குருக்கள் அழித்த படங்கள் கிடைத்திருக் கிறது. இதைக்கண்டு ஷாக்கான கடைக் காரர்... தான் பெற்ற இன்பம் பிறருக்கும் கிடைக்கட்டும் என்று... தனது நண்பர் களின் செல்போன்களுக்கெல்லாம் அதை புளூ டூத்மூலம் அனுப்பி வைக்க... அது உல கம் முழுக்க பரவிவிட்டது. இதைப்பார்த்த காஞ்சிபுரவாசி ஒருவர் திகைத்துப்போய்... போலீசின் கவனத்துக்குக் கொண்டு போக... அந்த வீடியோ காட்சி களைக் கைப்பற்றிய போலீஸ்... அதில் ஆறெழு பெண்களுடன் தேவநாதன் லீலைகள் நடத்திய தைக் கண்டு ஷாக்காகி... மத உணர்வைப் புண்படுத்தியதாக 295-ஏ சட்டப் பிரிவின்படி தேவ நாதன் மீது வழக்கைப் பதிவு செய் தது. இதையறிந்த தேவநாதன்... தன் மனைவி பிள்ளைகளுடன் எஸ் கேப் ஆகிவிட்டான். இந்த நிலையில் காக்கிகளுக்கு இன்னொரு தகவல் கிடைத்தது.
2008-ல் மச்சேஸ்வரர் கோயில் நிர்வாகத் தரப்பைச் சேர்ந்த வடிவேல் முதலியாரும் ராஜகோபால் முதலியாரும் கோயில் கருவறையி லேயே சில்மிஷ விவகாரங்கள் நடப்ப தாகக் கேள்விப்பட்டு தேவநாதனைக் கண்டிக்க... அவர்களிடம் "நான் உயர்ந்த குலத்தில் பிறந்தவன். என் விவகாரத்தில் நீங்கள் தலையிட் டால்... அழிச்சிடுவேன் அழிச்சி'’என்று மிரட்டினானாம். இதை அறிந்த காக்கிகள் உபரியாக மேற்படி கோயில் நிர்வாகத் தரப்பினரிடம் புகார் வாங்கி... சாதிப் பிரச்சினையைத் தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற குற்றங்களின் பேரிலும் அவன் மீது வழக்கைப் பதிவு செய்தனர்.
இது குறித்து விசாரிக்கப்போன காக்கிகளிடம் தேவநாதனின் அப்பா சுப்பிரமணிய குருக்கள் தகராறு செய்ய... பணிசெய்யவிடாமல் தடுத்ததாக அவரைக் கைது செய்தனர். அதேபோல் அவனது சகலை ரமணி குருக்களையும் தகராறு செய்ததாக உள்ளே தள்ளினார்கள். இதைக் கண்டு பீதியான தேவநாதனும் அவனது உறவினர்கள் 13 பேரும் முன் ஜாமீன் கேட்டு உயர்நீதி மன்றத்தை நோக்கி ஓட... தேவநாதனின் ஜாமீன் மனுவை மட்டும் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.இதற்கிடையே மனம் வெறுத்துப்போய் தற் கொலைக்கு முயன்ற தேவநாதனின் மனைவி கங்காவைக் காப்பாற்றி அவரது உறவினரான மணி குருக்கள் வீட்டில் சிலர் தங்கவைக்க... இதை ஸ்மெல்செய்த காக்கிகள், கங்காவை மடக்கி அவர் மூலமே தேவநாதனை தொடர்புகொண்டனர். இனி தப்ப முடியாது என புரிந்து கொண்ட தேவநாதன்... பிராமண சங்கத்தினர் பாதுகாப்போடு காஞ்சியில் சரணடைந்தான்.அவனை புழல் சிறையில் நாம் சந்தித்தபோது “""என் மீது ஒரு சாதாரண வழக்கைப்போட்ட போலீஸ்... பின்னர் தீவிரமான வழக்குகளைப் போட்டிருக்கிறது. என் உறவினர்கள் மீதும் பொய் வழக்கு போட்டிருக்கிறது. வேறு என்ன சொல்ல...'' என்றான் சோகமாக.
தேவநாதனின் ஆபாச வீடியோ காட்சிகளில் இடம்பிடித்த பெண்களை லோக்கல் நண்பர்கள் உதவியுடன் தேடிய நாம்... சிலரை அடையாளம் கண்டு சந்தித்தோம். அவர்களில் சத்யவானோடு தொடர் புடைய அந்த இளம் குடும்பத்தலைவி ""நான் கோயி லுக்குப் போகும்போது அந்த குருக்கள் இதமா பேசுவார். உன் குடும்ப கஷ்டம் தீர... உன்னைக் கரு வறைக்குள் தரிசனம் பண்ண வைக்கிறேன்னு ஒரு நாள் மதிய நேரத்தில் கருவறைக்குள் கூட்டிட்டுப் போனார். அப்ப சிவலிங்கத்தைக் காட்டி... இந்த சிம்பல் என்ன தெரியுமா?ன்னு சொல்லி வெட்கப்பட வச்சார். அப்புறம் அவர் என்னைக் கட்டிப்பிடிக்க.. என்னை விடுங்கோன்னு நான் சத்தம் போட்டேன். யாரும் அங்க இல்லாததை சாதகமாக்கிக்கிட்டு என்னை தொட்டுட்டார். அப்புறம் அந்த பழக்கம் தொடர ஆரம் பிச்சிது. அந்த நேரத்திலும் அவர் கையில் செல்போன் வச்சிருப்பார். ஆனா அதில் கேமராவெல்லாம் இருக்கும்னு எனக்குத் தெரியாமப்போச்சு. இவரால் அவமானம் தாங்கலை''’என்றாள் கண்ணீருடன்.
அந்த மூன்றெழுத்து பெயர் கொண்ட பூக்காரப் பெண்ணோ
""அந்தக் கோயிலுக்கு பூக்கொடுக்கும் நான்... மதிய வேளைகளில் கோயில் மண்டபத்திலேயே உட்கார்ந்து சாயந்தர வியாபாரத்துக்காகப் பூ கட்டுவேன். ஒரு நாள் மதியம் என்னை அழைத்த குருக்கள்... இன்னைக்கு உன் கையாலேயே மூலவ ருக்கு பூ சார்த்துன்னு கூப்பிட்டார். இப்படி ஒரு வாய்ப் பான்னு சந்தோஷப்பட்ட என்னை கருவறைக்குள் அழைச்சிக்கிட்டுப்போனார்.
பக்திப் பரவசத்தோட இருந்த என்னை... திடீர்னு கட்டிப்பிடிச்சார். நான் திமிறி.. விடுங்க சாமின்னு சத்தம் போட... கருவறையில் சல்லாபிச்சா ஆண்டவனின் அனுக்கிரகம் முழுசா கிடைக்கும்னு சொல்லியே... நினைச் சதை சாதிச்சிக்கிட்டார். அழுத என் கையில் 300 ரூபாயைக் கொடுத் தார். இதன்பிறகு அடிக்கடி இதே போல வளைச்சி... பணம் கொடுக்க ஆரம்பிச்சிட்டார். ஆனா இப்படி அசிங்கப்படுவோம்னு நான் நினைச்சிக்கூடப் பார்த்ததில் லை''’’ என்றாள் தேம்பியபடி.
இன்னொரு ஐந் தெழுத்துப் பெயர் கொண்ட குடும்பத் தலைவியோ ""என் வீட்டுக்காரருக்கு பக்தி அதிகம். அடிக்கடி எங்க வீட்டுக்கு வந்து பரிகார பூஜைகள் பண்ணி தட் சணை வாங்கிக்கிட்டுப் போவார் குருக்கள். ஒரு நாள் என்னை மதிய நேரத்தில் தனியா கோயிலுக்கு வா.. பரிகார பூஜை பண்ணணும்னு கூப்பிட்டார். நம்பிப் போன என்னை கருவறைக்குள் கூப்பிட்டு... என்னையே பூஜை பண்ணச்சொன்னார்.அந்த சந்தோஷத்தில் இருந்த என்னை.. அங்கங்கே தொட்டு சில்மிஷம் பண்ணி... இப்படி அசிங்கப்படுத்திட்டார். நியாயம் கேட்டதுக்கு என்னை மன்னிச்சிடு என் வீட்டுக்காரிக்கு உடம்பு சரியில்லை. அவளால சந்தோஷம் தரமுடியலை. அதனால்தான் இப்படி பண் ணிட்டேன். மன்னிச்சிடுன் னார்''’என்றபடி அழுதாள்.இதற்கு மேலும் பாதிக் கப்பட்ட பெண்களைத் தேடிப்பிடிக்க விருப்பமின்றி... தேவநாத குருக்களின் மனைவி கங்காவை அவரது வழக்கறிஞர் தேசாய் உதவியோடு சந்தித்தோம். ""உங்க கணவர் இப்படி லீலைகள் பண்ணி யதை நீங்க ஏன் தடுக்கலை?'' என்றோம். கங்காவோ
""எனக்கு எதுவுமே புரியலை. நான் குத்துக்கல்லாட்டம் இருக்கேன். எனக்கு என்ன கேடு. அவருக்கு எந்தக் குறையும் நான் வைக்கலை. இருந்தும் வீட்டில் ராமரா இருந்த என் கணவர் பத்தி இப்ப வர்ற தகவல்களை இன்னும் என்னால நம்ப முடியலைங்க. ஆனா முதல்ல சாதாரண கேஸைப் போட்டுட்டு அப்புறம் புதுசு புதுசா போலீஸ் பெரிய வழக்குகளைப் போட்டிருக்கு. அதனால் இதெல்லாம் பொய்வழக்குன்னு தோணுது''’என்றார் அதிர்ச்சியிலிருந்தும் சங்கடத்திலிருந்தும் மீளாதவராய்.குருக்களின் ஆபாச லீலைகளை சி.டி.போட்டு விற்றதாக செல்போன் ரிப்பேர் கடை நடத்திய பாலாஜி யையும் செந்திலையும் கைது செய்திருக்கிறது போலீஸ்.டி.எஸ்.பி. சமுத்திரக்கனியோ, ""அந்த கிரிமினல் குருக்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தராமல் ஓயமாட்டோம்''’என்கிறார் மீசையை முறுக்கியபடியே.
காஞ்சிபுரவாசிகளோ, ""அந்த மச்சேஸ்வரர் கோயிலுக்கு தன் கையால் கும்பாபிஷேகத்தைச் செய்தது... சங்கராச்சாரியார். அப்படியிருக்க... அந்தக் கோயிலைப்பத்தி எப்படி நல்ல விஷயங்கள் வரமுடியும்?''’என்கிறார்கள் நக்கலாய். தேவநாத குருக்களைப் போன்றவர்களால்தான்... ஆன்மீகம் அழுக்காகிக்கொண்டிருக்கிறது.
நன்றி-நக்கிரன் 25-11.09

