Feb 27, 2009

ஓ போடுங்கோ.....

வணக்கம்

வேதம் படித்த ஞாநிக்கு....

பெரியார் பேரன் எழுதும் மடல்,தமிழ்நாட்டில் எந்த திராவிட இயக்கங்களும் செய்யாத ஓன்று நீங்கள் செய்திருந்தீர்கள் நீங்கள் இயக்கிய தந்தைபெரியார் பற்றிய ஆவணப்படம் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதை, ஊர் ஊராக தூக்கி சுமந்து எங்கள் தோழர்கள் வாயிலாக பரப்பினார்கள் எல்லாம் அறிவோம்.

பிற்கெதற்கு வேதம் படித்த ஞாநி என்று எழதியிருக்கிறேன் என யேசிக்காலம், எங்கள் அய்யா சொல்லியிருக்கிறhர் ஆட்டு மூளை கூட உணக்காக சிந்திக்கும் ஆனால் ஆரிய மூளை சிந்திக்காது என அக்கூற்று இன்றும்100ஆண்டுகள் கழித்தாலும் உயிருடன் இருக்கும் என்பதற்கு உங்களை போன்றவர்களே நிகழ்கால சாட்சி……

‘சு’ப்ரமணிய பாரதியின் வாரிசுகள் நீங்கள், இதை அந்த கண்ணோட்டத்தில் பார்க்கவும் அதை இந்த கண்ணோட்டத்தில் பார்க்கனும், இவன் அப்படி, அவன் இப்படி, அப்புறம் நீங்க பேசற முற்போக்க கேட்ட நாங்கெல்லாம் தோத்தோம் போங்க…… அதுக்காக நீங்க முற்போக்கு பேச வேண்டாமுன்றுனு சொல்லலை ரொம்ப பிற்போக்குத்தனமா எழதீட்டு அதுக்கு முற்போக்கு முகமுடி போடாதீங்க….

பொதுவா உங்கள் முரன்பாடுகளை பத்தி சொன்னா இக்கட்டுரை போதாது ஆக விசயத்துக்கு வருவோம, குமுதம் இதழ்ல நீங்க எழதுற ‘ஓ’ பக்கங்கள் பகுதியில் இந்தவார கேள்வி அப்படினு ஒன்று கேட்டிங்;களே….


அதைப்பத்தி தான் பேசனும்

எனக்கு போதுவா, எப்பவுமே நீங்க கேள்வி கேட்கறப்ப ‘திருவிளையாடல்’ படம் தான் நினைவுக்கு வரும், தருமயிடம் சிவன் கேள்விகளை நீ கேட்கிறாயா ?அல்லது நான் கேட்கட்டுமா? என்றவுடன் தரும் அவரசமாக இல்லை நானே கேக்கறேன்.... எனக்கு கேட்க மட்டும ;தெரியும்என்பாரே அதுபோல தங்களுக்கு கேட்கமட்டு தான் தெரியும் என் அடிக்கடி நிருப்பித்து விடுகிறீர்கள்....

எங்கள் தோழர்களின் பார்வைக்கு உங்கள் கேள்வி...
பெரியார் திராவிடர் கழகத்தலைவரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளருமான கொளத்துர் மணி“ ராஜுவ் காந்தி கொலை செய்யப்படவில்லை. அவருக்குத் தரப்பட்டது மரண தண்டனை. உண்மையில் நாட்டுப்பற்று உள்ள இந்தியன், சமூக நீதி கோரும் பிற்படுத்தப்பட்டவன் எவனாவது ராஜுவ் காந்திக்கு மரண தண்டனை கொடுத்திருக்க வேண்டும். நாம் செய்யத்தவறியதை ஈழத்தமிழன் ஒருவன் செய்தபோது நாம் உண்மையில் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். ஏனென்றால்6000 பேரைக் கொன்ற, 1000 பெண்களை பாலியல் வல்லாங்கு செய்த இந்திய அமைதிப்படையை ஈழத்துக்கு அனுப்பியவன் ராஜுவ் காந்தி. துடிக்காதா நெஞ்சம் ? ஒரு ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம். விடுதலைப்புலிகள் செய்திருக்காவிட்டால் அது குற்றம். செய்து இருந்தால் பாராட்டுகிறேhம். இல்லையென்றால் கண்டிக்கிறேhம் என்று நாம் பேசியிருக்க வேண்டும்” என்று பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

ராஜுவ் செய்த ‘குற்ற’த்துக்காக விடுதலைப் புலிகள் மரண தண்டனை வழங்கலாம் என்றhல், அந்த ‘குற்ற’த்துக்குத் தொடர்பே இல்லாத இன்னும் இருபது பேரையும் _ஸ்ரீபெரும்புதுரில் கொன்றதற்காக விடுதலைப்புலிகளுக்கு மரண தண்டனை வழங்கலாமா ? அந்த ‘அப்பாவிகள்’ தற்செயலாக செத்தது தவிர்க்க முடியாதது என்று சொல்வீர்களா ? புலிகளுக்கும் ராஜபக்ஷே அரசுக்கும் நடக்கும் போhpல் இடையில் சில அப்பாவித் தமிழர்கள் சாவது தவிர்க்கமுடியாதது என்று ஜெயலலிதா செர்னனதைப் போன்றதுதானே அது ?

குற்றத்துக்கு மரண தண்டனை வழங்குவது சரியென்றால், இந்திய சட்டப்படி குற்றவாளிகளான ராஜுவ் கொலையாளிகளுக்கு விதித்த மரண தண்டனைக்கு எதிராக ஏன் கையெழுத்து இயக்கம் நடத்தினீர்கள் ? ஏன் கருணை மனுக்களை ஆதரிக்கிறீர்கள் ? சில மரண தண்டனைகள் மட்டும் நியாயமானவை ; மற்றவை இருக்கலாம் என்பதுதான் மனித நேயக் கையெழுத்து இயக்கமா ?

முதலில் இவ்வளவு தெளிவாக குட்டையை குழப்பி இருப்பதுக்கு என்னுடைய நன்றி.

நீங்கள் குறிப்பிட்ட தோழர் கொளத்தூர் மணியின் பேச்சு பெரியார் திரவிடர் கழகம் சென்னை சார்பில் m.g.r நகரில் நடத்திய முத்துக்குமார் வீர வணக்க நிகழ்ச்சியில் பேசியது, பொது வாகவே பொதுக்கூட்டங்களில் பேசும் போது வீர அவேசாமாகவே அல்லது உணர்ச்சி வசப்பட்ட நிலையிலே பேசுபவர் அல்ல எங்கள் தோழர் மணி, தான் பேசும் ஒவ்வொரு சொல்லும் மிகச்சரியான ஆதராங்களோடும், ஆய்வுகளோடும் மற்றும் தன் இன நலனுக்காகவும் எப்போதும் பேசுவார். ஆக போகிற போக்கில் காத்து வாக்கில் கேட்டுவிட்டு என்கிட்டேயும் பேனா இருக்குதுனு கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது.

ஞானி, நீங்கள் இக்கேள்வியில் சுட்டிகாட்டாத ஒன்று எப்போதுமே ஈழப்பிரச்சனை பற்றி பேசும்போது நாங்கள் ராஜிவ் கொலையைப்பற்றி பேச மாட்டோம் அதற்கான அவசியமும் எங்களுக்கில்லை ஆனால் இங்குள்ள மக்கள் எழுச்சியை அடக்கும் விதமாக இந்த வோட்டு பொறுக்கிகள் கூறும் குற்றச்சாட்டு ராஜிவ் கொலை. எங்களுக்கோர் சந்தேகம் பொதுவா ஊர்ல யாரவது செத்த 2 வது நாளில் பொதைத்து விடுவோம், மகள் வெளிநாட்டுல பொறுக்க போயிருந்த 3,4 நாள்ல அதிகபட்சமா பொதைத்து விடுவோம், ஆனா இந்த அல்ல‘கை’கள் 18 வருசமா பொதைக்கம அப்பப்ப நாற வைக்கிறhங்க..

அதைத்தான் கூட்டத்தில் ஆரம்பத்திலேயே மணி அவர்கள் - “மறக்கமாட்டோம், மன்னிக்க மாட்டோம் என காங்கிரசால் ஏற்படுத்தபட்ட புண் சீழ் பிடித்து விட்டது, நின்றhல் நடந்தால் வலிக்கிறது ஆக அதை கீற வேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டுள்ளது” என்கிறார் ஆக நாங்கள் ராஜிவ் கொலை பற்றி பேச வேண்டி இருந்தது.