அப்படியே நம்ம பங்குக்கு.....
நம் கேள்வியெல்லாம் கல் சுமந்து கோவில் கட்டிய நம் சொந்தங்களை சூத்திரன் உள்ளே வராதே என்று சொல்லும் பார்ப்பனர்களை இல்லடா அம்பிகளா! சூத்ராள் கருவறைக்குள் வரலாம். மாமிகள் வீட்டில் இல்லையில்லை ஆத்தில் சூத்ராள் பொம்மனாட்டிகள் ஆபிசில்(கருவறை) என புது மனு தர்மத்தை எழுதியுள்ள தேவநாதனைஅடுத்த சங்கராச்சாரியாராக்க திருவாளர் சோ,இராம கோபாலன்,இல.கணேசன்,எசு.வி.சேகர் ஆகியோர் சங்கர மடத்துக்கு சிபாரிசு செய்ய வேண்டுகிறோம்.என்னப்பா அங்க சத்தம் என்னது இந்துக்கள் மணம் புண்பட்டுச்சா! அதுக்கென்ன பேசா ஒரு கோமம் பண்ணிட்டா போச்சு.....

கொஞ்ச(ம்) கவிதை....


கோவிலுக்கு போகனும்
அர்ச்சணை சீட்டோடு
ஆணுறையும் வாங்கி வா...

யாருமில்லை வா
அது வெறும் கல்....

வடக்கு கோபுர சிலை
இப்படியா!!!-ச்சீசீசீ

இது தாண்டா
ஆ(கா)ம விதி....

மச்சமும் பார்ப்பான்
மச்சேஸ்வரர்..
Posted by Picasa

Nov 26, 2009

மாவீரர் நாள் 2009....

 உங்கள் உடலை
மண் தின்கிறது-நாங்கள்
மண்ணை தின்கிறோம்..
மண்னுக்காய்.....

சிங்கள நாயே
எங்கள் கல்லறைகளை
நோண்டாதே !
உயிர்த்தெழுவோம்....

உங்க ஊர்வழியில்
கழிவறை....
எங்க ஊர்வழியில்
கல்லறை...

தலைவருடன்
இறுதி விருந்து
செரித்தது...
கல்லறையில்....

என் மீதூறும்
மண் புழுவே-போ!!
சிங்களவன் காலை குதறு....

நாங்கள்
விதைக்கப்பட்டிருக்கிறோம்
எம் மண்னை
மிதித்த சிங்களவனுக்கு
கன்னி வெடிகளாய்....


எம் மண்ணிலிருந்து
இனி
அகற்ற முடியாது...
Posted by Picasa

தம்பியின் கவிதை

 


நாம் அணிவகுத்துள்ளோம்....
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
நாம் அணிவகுத்துள்ளோம்
இழந்த எமது நாட்டை மீட்க
எதிரி எமது நாட்டைவஞ்சகமாக அபகரித்துவிட்டான்!
அதைக்கண்டு நாம் அஞ்சவில்லை!
புயலெனச் சீறிஇழந்த நாட்டை மீட்க
நாம் அணிவகுத்துள்ளோம்
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது படையணி கடக்க வேண்டியது
நெருப்பாறென்பது எமக்குத் தெரியும்!
ஆனால்...அதைத் தாங்கக் கூடிய
மக்கள் ஆதரவென்னும்கவசம் எம்மிடம் உண்டு!
எதிரியின் ஆயுதமோ பலம் பொருந்தியது!
எமதுஆத்ம பலமோ அதைவிடவலிமைவாய்ந்தது!
எதிரியின் குண்டுகள் வெடிக்கும்...
ஆனால்எமது விடுதலை நெஞ்சங்கள்
எரிமலையென வெடிக்கும் சத்தத்தில்
அதன் சத்தம் அமுங்கிவிடும்!
நாம் அணிவகுத்துள்ளோம்....
நாம் தமிழ் ஈழப் படைவீரர்கள்!
எமது அணிவகுப்புஎமது
தமிழ்ஈழ மக்களிடையேஅணிவகுத்துச் செல்கிறது!
நாம் செல்லும் இடமெல்லாம்...
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்!
மக்களிடம் உள்ளபிரதேசம்
சாதிமதமென்னும் பேய்களும்அலறி ஓடுகின்றன...
எமது படையணி விரைகிறது...
எம தேசத்தை மீட்க!
நாம் செல்லும் இடமெல்லாம்...
காடுகள் கழனிகள் ஆகின்றன!
வெட்டிப் பேச்சு வீரர்கள்மிரண்டோடுகின்றனர்...!
உழைப்போர் முகங்களில்உவகை தெரிகிறது.
ஏழைகள் முகங்களில்புன்னகை உதயமாகிறது.
(தமிழீழ தேசியத் தலைவர்திரு.வே. பிரபாகரன் அவர்களால்1981 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட கவிதை
Posted by Picasa

Nov 11, 2009

தமிழ் மீனவன்...