தோழர் மணி அவர்கள் தன் உரையில் ராஜிவ் கொலை செய்யப்படவில்லை அவருக்கு தரப்பட்டது மரண தண்டனை என்பதோடு நின்றுவிடாமல் அத்தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டியவர்களை பட்டியல் இடுகிறார்.

நாட்டுப்பற்றுள்ள இந்தியன் (உங்களைப்போல்)
சமூக நீதி கோரும் பிற்படுத்தப்பட்டவர் (எங்களைப்போல்)
பொதுவாக தமிழ்நாடு மக்களிடம் உள்ள கருத்து அதாவது ஏற்படுத்தப்பட்ட கருத்து ராஜிவ் உயிருடன் இருந்திருந்தால் தன் சுட்டுவிரலால் இந்தியாவை தாங்கி நிறுத்தியிருப்பார், இந்நேரம் அமேரிக்கா நம்மிடம் பிச்சை கேட்கும் என்று, ஆனால் உண்மைவேறு, தன் குறுகிய ஆட்சி காலத்தில் வி.பி.சிங் பிரதமராக சாதித்ததை இந்தியாவில் இதுவரை எவரும் செய்ததில்லை இனி யாராவது செய்பவர்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.

இராஜpவ் தன் ஆட்சிக்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு ஆதராகமாக இருக்கும் இராணுவ தளவாடங்கள் (போபர்ஸ் பீரங்கி) விசயத்தில் எவ்வளவு ஊழல் செய்திருக்கிறார் என ஞானிகளுக்கு தெரியாமல் இல்லை ஆக இக்காரணத்திற்காகவே குற்றவாளியான ராஜிவ் நாட்டுப்பற்றுள்ள இந்தியாவில் மரண தண்டனை அளிக்கபட்டிருக்க வேண்டுமென்கிறார் தோழர் மணி இரண்டாவது பிற்படுத்தப்பட்ட அல்லகை’கள் நிலை சுதந்திர காலத்தில் எப்படி என்பதையும் நாடறியும் (அதற்கு தனிக் கட்டுரை வேண்டும்) ஆக மற்றும் ஒரு முறை கொலை செய்ய வேண்டியவர்கள் சமூக நீதி கோரும் பிற்படுத்தப்பட்டவர்கள்.


நாம் செய்யத்தவறி விட்டோம், ஆனால் தன் இன விடுதலையே உயிர்முடிச்சாக கொண்டு வாழும் மரத்தமிழர் கூட்டம் எனும் தேன் கூட்டை “afterall 2000 boys” என்று வாய்ச்சவடால் விட்டபடி கை வைத்தார் ராஜுவ் அதற்கை கொலை செய்யப்பட்டார்.

ஆகவே தோழர் மணி தன் உரையில் அதை ஈழத்தமிழன் செய்திருந்தால் அது நியாயம் என்கிறhர், நன்றாக கவனியுங்கள் விடுதலைப்புலிகள் செய்திருக்காவிட்டால் அது குற்றம், செய்திருந்தால் பாராட்டுகிறோம் இல்லையேல் கண்டிக்கிறோம் என கடந்த காலங்கள் பேசியிருக்க வேண்டுமென தற்போது பேசியுள்ளார்.

ஆக ராஜிவ்வை கொலை செய்யதது ஈழத்தமிழன் அது நியாயம், ஆனால் அவன் விடுதலை புலியாடூ என்பது நியாயமாக உறுதி செய்யப்படவில்லை (கொலையில் ஈடுபட்டவர்கள்) புலிகள் இயக்கத்தில் அச்சமயம் இல்லை என்பது தகவல்)

மேற்கூறிய தகவல்கள் அடிப்படையிலேயே தோழர் அப்படி பேசியிருக்கிறhர். உங்கள் கேள்வி என்ன

ராஜிவ் செய்த குற்றத்துக்காக புலிகள் தண்டனை வழங்கலாம் என்றால் அக்குற்றத்துக்கு தொடர்பில்லா இருபது பேரை கொன்றதற்கு புலிகளுக்கு தண்டனை வழங்கலாமா ?