 மீனவர்கள் நிலை பற்றி ஆவணப்படம் எடுப்பதாகவும் அதற்கு ஒரு பாடல் வேண்டுமெனவும் தோழர் கேட்க அதற்காய் தயார் செய்த பாடல் இதோ...

பல்லவி.

புயலு வந்து கொன்னதெல்லாம்
பழைய சேதிங்க..சிங்கள
பயலு வந்து அடிக்கிறானே
என்ன நியாயங்க ?சொல்லுங்க
என்ன நியாயங்க ?

சரணம் 1

முள்ளில்லா மீனு வாங்க
கடைக்கு போறீங்க-நாங்க
நெஞ்சமெல்லாம் முள்ளாக
நிக்கிறோமுங்க ஆமா..
நிக்கிறோமுங்க...

வலவீசி வலவீசி
தேடிப்போனேமே..
வலயெல்லா மீனாக
நாங்கெல்லா பிணமாக
கெடக்குறோமுங்க....

சரணம் 2

புடிச்சு வந்த மீனுக்கிங்க
துணியில்லீங்க..
புடிக்க போன எங்களுக்கும்
துணியில்லீங்க..ஆமா
துணியில்லீங்க....
அம்மணமா நிக்க வச்சு
அழகு பாக்குறான்-சிங்களவன்
அளந்து பாக்குறான்-தமிழனை
அளந்து பாக்குறான்....

கட்டிவச்ச பாலமொன்னு
முழுகி போச்சாமே ?
கட்டுகதை நல்லத்தா
அவுத்து விட்டிங்க
எல்லைக்கோடு மட்டும்
நீங்க போட்டு வையுங்க...
கடலுல போட்டு வையுங்க...
அழுத்தமா போட்டு வையுங்க..

Nov 10, 2009

பசிஇஇஇஇஇ

 புலி பசித்தாலும்
புல்லை திண்னாது..
போதும் நிறுத்துங்கடா!!
புல்லாவது...
Posted by Picasa

தமிழரசன்,பாரதி விடுதலை...

 

 


கோவை சிறையிலிருந்து இன்று மாலை 7 மணியளவில் தேசிய கொடி எரிப்பு வழக்கிலிருந்து உச்சநீதிமன்ற பிணையில் வெளியான தோழர்கள் பா.தமிழரசன்(த.தே.போ.க),வே.பாரதி(த.தே.வி.இ) ஆகியோருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதில் பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை.கு.இராமகிருட்டிணன்,த.தே.வி.இயக்க தலைவர் தோழர்.தியாகு,த.தே.பொ.கட்சி பொதுச்செயலாளர் தோழர்.மணியரசன் மற்றும் அவ்வியக்கங்களை சார்ந்ந தோழர்கள்,பி.யு.சி.எல்,மற்றும் பல முற்போக்கு அமைப்புகளை சார்ந்த தோழர்கள் உட்பட்ட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

எவ்வளவு காலங்கள் சிறையில் அடைத்தாலும் தேசிய கொடியை ஏற்ற மாட்டோம் என்ற தோழர்களின் உறுதியை அனைவரும் பாராட்ட,தோழர்கள் மற்றும் குடும்பத்தாருடன் தமிழரசனும்,பாரதியும் வீடு நோக்கி புறப்பட்டார்கள் அடுத்த கட்ட போரட்டத்துக்கும்,சிறைக்கும் அஞ்சோம் எனக்கூறியவாறே...
Posted by Picasa

Nov 8, 2009

தேசியம்....

 


கோவையில் இலங்கை தமிழர்களை பாதுகாக்கத்தவறிய மத்திய அரசை கண்டித்து தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்தேச பொதுவுடமைக்கட்சி உள்ளிட்ட தமிழ் இயக்கங்கள் மே-24 ஆம் தேதி கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தின.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 8 பேர் இந்தியக் கொடியை தீ வைத்து எரிக்க முயன்றதாக கூறி கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் 8 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 8 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.ரகுபதி கொடிகை எரிக்க முயன்ற 8 பேரும் தினமும் காலை 6 மணி முதல், மாலை 6 மணிவரை தங்கள் வீடுகளின் முன்பு தேசியக் கொடியை ஏற்றிவைக்க வேண்டும்.

ஒருவாரம் தினமும் 3 மணிநேரம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

சூன் 9 தேதி சென்னை உயர்நீதி மன்றத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனையை ஏற்று கைதான 8 பேரில் 6 பேர் விடுதலையானார்கள்,தமிழரசன்,பாரதி ஆகிய 2 இளைஞர்கள் மட்டும் சிறையிலேயே இருந்து கொண்டு ஜாமீன் நிபந்தனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள்..

நாங்கள் இரானுவ வாகனத்தாக்குதலில் சிறையில் இருந்த நேரம் அப்போது.கைதான இருவர் சகோதரர்கள்(தமிழரசன்,சங்கர்)இதில் சங்கர் வெளியே சென்று விட்டார்,நான் தமிழரசனிடம் கேட்டேன் 'தோழர்! சங்கர் கொடியேற்றும் போது நிங்களும் வெளியே செல்லலாமே? 'இருவரும் ஒரே வீட்டில்தானே உள்ளீர்கள்!எனக் கேட்டதற்கு மாநாட்டு பணி காரணமாகவே சங்கர் வெளியே செல்கிறார்,நாங்களும் சென்று விட்டால் அவர்கள் விதித்த நிபந்தனை சரி என்றாகி விடும்.எத்துனை நாட்கள் ஆனாலும் சிறையில் இருந்தே வழக்கை சந்திப்போம்.

தோழர்களின் உறுதி வெற்றி பெற்றுள்ளது நவம்பர் 3 ல் உச்சநீதிமன்றம் அந்நிபந்தனைகள் சட்டத்திற்குற்பட்டது இல்லையெனவும் இனி இது மாதிரியான முன்மாதிரிகளை எந்த வழக்குக்கும் கொள்ளக்கூடாதெனவும் கூறியுள்ளது..

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு
http://courtnic.nic.in/supremecourt/temp/6138200923112009p.txt

நமமளுக்கு சட்டம் எல்லாம் தெரியாதுங்க ஆனா கெஞ்சம் நியாயம் தெரியுங்க..தேசிய கொடிய எரிக்க நாட்டின் குடிமக்கள் முயற்சி செய்கிறார்கள் என்றால், .அதற்கான காரணத்தை கண்டு அதை களையாமல்,ஏதோ நாட்டுபபற்றை ஊட்டுகிறேன் என இம்மாதிரி நிபந்தணை விதித்தால்,உருவ பொம்மையை எரித்தால் எரிக்கப்பட்டவர்களை குளிப்பாட்டி விட வேண்டும் என நிபந்தனை விதிப்பார்கள் என எதிர்பார்த்து பயபுள்ளைகள் அசின்,நயன்தாரா,திரிசா உருவ பொம்மையை எரிக்கப்போறானுக சாக்கிரதை...

குறிப்பு- ஆறு மாத கால சிறைவாசத்திற்கு பின் தோழர்கள் தமிழரசன்,பாரதி ஆகியோர் வரும் செவ்வாய் மாலை கோவை சிறையிலிருந்துவெளிவர உள்ளார்கள் வாய்ப்பிருக்கும் தோழர்கள் வரவேற்க வரவும்,தேதி நேரம் உறுதி செய்ய தோழர்.சங்கர்-9865555275..
Posted by Picasa

யார் ஆசுகார் நாயகன் ?