நீங்கள் இக்கேள்வியின் மூலம் ராஜிவ் குற்றம் செய்தார் என்பதை ஒப்புக்கொண்டுள்ளீர்கள் ஏனெனில் மற்ற 20 பேரை குற்றவாளிகள் அல்ல என்று சொல்லி உள்ளீர்கள்…(ராஜிவ்வை குற்றவாளி எனச் சொன்ன உங்களை அல்ல ‘கை’கள் பார்த்துக் கொள்வார்கள்).

அடுத்தது தான் உங்கள் உளறளை ஆரம்பித்து உள்ளீர்கள், உங்கள் முதல் கேள்விக்கு எங்கள் பதில் என்ன என்பதை நீங்களே யூகித்து உள்ளீர்கள் உங்கள் பதிலுக்கு மறுபடியும் ஒரு கேள்வி எழுப்பி ஜெயலலிதாவை வம்புக்கு இழுத்துள்ளீர்கள்..

ஞானி அவர்களே உங்கள் மனிதபிமானம் எங்களை வியக்க வைத்துள்ளது, உங்களை போன்றவர்கள் உள்ளதால் தான் 24மணி நேரம் சிhpப்பு மழை பொழிந்து மக்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கி செத்துக்கொண்டிருக்கிறhர்கள்…

தெளிவாக கேளுங்கள், ராஜிவ் கொலை செய்யப்பட்டது ஈழத்தமிழச்சியால் என்றால், ராஜிவ்வின் அமைதி ?!! படை செய்ததன் எதிர்வினை, ஆக அவர் கொல்லப்பட்ட இடம் போர்க்களம் உடன் மடிந்த 20 பேர் கொல்லப்படுவது தவிர்க்க முடியாததது தான், ஆனால் சர்வாதிகாரி ராஜபக்சே அரசின் கொடூர தாக்குதலால் உயிரிழக்கும் அப்பாவி தமிழர்களையும் அந்த 20பேரையும் ஒப்பிடுவது தவறு, இப்படி அறிவுப்பூர்வமாக நடுநிலையுடன் கேள்வி கேட்கும் தாங்கள் உடன் இறந்த 20 பேரில் அல்ல’கை ஓட்டுப் பொறுக்கிகள் யாருமில்லை என உங்கள் மூக்கு இல்லை இல்லை பூதக்கண்ணாடி கொண்டு பார்த்ததுண்டா ?

அடுத்த உங்களின் அறியாமை நிரம்பி வழியும் கேள்வி – குற்றத்துக்காக மரண தண்டனை வழங்குவது சாரியென்றால், இந்தியச்’சட்டப்படி’ குற்றவாளிகளான ராஜிவ் கொலையாளிகளுக்கு விதித்த மரண தண்டனைக்கு எதிராக ஏன் கையெழுத்து இயக்கம் நடத்தினீர்கள் ? கருணை மனுக்களை ஏன் ஆதாpக்கிறீர்கள் ?

ஞாநி அவர்களே ராஜிவ் கொலையாளி ராஜிவ்வுடனே தன்னை மாய்த்துக் கொண்டார்.. உடனிருந்த சிலரும் தங்களை தாங்களே மாய்த்துக் கொண்டார், மீதமிருக்கும் சிலர் சு{ழ்நிலை காரணமாக அந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் அதை முதலில் புரிந்து கொள்ளங்கள், அவர்கள் மரண தண்டனைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நியாயமானதில்லை என்றால் அவர்களுக்கு சட்டப்படி’ அளிக்கும் மரணம் ;நியாயமானதா? அப்படி நியாயம் என்றால் ஏன் ராஜிவ் மரணத்திற்காக நீலிக்கண்ணீர் வடிக்கிரிர்கள் ?

எங்கள் தோழர் மணி அவர்கள் தன் பேச்சில் “எங்கள் தோழர்கள் சட்டவிரோதமாக கூட நடப்பார்கள்* ஆனால் நியாய விரோதமாக நடக்கமாட்டார்கள் என்பார், ஆக ராஜிவ் கொலை உங்களில் சட்ட விரோதம் ஆனால் எங்களுக்கு நியாயம்...

இதை பக்கம் பக்கமாக எழுதி உங்களுக்கு விளக்கும் அளவுக்கு நீங்கள் எதையும் சாதித்து விடவுமில்லை, நாளைய வரலாறுக்கு பதிவாகவே இக்கட்டுரையை வைக்கிறேhம். வோட்டு பொறுக்கிகள் எல்லாம் அணுசக்கதி ஒப்பந்தத்தை பேசுவதற்கு முன்பாகவே கடந்த feb 2008 லேயே டில்லி சென்று மத்திய அரசுக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்து பெரியார் திராவிடர் கழகம் அதன் அறுவடை இன்று தமிழநாட்டில், இச்சமயத்தில் உங்கள் ஆராய்ச்சி வேலையெல்லாம் ஆஸ்கார், போயஸ் தோட்டம், கோபாலபுரம் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள், ஈழம் வரை செல்ல வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறேhம், வேண்டுமென்றால் நம் இல்லை இல்லை எங்கள் சொந்தங்களின் ரணங்களை படமெடுங்கள் மறுபடியும் உங்களை ஊர் ஊராக தூக்க தயராக இருக்கிறேhம் அதை விட்டுவிட்டு எதுக்கு வேண்டாத வேலை..

எனக்கொரு சந்தேகம்

கருணாநிதி சரியில்லை, ஜெயலலிதா சரியில்லை, வைகோ சரியில்லை, ராமதாஸ் சரியில்லை, திருமாவளவன் சரியில்லை, பொதுவுடமை வாதிகள் சரியில்லை, பொரியாரியல் வாதிகள் சரியில்லை - இப்படியெல்லாம் வரிசையாக நீங்கள் பிதற்றுவதை பார்த்தால் எனக்கென்னவா நீங்கள் தான் சரியில்லை என்றே தோன்றுகிறது.

தோழர்களே ஞாநிக்கு ஜோரா ஒரு ‘ஓ’ போடுங்க…..

Feb 26, 2009

கடையாணிகள்

வடக்குத் தெருவில்
கட்டம் போட்ட படி
சடுகுடு ஆட்டம்.

சனி மதியங்களில்
சின்ராசு காட்டு
திருட்டுச்சோளக்கதிர்.

வாய்க்கால் மேட்டில்
மீனும் பிடிப்பதுண்டு.

ஒத்தையடி பாதையில
ஒய்யார நடை
பள்ளி நோக்கிய படி.

இப்படித்தானடி - தோழி
பள்ளிப்பருவத்திலே.
சம்பரதாய படுகுழியில்
புறந்தள்ளி - உனை
புதைத்தார்கள்
பூப்பெய்தி விட்டாயாமே?
விடலைக்கால
விளையாட்டு
மூச்சுமுட்ட கல்லூரி
முதல் மாணவனாய்
அப்பாவுக்கு ஆறுதலாய்
அரசாங்க உத்தியோகம்
அப்பப்ப நினைப்பது உனை !
அன்று
விதவைகள் உதவித்தொகை
விண்ணப்பத்துடன் - நீ
எரித்தே விடலாம்
காலச்சக்கரத்தையும்
சில
கடையாணிகளையும் ...

Feb 23, 2009

அண்ணன் சீமான்

http://thooya.blogspot.com/2009/02/blog-post_24.html
இயக்குனர் சீமான் மனோகரா படக்காட்சி

மக்கள் என்னமா சிந்திக்கின்றார்கள்!!!!வித்தியாசமாக இருந்தது பகிர்ந்து கொள்கின்றேன் ......

Feb 22, 2009

ஒ தமிழகமே....