 

 


நேற்று நம்ம கைப்பேசிக்கு வந்தது அந்த குறுந்செய்தி.கலைஞானி கமல்காசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அனுப்பினது அட! நம்ம கமல்தாசன் சரி ஒரு போனப்போடுவோமுன்னு கூப்பிட்டு,தம்பி எங்கப்பா இருக்கினு கேட்டேன்.
அந்த கிறுக்குபய புள்ள இந்த மழைகாலத்துல ஊருக்குள்ள கட்டி முடிக்காத கட்டிடத்தின் மொட்டை மாடியிலிருந்து எல்லோருக்கும் செய்தி அனுப்பிட்டிருக்கான்.

இவன் எப்பவுமே இப்படித்தானுங்க, போன வருடம் எங்காளுக்கு பொறந்த நாளுன்னு சொல்லி பால்காரன்,பேப்பர்காரன்,தபால்காரன்,கொசு மருந்தடிக்கரவன் இப்படி பல வேடத்தில வந்து வாழ்த்து சொன்னான்,சித்தி சத்தம் போட்ட பின்னடிதான் நிறுத்தினான்.

வாப்பா,கமல்தாசா!என்ன உங்காளு பிறந்த நாள் அமர்க்களப்படுத்தற,நீட்டிய கேக்கை வாங்கிய படி கேட்க...

ஆமண்னே! எங்க உலக நாயகன்,காதல் இளவரசன்,கலைஞானி,ஆசுகார் நாயகன்னா சும்மாவா?

ஏய்!நிறுத்து எல்லாம் சரி,கடைசியில அதென்ன ஆசுகர் நாயகன் உங்காளு இவ்வளவு நாளா பிலிம் காட்டுனா பரவாயில்ல,அதுதான் தமிழ்நாட்டிலிருந்து ஏ.ஆர்.ரகுமான் வாங்கிட்டாரே! சும்மா இதையே சொல்லிட்டு...

ஏன்? எங்களுக்கு ஆசுகார் கிடைக்காதா? அப்படி ஒருவேளை கிடைக்கலைன்னா அது அந்த விருதுக்குத்தான் இழப்பு....

அடேய்! புல்லரிக்குதுடா!ஆசுகாரு தானே இந்த தசாவதாரம் தயாரிப்பாளர் கூட ஒன்னு வச்சிருக்கார் வாங்கிக்க சொல்லு..

அண்னே! உங்களுக்கெல்லாம் கிண்டலே பொழப்பா போச்சு,நாங்களும் வாங்குவோம்,அப்புறம் பாருங்க..

தம்பி,உங்காளு ஆசுகார் வாங்கனும்முன்னா,அவரு நடிச்ச படத்திலேயே எனக்கு பிடிச்ச படமொன்னு இருக்கு அதே மாதிரி இனிமே நடிக்க சொல்லு எனச் சொல்லியவாறே கேக் கொடுத்த பையன சும்மா அனுப்ப கூடாதுன்னு.
இந்தாப்பா!உங்காளு பிறந்தநாளுக்கு உனக்கென் அன்புப்பரிசு சொல்லி இந்த வார தமிழக அரசியல் இதழைத்தர...

கொலைவெறியோடு வாங்கிக் கொண்டே கேட்டான்.ஆமா! அதென்ன படம் உங்களுக்கு பிடிச்சது...

வேறென்ன 'பேசும்படம்' தான் அது.....

Nov 4, 2009

வாழும் அயோக்கியர்கள்...

 


நம்மூர்ல இந்த கந்தசாமியும்,முனுசாமியும் மாறி மாறிபிரசிடண்ட் ஆனதிலிருந்து ஒரே அளப்பாரைதான் போங்க ஊரெல்லாம் போசுடர் மயம்.

இந்த கந்தசாமி ஆளுக எங்கண்னண் வாழும் மகாத்மானு எழுத திருப்பி முனுசாமி ஆளுக வாழும் காமராசருன்னு இதெல்லாம் போதாதுனு நம்முரு புலவன் ஒருத்தன் பஞ்சாயத்து போர்டு மெம்பர் ஆயிட்டான் உடனே அந்தாளு வாழும் வள்ளுவன்னு எழுத, நம்மளுக்கு இதையெல்லாம் பார்க்கும் போது ஒரே சந்தேகதானுங்க.....

கந்தசாமி வாழும் மகாத்மானா,காந்தி வந்து செத்துப்போன கந்தசாமியா? காமராசர் செத்துப்போன முனுசாமியா?..இதெல்லாம் போதாதுனு நிரந்தர பொதுச்செயலாளரு,நாளைய முதல்வரு இப்படி வேற தனியா கிளம்பிட்டாங்க, அட! நிரந்தர மனுசனே கிடையாது வாழும் கலைவானர்(அடங் கொக்கமக்கா நமக்கும் இந்த நோய் தொத்திகிடுச்சு) பகுத்தறிவு புயல் விவேக்(தேவருங்கோ) மாதிரி சொன்னா அட இன்னைக்கு செத்த நாளைக்கு பால்....

சரி,இப்படி கிறுக்கறதுக்கு இடமெல்லாம் கிடையாது.அப்படித்தான் அன்னைக்கு அவிநாசி ரோட்டுல பதிக்க வைத்திருந்த குடிநீர் குழாயில நாளைய முதல்வரே வருக வருக..எழுதி வைக்க அப்பறம் வேறன்ன கொஞ்ச நாள் கழிச்சு நாளைய முதல்வரை எடுத்து புதைக்க வேன்டியதுதான்....
Posted by Picasa

Nov 3, 2009

ஊரறிந்த ரகசியம்....

 


இந்த வார்த்தைகளை எப்பவாவது பார்க்கவோ படிக்கவோ நேரிட்டால் சற்று நகைச்சுவையாகவும் சிந்திக்க தோன்றும் விதமாகவும் இருக்கும். நமக்கு இந்த வார்த்தையோட வேர கண்டுபிடிக்கற சமச்சாரமெல்லாம் தெரியாது.சும்மா நம்ம அளவுக்கு பார்க்கலாம் வாங்க..

ஊரறிந்த ரகசியம்.....

சின்ன வயசா இருக்கும் போது தூர்தருசனில் போடும் சீரியல்
பேரு ஊரறிந்த ரகசியம்.ஏதோ குட்டி கதைகளை போட்டுட்டு இருந்தாங்க.இப்ப அதில்ல விடயம் அதெப்படி ஊரறிந்தா அது ரகசியமாகும் யாருக்குமே தெரியாம இல்லையில்ல யாரோ சில பேருக்குமட்டும் தெரிஞ்சத்தானே அது ரகசியம்.

அட ஆமாங்க ஊரறிஞ்ச ரகசியம் இருக்குங்க அது என்னன்னா?
இந்தியா இலங்கைக்கு ஆயுத உதவி செய்யவேயில்லை!!!!
இராசிவ் காந்தி கொலையப்ப சுப்பரமணிய சாமி பிறக்கவேயில்லை!!!!!!!
வேற எதாவது இருந்த அவுத்து விடுங்க....

உண்மைக்கதை...

எனுங்க உண்மையா இருந்தா அதெப்படிங்க கதையாகுங்க? கதையா இருந்த அதெப்படி உண்மையாகுங்க? இப்படி போட்டு ரொம்ப நாளா மண்டையை பிச்சுட்டு இருந்தப்பத்தேனுங்க..இப்பத்தானுங்க அதுக்கு விடை கிடச்சதுங்க...

அட! அது என்னன்னா?
இந்திய தமிழ் எம்.பி க்கள் இலங்கை பயணம்.....
முகாமில் உள்ள தமிழர்கள் சொந்த ஊரில் குடியேற்றம்....

இப்படியெல்லாம் போட்டு மண்டையை பிச்சுட்டு வண்டியில போய்கிட்டு இருந்தப்பத்தான் அந்த சுவரொட்டி தட்டுப்பட்டது. ஏ! வீட்டல சொல்லிட்டு வந்துட்டியானு பின்னாடி வந்தவன் சொன்ன போதுதான் சுதாரித்தேன்.அட அதென்ன சுவரொட்டின்னா!! வீரத்துறவி முழங்குகிறாராமே?...