அப்படி இப்படி என ஒருவழியாக இந்தபூனைக்கும் மணி கட்டியாகிவிட்டது யாரு கட்டினாங்க என்பது முக்கியமல்ல ஆனா ரொம்ப நல்லதுங்க இந்த விசயம். நம்ம தாய் திருநாடான தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருவிலும் ஏதோ ஒருவகையில் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இப்ப என்ன பிரச்சனையினா எல்லோரும் சேர்ந்து கதவை தட்டுறோம் ஆனா ஏனோ கதவு திறக்கமாட்டேங்குது. மூட்டை தூக்கும் சுப்பன் முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைவரும் தட்டியாயிற்று. தமிழனும் தட்டியாச்சு, இந்தியனும் தட்டியாச்சு, முதல்ல நான் இந்தியன் அப்புறம்தான் தமிழன்கறவனும் தட்டியாச்சு ஒன்னும் முடியலை. திரைப்படத்துல ஒரு நகைச்சுவை காட்சி ஒன்னு வரும் அடிவாங்குபவன் முகத்துல சோடாவை தெளிச்சு பின்பு தெளிவா அடிப்பாங்க, அதுபோல டியர் பிரதர்ஸ் அண்டு சிஸ்டர்ஸ், இந்த பிடியுங்க ! சாப்பிட்டுவிட்டு தெளிவா அடிவாங்குங்க எனச் சொல்லி நிவாரணமும் கொடுத்தாயிற்று. இந்த சூழலில் நம் அண்ணன் தம்பிகளுக்கு மிக முக்கியமா சில விசயங்களை சொல்லியாகணும்
1. இலங்கை தமிழர்கள் எனச் சொல்லாதீங்க, அவர்கள் ஈழத்தமிழர்கள்
2. அவர்கள் பூர்வீககுடிகள் அங்கே பிழைக்க போனவர்கள் அல்ல
3. தங்கள் மீதான மேலதிக அடக்கு முறை காரணமாகவே ஆயுதமின்றி போராடுகிறார்கள் இதைச்சொல்லப்போனா இங்க இவனுக ( அதுதான் காவிரித்தண்ணி வாங்க வக்கில்லாத, மும்பையில அடிபட்டு வந்த, சேட்டானுககிட்ட முல்லை பெரியார் அணையில நீர்மட்டத்தை உயர்த்த முடியாத தமிழ்நாடு வாழ் இந்தியர்கள் ) தெல்லை தாங்கமுடியல.அட இந்த இறையாண்மையை எங்கேயோ நேத்துதா புதுச கண்டுபிடிச்ச மாதிரி ஒரே அளப்பாரை, எனக்கு தெரிஞ்சு புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா ? என்பதுக்கு அடுத்தபடியா தமிழ் நாட்டுல கேட்கப்பட்ட கேள்வி இந்திய இறையாண்மைக்கு ஆபத்து வருமா ? என்பதுதான். இறையாண்மை என்பது என்ன ? உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ நான் என் மக்களுக்கு சொல்லியாகணும். சொந்தங்களே ! இறையாண்மை என்பது ஒருநாட்டு மக்கள் தங்களின் பாதுகாப்புக்காக அந்நாட்டு அரசாங்கத்தை நம்பி இருப்பது என்பது இதைச்சொன்ன உடனே போனவாரம் வூட்டுல யாருமில்லாத நேரமாபாத்து பின்கதவை உடைச்சுட்டு பீரோவை கடப்பாரை போட்டு நெம்பி நம்ம சுப்பன் வீட்டுல கொள்ளையடிச்சுட்டு போயிட்டாங்க, அதுக்கு அந்த கிறுக்குபயபுள்ள இந்திய இறையாண்மையே போச்சு அப்படின்கறான். அதுபோல அவனுகல ஆதரிக்கறீங்க இவனுகல ஆதரிக்கிறீங்க. அய்யோ ! இந்திய இறையாண்மை பாதிக்குது. அப்பப்பா ! உங்க நாட்டுப்பற்றை பார்த்து நமக்கு உச்சந்தலையில முடி நட்டுகிச்சு போங்க இறையாண்மை பற்றிபேசும் gentelmen( முக்கியமா கோயிலுக்குள்ள பிச்சை எடுக்கும் gentelmen) உங்களுக்கு சின்னதா ஒரு கேள்வி அதுவும் முதல்மரியாதை பாணில மரியாதையான கேள்வி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் ? மும்பையில பீகார்வாசி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதும், அதற்கு முன்னும் பின்னுமாக மும்பை, பீகார் மாநிலங்களில் நடந்த பிரச்சனையின்போதும் ... ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குசெல்லும் தொடர்வண்டியை எரித்தபோதும், மராட்டியத்திற்குள் தொடர்வண்டிகளே நுழையாது என நடுவன் அமைச்சர் எச்சரித்த போதும் ... உச்சநீதிமன்றமே அறிவித்தாலும் சரி, நிபுணர்குழுவே அறிவித்தாலும் சரி, அணையின் அடியில் நாலுகல்லு நழுவி நிக்குது நீர் மட்டத்தை உயர்த்தினா அணை உடைஞ்சுபோகும் என சிமெண்ட் எடுத்துபோயி அணையை அடைக்க துடிக்கும் பொலிட்பிரோ புகழ் அச்சுதானந்தன் அறிவித்தபோதும் ... ஒக்கேனக்கல் எங்களது காவிரி நீர்பற்றி எவனும் பேசப்படாது என கர்நாடகம் நடுவர்மன்ற தீர்ப்புகளை மீறி அறிவித்தபோதும் ...உங்கள் இறையாண்மைக்கு நீங்கள் லீவு விட்டுட்டீங்களா gentelmen?
இதுவரையிலும் தமிழ்நாடு முழுவதும் ஈழத்தமிழர் பிரச்சனைக்காக ஏதேனும் ஒருவகையில் வன்முறைகள் நடந்துள்ளதா இல்ல அஞ்சு வருசத்துக்கு ஒருமுறை வடக்கிருந்துவந்து வண்க்கம் போட்டு ஓட்டு பிச்சை எடுத்தப்ப நாங்க பிச்சை போடலையா, பிறகு எதற்காக இப்படி இறையாண்மை போனதாக துள்ளி குதிக்கிறீர்கள் அப்படி உங்க நாட்டுப்பற்று ?! நியாயமானதா உங்களுக்குபட்டா வெச்சுக்குங்க ஈழத்தமிழர் பிரச்சனையில உங்க நிலைப்பாடு என்ன என்று கேட்ட, அங்க அமைதி நிலவவேண்டும் என்கிறீர்கள். எப்படி gentelmen அது ? எங்களுக்கு ஒன்னுமே புரியலே, கேட்டா பேச்சுவார்த்தை மூலம் தீர்வுவேண்டும் பல்லவியா பாடறீங்க. சரி வாங்க குந்தி பேசலாமுனு கூட்பிட்ட அவ போரை நிறுத்தமாட்டீங்கிறான் அப்புறம் எப்படி gentelmen குந்தி பேசறது. கடந்து வந்த பேச்சு வார்த்தை பாதையை திரும்பிப்பார்த்தா அதுல தமிழனுக்கு இழைத்த துரோகங்கள் எவ்வளவு என்பது தெரியும், அதுசரி அதை நீங்க எதுக்கு பார்க்கறீங்க உங்களுக்கு உங்க பொழப்பு சரியாப்போனாச் சரி, இந்த இறையாண்மை விசயத்தில் கை யைத் தூக்கிக்கொண்டு gentelmen பின்னாடி செல்லும் சொந்தங்களே புரிந்துகொள்ளுங்கள் ஈழப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு மிகத்துல்லியமான தீர்வு தனிஈழம்தான் என... உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஒருஇனம் ஏறக்குறைய 10 கோடி மக்கள் தொகை கொண்ட ஒர் இனம். அதற்காக தனியாக ஒர் நாடு அமைவதால் இங்கே யாருக்கு என்ன ஈழப்பு ? தேங்காய்போல ஒரு தீவு அதில் நம் குடுமியை தனியாகப் பிரிப்பதுதான் பிரச்சனை, அதனால் இங்கிருக்கிற குடுமிப்பசங்களுக்குத்தான் எரியுது என்றால் அதில் அவனுக இனப்பற்று நீங்க ஏனுங்க கை யை தூக்கிட்டு முன்னால போறீங்க என்பதே நம் கேள்வி.