இப்ப மறுபடியும் மண்டையை பிச்சுக்க வேண்டியதுதான்..
ஏம்ப்பா!!! எல்லாத்தையும் துறந்தவன்தான் துறவின்னு கேள்விப்பட்டிருக்கேன் அப்ப வீரமுள்ளவன் எப்படி துறவியாக முடியும்..இல்ல துறவிக்கெப்படி வீரமிருக்கும்...
யாராச்சும் பதில் சொல்லுங்களெப்பா.......
Posted by Picasa

Oct 29, 2009

விட்டாச்சு லீவு...

 


நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்துள்ளது ஆம் விடுமுறை நாட்களை தவிர்த்த வேலை நாட்களில்....

வழக்கறிஞர் தோழர் ஒருவரின் சந்திப்பின் அவர் பகிர்ந்து கொண்டவையே மேற்கூறிய வரிகளுக்கு காரணம் சரி வாருங்கள் விரிவாய் பார்ப்போம்...

நாட்டில் நடைபெறும் குற்றங்கள் எல்லாம் வாசுது புருசன் எந்திரித்து பல் துலக்குவதைப்போல் நேரம் காலம் பார்த்து நடப்பதில்லை. (என்னது வாசுது புருசன் எங்கிருந்து எந்திரிக்கறானா? அட பூமி பொண்டாட்டி மேல இருந்துதான் அடக்கண்றாவியே ஏ! யாரப்பா அது எழுத வந்த தலைப்பை மாத்திர மாதிரி கேள்வி கேட்பது)....

குற்றவாளிகளை உடனடியாக பிடித்து!!!! கொடுக்கும் காவல்துறையின் வேலை நேரம் 24+7.ஆனாபபாருங்க இந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குற நி திமன்றங்கள்(மன்னா இது சொற்குற்றமா? பொருற்குற்றமா?) வருடத்தில் எத்துனை நாட்கள் வேலை செய்கின்றன வரும் 2010 ம் ஆண்டில் நீதிமன்றங்களுக்கு 210 நாட்களே வேலை நாட்கள்..

ஆங்கிலேயன் ஆட்சி காலத்தில் அவர்களுக்காகவே எற்படுத்தப்பட்டது இந்த கோடை விடுமுறை.அவன் நாட்டை விட்டு போய் 60 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் இன்னும் இவர்கள் மட்டும் இதை விடவில்லை.நாட்டில் குற்றங்கள் பெருகி விட்ட நிலையில் வழக்குகள் தேங்கி கிடக்கும் நிலையில் நீதிமன்றங்களுக்கு கோடைவிடுமுறை மற்றும் சனிக்கிழமை விடுமுறை தேவைதானா? இதைப்பற்றி விரிவாக விவாதிப்போம் அடுத்தடுத்த தளங்களுக்கு எடுத்து செல்வோம்...

என்னது அந்த 210 நாட்களில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தை சேர்க்கலையா?? ம் ம் அது அப்படி இல்லீங்க வழக்கறிஞர்கள் நிறைய சமூக பொறுப்புள்ளவர்கள்(அதென்னவோ தெரியலை கருப்பு சட்டை போட்டாலே இப்படித்தான் போல.அதிலியும் அய்யோஅப்பனுக்கு மாலை போட்டு கேரளாவுக்கு அரிசி கடத்துறவனுகளை விட்டு விடுங்க.) ஈழப்போராட்டம் தமிழகத்தில் தீவிரமடைய அவர்கள் கொடுத்த விலைதான் அவை..அவர்களை தவிர எந்த துறையினரும் இந்தளவு ஒன்று சேர்ந்து போராடவில்லை..

ஆக, வழக்கறிஞர்களே! ஒருமுறை இதையும் சிந்தியுங்கள் தேவைப்பட்டால் சேர்ந்து போராடுவோம்.இல்லாமல் மீண்டும் பள்ளிக்கு போகலாம் பாடிக்கொண்டே சனி,கோடைவிடுமுறை,தீபாவளிக்கு சேர்ந்த மாதிரி என வரிசையாக விடுமுறை எடுத்து கொண்டே போனால்...

என்னது?! ! இராசராச சோழன் பெரிய கோவில் கட்டிய போது வாங்கிய கடன் பத்திர வழக்கு நிலுவையில் உள்ளதா?..

மனுநீதி சோழன் மகன் கொலை வழக்கில் சாட்சி ஆஐராக வில்லையா?

நேரு மீது எட்வினா பிரபு தொடர்ந்த ஈவ் டீசிங் வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வருதா?

இப்படியெல்லாம் ஆச்சரியப்பட வேண்டியிருக்கும்
Posted by Picasa

Oct 23, 2009

எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்திலே....

 அமைதிப்படை திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் வில்லனை பார்த்து நாயகன் செல்வார் உன்னையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் கொன்னுட்டா தியாகி அக்கிடுவானுக. அப்புறம் 8 ம் வகுப்பு பாடப்புத்தகத்தில எழுதி வருங்கால தலைமுறை அதைப்படிப்பாங்க..என்பார்...

இயக்குநர் தோழர்.மணிவனணின் வசனம் இப்போது நிசமாகி விட்டது...தமிழ் நாடு அரசு பாட நூல் 8 ம் வகுப்பு சமுக அறிவியல் பாடத்தில் அப்படித்தான் சிலரை தியாகி ஆக்கியுள்ளனர்..

அந்நுலில் 113 ம் பக்கத்தில் தமிழ் புதினங்களின் வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ் சமூக கருத்துக்களை மையமாக வைத்து 19 ம் நூற்றாண்டின் முக்கிய ஆசிரியர்கள் எனும் பட்டியலில் செயகாந்தன் ,டி.சானகிராமன்,நா.பார்த்தசாரதி,சுஐஐதா,வை.மு.கோதைநாயகி அம்மாள்,சிவசங்கரி,இந்துமதி,லட்சுமி,இராசம் கிருசுணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அக்கிரகாரங்களை தாண்டி புதினங்கள் வளரவேயில்லையா அதிலையும் பாருங்க நம்ம சுஐஐதா எழுதிய பாய்சு பட வசணம் சிறந்த புதினம் போங்க..8 ம் வகுப்பிலையே தெரிஞ்சுக்க வேண்டிய மா மேதைங்க இவங்கெல்லாம் நாடு விளங்கிரும் இப்ப எனக்கொரு சந்தேகம் இந்த அண்னாதுரை,கருணாநிதி,புலவர் குழந்தை, இவங்கெல்லாம் யாருங்க....

51 ம் பக்கத்தில வ.வே.சு.அய்யர் சேரன்மாதேவியில் திவிரவாதிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக குருகுலம் நடத்தினார்...வாஞ்சி நாதன் தேசபக்தி முத்திபோய் அசுதுரையை சுட்டு கொன்றார்

அப்புறம் பெரியார் துறவி போல் எளிமையாக வாழ்ந்தார்.


இந்த அபத்தமெல்லாம் இதில் உள்ளது.(இதுபற்றி நக்கீரன் கட்டுரை படிச்சு தேடுதுனது). இப்ப எனக்கிருக்கிற பயமெல்லாம் இது இன்னும் எத்துனை வகுப்புகளில் உள்ளதோ என்பதே...

படிக்கும் வயதில் விதைக்கப்படும் நச்சு மிகவும் அபாயகரமானது பாரதிய சனதா அட்சியில் இல்லையில்லை அவசர நிலையின் போதே 1 ம் வகுப்பில் சிங்கம் முழங்கும் என்ற வார்த்தையை மாற்றி சிங்கம் கர்சிக்கும் என பதிப்பதற்கு புது நூலையே கொண்டு வந்தார்கள்...

அக அசிரியர் துறையில் இருக்கும் தோழர்களே ! தயவு செய்து கவனியுங்கள், இவைகளை மாற்ற அறிவுறுத்துங்கள்...

ஐந்தில் வளையாததை இருப்பத்தைந்தில் கூட்டம் போட்டு வளைக்க முடியாது...

எனக்கு கழிவறையில் அமர்ந்திருக்கும் போது கண நேரத்தில் தோன்றிய யோசனை வரலாறு முக்கியம் மண்னா!கல்வி மத்திய தொகுப்போ,மாநில தொகுப்போ அது அக்கிரகார தொகுப்பாக மாறவிட்டால் நாளைய வரலாறு எழுதும் ஆடோட்டி வந்தவன் நாடாண்டான், நாடாண்டவர்கள் வேறன்ன ஆடுதான் ஓட்டனும் அமாவாசை.... எய் டிரியோ, டிரியோ,டிர.ியோ,ட்ட்ட்ட்டுரு....
Posted by Picasa

Oct 21, 2009

கணக்கில் புலி தமிழன்.....

நண்பர் அனுப்பியிருந்த மின்னஞ்சலை திறந்து பார்த்தால் அட போட வைக்கும் விடயம் நீங்களும் பாருங்களேன்...

1 = ONDRU -one
10 = PATHU -ten
100 = NOORU -hundred
1000 = AAYIRAM -thousand
10000 = PATTAYIRAM -ten thousand
100000 = NOORAYIRAM -hundred thousand
1000000 = PATTU NOORAYIRAM - one million
10000000 = KOODI -ten million
100000000 = ARPUTHAM -hundred million
1000000000 = NIGARPUTAM - one billion
10000000000 = KUMBAM -ten billion
100000000000 = KANAM -hundred billion
1000000000000 = KARPAM -one trillion
10000000000000 = NIKARPAM -ten trillion
100000000000000 = PATHUMAM -hundred trillion
1000000000000000 = SANGGAM -one zillion
10000000000000000 = VELLAM -ten zillion
100000000000000000 = ANNIYAM -hundred zillion
1000000000000000000 = ARTTAM -??????
10000000000000000000 = PARARTTAM --anybody know?
100000000000000000000 = POORIYAM ---??????????????
1000000000000000000000 = MUKKODI -??????????????????
10000000000000000000000 = MAHAYUGAM -?????????????????

இனி இலங்கைக்கு 500 MAHAYUGAM உதவி வழங்கலாமே...

எதற்கு சிறை...

 


கடந்த மே மாதம் நடந்த இந்திய இரானுவத்தாக்குதலில் கோவை மத்திய சிறை சென்ற போது எங்கள் மனதை பிழிந்தவர் வீரப்பனின் அண்னண் மாதையன் அவரை சிறையில் சந்தித்த போது...

அவரது வயது 81 தனது 60வது வயதில் சிறை பட்டவர் கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாக சொன்னார்..
கண் பார்வை மங்கிய நிலையில் காதும் சரியாக கேட்காது...

அய்யா! நீங்க என்ன தப்பு செஞ்சீங்க என்ற எங்களின் கேள்விக்கு 'வீரப்பன் கூடப்பொறந்தது தான் வேறென்ன' 2 பொண்னுக தம்பி எனக்கு ஒவ்வொரு மாப்பிளை மேலயும் பல வழக்குகள் இருக்கு..வக்கீல் படிப்பு முடிச்சுட்டு சென்னையில பயிற்சி எடுத்திடுத்திருந்த ஒரே பையனையும் லாரி விட்டு கொன்னுட்டாங்க..என்ற போது கண்கள் குளமாயின..

கடந்த 3 நாட்களாக விடுதலை செய்ய கோரி உண்னாநிலையில் உள்ளார்..அவருக்கு அதரவாக 21ம் தேதி மாலை பெரியார் தி.க வினர் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்...

எதற்கு ஒருவரை சிறையில் அடைக்க வேண்டுமோ அதையெல்லாம் கடந்த நிலையில் மாதையன் உள்ளார்.ஆக அவரின் மொழியிலேயே சொல்வதென்றால் 'கருணாநிதி மனசு வச்சா கடைசி காலத்துல வெளி உலகத்த பார்த்துட்டு சாவேன்'....மனசு வையுங்க முதல்வரே....
Posted by Picasa

Oct 20, 2009

பேராண்மை- சனநாதன் மேல் பொறாமை....

 


நம்மூர்ல பழமொழி சொல்வாங்க 'அறுக்க மாட்டாதவன் கையில அம்பதெட்டு அருவாளு'....

15 ஆண்டுகளுக்கு முன் ஒரு இயக்குநர் என் படத்தில் நாயகனும் நாயகியும் இறுதிக்காட்சியில் தான் பார்ப்பார்கள் எனச்சொல்ல படம் மயிரு மாதிரியிருக்கும் என சில தாயாரிப்பாளர்கள் சொல்ல இறுதியில் சிறந்த இயக்குநருக்கான இந்திய தேசிய விருதை பெற்றது அப்படம்..

ஆக முதல் பாராவை படியுங்கள் ஐந்து நாயகிகள் டூயட் பாடாத நாயகன் 'அறுக்க மாட்டாதவன் கையில அம்பதெட்டு அருவாளு'....
தமிழ் சினிமாவின் பல விதிகளை மீறியிரிக்கிறார் இயக்குநர் சனநாதன்..அட பின்ன என்னங்க எப்ப பார்த்தாலும் இதே மாதிரி படத்த தர்றதே பொழப்பா போச்சு லட்டு மாதிரி 5 நாயகிகள் 5 பாட்டு ,4 பைட்டு,சில காமெடி பல காமநெடி சீன்னு காக்டெய்ல படத்த தராம...

கோவனம் கட்டிட்டு எருமைக்கு பிரசவம் பாக்கிற நாயகன் அடுத்த சீன்ல பொதுவுடமையோ புன்ணாக்கோன்னு கிளாசு எடுக்கிறான்.ஐந்து பெண்களோட காட்டுக்குள்ள போற நாயகன் சும்மா சண்ட போட்டே காலத்த ஓட்டுறான் தப்பு தப்பு காட்டுக்குள்ள போன எப்படி படம் எடுக்கறதுன்னு காதல் கொண்டு இளமை துள்ளிய செல்வராகவன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க இயக்குநரே.....

அப்புறம் இந்திய ராக்கெட்ட தகர்க்க வர்றது உலக முதலாளிகளின் கூலிப்படையா என்ன காமெடி போங்க உங்களுக்கு அவ்வளவா அரசியல் அறிவு போதாது பளிச்சுன்னு பாகிசுதான் தாவிரவாதினு சொல்லாம...நீங்க படப்பிடிப்புக்கு முன்னடி நம்ம உள்ளூரு நாயகன் கமல் ஒரு அவதாரம படபடப்ப நடிச்ச உன்னை போல் ஒருவன் பார்க்கலைங்களா இயக்குநரே...
இப்படி படமெடுத்தா எப்படி கல்லா கட்டறது நீங்க படத்துல செஞ்ச தப்பெல்லாம் பாருங்க...

முதல்ல நாயகனை ஆதிவாசி இனத்துல பிறந்து ஒதுக்கீட்டில் படித்தவனாவா காட்றது அதுவும் அவன் உயர்சாதி கான்வென்ட் பெண்களுக்கு பயிற்சி கொடுக்கலாமா? அப்பறம் நாயகன் பேர் துருவன் என்னங்க இயக்குநரே அம்பி,ராகவன் இப்படி நல்ல பேரே கிடைக்கலையா உங்களுக்கு...
நாயகன் பேசற வசனமெல்லாம் சகிக்கல பாருங்க

பொதுவுடமை அரசியல் படிங்க பொருளாதாரம் படிங்க..

வெள்ளைக்காரன் ஊறுகாய் விக்க வந்தா கூட சந்தேகப்படனும்....

அந்த காலத்தில பெண்கள் முந்தானை எடுத்து விடவே நேரம் சரியா போச்சு இப்ப பெண்கள் முடியை ஒதுக்கவே நேரம் சரியா போகுது...

எங்க ஊர்ல நானே பிரசவம் பார்ப்பேன் நிர்வானம் எனக்கு ஒன்னுமில்லை...

அய்யோ நாங்க எங்க நாயகர்களை உலக அளவில கொண்டு போகும் போது 'வேப்ப மரத்துல எழுதி வெச்சா பணம் தர்றவனா' கருப்பு பணத்துக்கு வெள்ளை பெயின்ட் அடக்கிறவனா' துணை நடிகர்கள் நடிக்கற வேசம் உள்பட 15 வேசம் கட்டுறவனா' இப்படியெல்லாம் தமிழ் சினிமாவை துக்கி நிறுத்தும் போது 50 வருடம் பின்நோக்கி போறீங்களே சனநாதன் சாரே...
இதெல்லாம் தெரியாம ஒரு கூட்டம் எதோ நல்ல திரைப்படம் அப்படீனு செல்றாங்க கேட்டா....

பெண் மான்கள்,குயில்கள்,மயில்களை பார்த்த எங்களுக்கு பெண் புலிகளை திரையில் காட்டியுள்ளீர்களாம்...

தமிழர் வீரத்தை உலகே பார்த்தது நீங்களும் காட்டுங்கன்னு சொன்ன நாயகன் வழி எங்கள் தமபி தெரிஞ்சாராம்...

சாகும் தருவாயில் தனது விரனையே சுட்டுக்கோல்லும் கூலிப்படை ,வீரமரணமடைந்த தோழிக்கு மரியாதை செலுத்தும் தமிழ் பெண்கள் என ஈழ போரை கண் முன் காட்டியுள்ளீர்களாம்...

மூலதனம்,பொதுவுடமை என தமிழ் சினிமா பேசாததை பேசியிருக்கிறது பேராண்மை...

அராங்கத்த எதிர்த்து அரசியல் செஞ்ச இப்படித்தான் என கனபதிராம் கேரக்டர் வழியே சொல்லிய பல கருத்துகளுக்கு வெட்டு(நாங்க காட்டுல பாம்பே பார்க்கல காட்டுங்க என நாயகிகள் கேட்பதை எல்லாம் விட்டு விட்டு மற்ற முக்கிய இடங்களில் வெட்டிய வெட்டி பயல் யாரோ தெரிஞ்ச வெட்டியவனுதை வெட்டும் ஆத்திரமாம் அவங்களுக்கு)..

அப்புறம் இது எதோ ரசுய மொழி படத்தோட உல்டா அப்படினு சில விமர்சனங்கள் வருது சிறந்த 100 படங்களில் ஒன்றான நாயகனுக்கு எத்துனை நாள் முன்னாடி காட்பாதர் வந்தது..தெரியுமா ?பூணுலை கழட்டி வைச்சுட்டு பாருங்க....


வாழ்த்துகள் சனநாதன் சார் இப்படியொரு அருமையான படம் கொடுத்ததுக்கு என்னது அட ஆமாம்ப்பா இந்திய ராக்கெட்டுத்தான் ஒருமைப்பாடா அட விடுங்கப்பா இதெல்லாம் இல்லையினா பெட்டிகுள்ளேயே படம் தூங்கி விடும்...

ஓ.தமிழ் திரைப்பட இயக்குநர்களே உலக தரத்துக்கு தமிழ் சினிமாவை கொண்டு போறதா சொல்லி சிவாசி,தசாவதாரம்,கந்தசாமி மாதிரி மண்டையை பிச்சுக்க வைக்காம!!!!
தமிழ் தரத்துல நல்ல தமிழ் படங்களா சுப்பிரமணியபுரம்,பசங்க,பேராண்மை மாதிரி தாங்க!!!!!!

ஒலக தரத்த அப்பறம் பார்க்கலாம் முதல்ல உங்க தரத்த உயர்த்துங்க......
Posted by Picasa

Oct 15, 2009

ஹப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பி டெவாஆஆஆலி....

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1.ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.

2.தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.

3.விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4.ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5.அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6.அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7.தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.

8.விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி
நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான்.

9.இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10.இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான
திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10-விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

*பூமி தட்டையா? உருண்டையா?

*தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச்
சுருட்ட முடியுமா?

*எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?

*சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ, தலைமீதோ எடுத்து ஏக முடியுமா?

*எங்கிருந்து தூக்குவது?

*கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?

*விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

*அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது
காதல் ஏற்படுவானேன்?

*பூமி மனித உருவா? மிருக உருவமா?

*மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

*பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

*இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்.

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?

நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம், இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது.

இது வங்காளத்தில் அசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதைத் திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும் சொல்லுகிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத் துணி உடுத்து வதும் பட்டாசு சுடுவதும், இந்த பார்ப்பனர்கள் வந்து பார்த்து "கங்கா ஸ்நானம் ஆயிற்றா" என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டு காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்லுவது?

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லா விட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக்காலத்தில் நாம் ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதைத் தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

பெரியார்....

Oct 7, 2009

தினமலரின் மலம்...

 


தினமலம் நாளிதழில் வெளியான செய்தி இதோ..ஐதராபாத்: "நமது அரசியல்வாதிகளின் பிரபல முழக்கமான ஆரியர் - திராவிடர் கொள்கை வெறும் கட்டுக் கதையே' என்று, விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.இந்தியர்களின் மரபுவழி உண்மை குறித்து, செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் விஞ்ஞானிகள் குமாரசாமி தங்கராஜன், லால்ஜி சிங் இருவரும் ஆராய்ந்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில், இந்தியாவின் 13 மாநிலங்களைச் சேர்ந்த 132 பேர்களின் மரபணு சோதனை செய்யப் பட்டது.ஆறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள், 25 வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் உயர்வகுப்பினரும், தாழ்த் தப்பட்டவரும், பழங்குடியினரும் அடங்குவர். இவர்களின் மரபணுக்களில், ஐந்து லட்சம் மரபணு மாற் றங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவுக்குள் ஆரியர் நுழைந்து இங்குள்ள மக்களுடன் கலந்தனர் என்பதை, இந்த மரபணு மாற்றங்கள் காட்டவில்லை. மாறாக, இந்தியச் சமூகத்துக் குள்ளேயே, கலப்பு ஏற்பட் டுள்ளது என்பதைத்தான் அறுதியிட்டுக் கூறுகின்றன.
மேலும், இன்றைய ஜாதிமுறைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்த பல்வேறு இனக் குழுக்களிலிருந்து வந்தவைதான் என்றும், இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது குறித்து, விஞ்ஞானி லால்ஜிசிங் கூறுகையில்," இந்த ஆராய்ச்சி வரலாற்றை மாற்றி எழுதப் போகிறது. நமக்குள் வடக்கு - தெற்கு என்ற பிரிவினை இருந்ததில்லை என்பதை இது நிரூபித்துள்ளது,' என்றார்.விஞ்ஞானி குமாரசாமி தங்கராஜன் கூறியதாவது:
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து இங்குள்ள திராவிடர் எனப்பட்ட மக்களுடன் கலந்தனர் என்பதில் எவ்வித உண்மையும் கிடையாது. 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்தமான் மற்றும் தென் மாநிலங்களில் தான், மனித இனம் குடியேறி வாழ ஆரம்பித்தது. 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் வடபகுதி மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக ஆரம்பித்தனர். ஒரு நிலையில், தென் மாநிலங்களில் இருந்தவர்களும், வடமாநிலங்களில் இருந்தவர்களும் ஒன்றாக கலக்க ஆரம்பித்தனர்.
இதன் விளைவாக புதிய இனங்கள் உருவாகி, மக்கள் தொகை பெருகியது. இதனால் தான் இன்றைய மக்களிடையே மரபணு ரீதியில் எவ்வித வித்தியாசமும் காணப்படுவதில்லை. இந்தியச் சமூக உருவாக்கத்தின் போது, நிலவி வந்த பல்வேறு இனக் குழுக்களிடமிருந்துதான் ஜாதிகள் தோன்றின. ஜாதிகளுக் கும் பழங்குடியினருக்கும் இடை யே முறையான வேறுபாடுகள் இல்லாததால், அவர்களை வேறுபடுத்திக் காட்டுவது என்பது மிகவும் கடினமே. இவ்வாறு தங்கராஜன் தெரிவித்தார். ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்டு பொது சுகாதாரப் பள்ளி, பிராட் இன்ஸ்டிடியூட் ஆப் ஹார்வர்டு மற்றும் எம்.ஐ.டி., ஆய்வு மையங்களுடன் இணைந்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது.

உண்மை விளக்கும் விதமாக தோழர் தமிழச்சியின் கட்டுரை
http://www.tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1508

நம் கேள்வியெல்லாம்
நாங்கள் ஆராய்ச்சி வரலாற்றுக்கெல்லாம் வரவில்லை எல்லோருமே இந்நாட்டு மன்னர்கள் தான் ஆக வா வந்து மலம் அள்ளு..நாங்க பேனா பிடிக்கிறோம் டி.வி.ராமசுப்பையா எங்களுக்கும் தாத்தா தான்..

நாங்க மணியாட்டி பார்க்கிறோம் நீ வந்து திருநீறு வாங்கு..தொட்டே கொடுக்கிறோம்..

டீ கடை பெஞ்சில எங்களையும் உக்கார வை இரட்டை குவளையை உடை..

இதெல்லாம் செய்றது எங்களுகதான் ஆனா காரணம் நீ தான்...

வடக்கு தெற்கு பிரிவினையே இல்லையினா ஈழப்போராட்டத்த அங்கிகரி...

இதெல்லாம் முடியுமா இல்லையினா செய்தியை சரியா போடு

These results do not mean that the Indian groups descend from mixtures of European and Austro-Asiatic speakers, but only that they derive from at least two different groups ......

திராவிடம அரியம் எவ்வளவு அடிப்படையானது பார்த்தீங்களா.. பூணூலில் முதுகு சொரியிர பசங்க சரியா இருக்காங்க அவங்க இனத்துக்கு ஆனா செந்தமிழன்கள் வீணாப்போயிடக்குடாதுனுதான் எங்க கவலையெல்லாம்...

Oct 5, 2009

உளறல் நாயகனுக்கு பாசா கடிதம்

 


 நானும் நாத்திகன்தானுங்கோ என செல்லி கொண்டே பூணுலில் அடிக்கடி சொரிகிற உளறல் நாயகனின் சமிபத்திய உளறல் தான் உன்னைப் போல் ஒருவன், அதற்கு எதிர்வினையாக கோவை சிறையிலிருக்கும், அல்-உம்மா இயக்கத் தலைவர் பி.டி.பாஷா அவர்கள், நடிகர் கமலஹாசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவரது வழக்கறிஞர் இராகவன் மூலம் இளந்தமிழர் இயக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற அக்கடிதத்தை இளந்தமிழர் இயக்கம் வெளியிடுகின்றது

மேலும் அறிய http://suthumaathukal.blogspot.com/2009/10/blog-post_7505.html...
Posted by Picasa

அயுதம் கொடுக்கவில்லைங்கோ....

 


கட்டின பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டு தீக்குளிக்க சொன்ன உத்தமர்,வாலியை மறைந்து தாக்கிய, சராயு நதியில் விழுந்து தற்கொலை செய்த மாவீரன்,கடலுக்கடியில் பாலம் கட்டிய அதிபுத்திசாலி இராமன். அவனின் லீலாவில் தமிழ் மன்னன் இராவனின் உருவத்தை அழிக்க விடும் அம்புதான் படத்தில் பார்ப்பது.

இதையெல்லாம் புரிஞ்சுக்காம ஈழத்தமிழனை அழிக்க அயுதம் தருவதா தப்பா புரிஞ்சு போராட்டம் நடத்தினா கை மேல கோபம் வரும் புரிஞ்சுதா இளிச்சவாய தமிழர்களே....
Posted by Picasa

Oct 4, 2009

அர்ச்சகர் பயிற்சி முடித்தோரின் அவலம்!

 


தமிழக அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சி பெற்ற 207 மாணவர்களுக்கு பயிற்சி முடிந்து ஓராண்டுக்குப் பிறகும் அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட வில்லை.
இப்போது - பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ஓராண்டுக்குப் பிறகும் சான்றிதழ்கள் வழங்கப் படாதது குறித்து, அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம் கேட்டபோது, சான்றிதழ்கள் வழங்க உச்சநீதிமன்றம் தடை ஏதும் விதிக்க வில்லை. சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால்தான், பயிற்சி முடிந்தவர் களுக்கு, வேலை கிடைக்கவில்லை என்றால், இது பற்றி, விவாதித்து, முடிவெடுப்போம் என்று கூறியுள் ளார். பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது இதன் வழியாக அறநிலையத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தி யுள்ளார்.
செந்தில்குமார் என்ற தலித் இளைஞர் (வயது 24) அறநிலையத் துறை வெளியிட்ட பத்திரிகை விளம் பரத்தைப் பார்த்து கோயில்களுக்குள் நிலவும் தீண்டாமை ஒழிவதாக பெருமையுடன் கருதி, அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பித்தார். ஓராண்டு பயிற்சியையும் முடித்தார். இதற் கிடையே உச்சநீதிமன்றம் பார்ப்பன ரல்லாதாரை அர்ச்கராக நியமிக்க தடைவிதித்து விட்டது. திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயில் நிர்வாகத்தின் கீழ் இவர் வைணவ சம்பிரதாயங்களுக்கான பயிற்சியில் சேர்ந்தார். ஆனால் செயல்முறைப் பயிற்சிக்காக கோயில் கர்ப்பக்கிரகத் துக்குள் சென்று பயிற்சி எடுக்கும் நிலை வந்தபோது, தங்களை, கோயில் அர்ச்சகர்கள் கர்ப்பக்கிரகத்துக்குள் அனுமதிக்கவில்லை என்று செந்தில் குமார் கூறினார்.
“கோயிலுக்குள் நாங்கள் திவ்ய பிரபந்தம் பாடக்கூட அர்ச்சகர்கள் அனுமதிக்கவில்லை. அப்போதுதான் பார்ப்பன ஆதிக்கத்தை தகர்ப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பதைப் புரிந்து கொண்டேன்” என்று செந்தில்குமார் கூறுகிறார்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகன்று விட்டது

அர்ச்சகர்
பயிற்சி நிறைவு
வா..
மந்திரம் சொல்லியே
மலம் அள்ளு...
Posted by Picasa

Oct 1, 2009

தோழர் ஆணைமுத்து அவர்களுடன்...


தோழர் ஆணைமுத்து அவர்கள் 30.09.09 அன்று சூலூரில் அவர் பெயரால் அமைந்த அவைக்கூடத்தில் தோழர்களை சந்தித்தார்.அவரின் கடின உழைப்பின் விளைவாய் பெரியார் சிந்தணைகள் 2 ம் பதிப்பு 2010 ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிட உள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்தார்.

தோழர்கள் 200 படிகள் முன் பதிவு செய்வதாக உறுதி கூறினார்கள்.

பெரியார் மறைந்து 30 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அவரின் சிந்தணைகள் தலைப்பு வாரியாக படிநிலைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்வது நம் தலையாய கடமையாகும்..
Posted by Picasa