அதுக்கு முன்னாடி இந்த gentelmen சில பேர் நடத்துற பத்திரிக்கைகளை பத்தி சொல்லியே ஆகணும்... ஒன்று தெளிவாக புரிஞ்சுக்கங்க gentelmen நீங்க போரில் இறந்ததாக சொல்லப்படும் போராளிகளின் எண்ணிக்கை ஒருநாள் ஈழ மக்கள் தொகையைத் தாண்டாம பார்த்துக்குங்க... அவனவன் பொண்டாட்டிக்கு சேவை செஞ்சு அவன் புருசன்னு பேர் வாங்கறதுதான் பெருமை அதைவிட்டுட்டு அடுத்தவன் பொண்டாட்டிக்கு சேவை செஞ்சு அவன் கூப்பிட்டு உங்களுக்கு விருதெல்லாம் தந்தானுகளாம உங்க சேவையே சேவை போங்க... உங்க பாசையில பத்திரிகா தர்மம் என்பது சந்திரிகா தர்மமா ? இதோ 80 சதவீதம் பிடிபட்டாகிவிட்டது. அதோ முக்கிய நகரம் கைப்பற்றியாகிவிட்டது. இப்பதான் முக்கிய தளபதியை கொன்றோம் இதெல்லாம் வருச கணக்கில் போடக்கூடாதுங்க gentelmenஅப்படி பிடிச்சிருந்தா உலகெல்லாம் பிச்சையயடுக்கும் உங்கள் நண்பன் ஏன் இன்றும் ஆயுதப்பிச்சை எடுக்க நாடு நாடாப்போறான். எதற்கும் கொஞ்சம் நஞ்சமாவது ஈழத்தமிழர்களையும், போராளிகளையும் உயிரோடு இருக்கிறார்கள் என்று எழுதுங்கள், இல்லையினா நாளை ஈழம் மலர்ந்ததற்கான சிறப்பு மலரோ, தலையங்கமோ எழுதும் போதும் உங்க கணக்குப்படி யாருமே இல்லாத நாட்டிற்கு எப்படி எழுதுவது என முடியை பிச்சக்கனும் soory gentelmen உங்களுக்குத்தான் முடியே இல்லியே soory. இவனுகள விட்டுத்தொலைங்க, நூலுல முதுகு சொறியர பசங்க திருந்தவே மாட்டாங்க, அப்புறம் பார்த்துக்கலாம் இவனுகள... உங்களுக்கென்ன பிரச்சனை, நல்லா படிச்சு பார்த்து, தேவையினா வரலாற்றை மீண்டும் ஒருமுறை ஆய்வு செஞ்சு ஒரே குரலில் கைகளை ஒன்றுசேர்த்து சொல்லுங்க. ஈழத்தமிழர் பிரச்சனை தீர ஒரே தீர்வு தனிஈழம்தான் என... நம் வரிப்பணத்தில் செய்யும் உதவிகளை நிறுத்து என மத்திய அரசுக்கு ஒரே குரலில் சொங்லுங்கள்... தெற்காசியாவிலேயே வல்லரசு என இந்தியப்பேரரசு தன் அதிகாரத்தை பயன்படுத்தி போரை நிறுத்தச் சொல் என... இப்படியயல்லாம் சொல்லவிடில் நாளைய வரலாறு நம்மை துரோகிகள் எனக்கூறும் அப்புறம் ஈழம் தனியாப்பிரிஞ்சு இங்க தனித்தமிழ்நாடு கேட்பாங்க என பழைய பல்லவி பாடாதீங்க... அப்படி ஒன்று நடக்கறதுக்கு வாய்ப்பில்லை. அப்படீங்கிறது உங்களுக்கு நல்லாவே தெரியும் ஏன்னா, இந்த ஈழப்பிரச்சனையை நம்மாளுககிட்ட சொல்லறதுக்குள்ளேயே அம்மாகிட்ட குடிச்ச பால் வெளியே வந்திரும்போல, வழக்கமா நம்மாளுக இங்க அர்ஜீன் படத்தை பார்த்து விரைச்சுப்போயி சல்யூட் அடிப்பாங்க அப்படி இல்லீனாலும் டோனி ஒரு சதம் போட்ட போதும் அப்படியே சிலிர்துது போயிடுவாங்க
அப்புறம் இந்தந கட்டுரை தலைப்பில சொன்ன ஈழத்தமிழரும் ஈனததமிழரும் என்ற தலைப்பில் ஈனத்த்மிழர் யார் அப்படினு சந்தேகம் இப்ப உங்களுக்கு சதம் போட்டா சிலிர்த்துக்கிற எங்கள் செந்தங்களா ? ஈனத்தமிழர்கள் ... இல்ல வடக்க பார்த்தாப்பல எதுவுமே தெரியாத மாதிரி கையை கட்டி நிக்கிறவங்களா ? இல்ல நூலுல முதுகு சொறியிற பசங்களா ? இல்லையில்ல இவனுகளை தமிழன்னு சொன்ன வரலாற்று பிழையாகிவிடும். தோழர்களே, ஆக இதையயல்லாம் பார்த்துட்டு வெறும் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்திட்டு, கட்டுரை மட்டும் எழுதிட்டு கிழவன் கொடுத்த தடியை இன்றும் எடுக்காம இருக்கிறேமே நாமதான் ஈனத்தமிழர்கள்... இதெல்லாம் இருக்கிற வரைக்கும் உங்க பொழப்பு ஜோரா ஓடும். ஆக கவலைப்படாதீங்க, இந்த இந்தியாங்கிற துணைக்கண்டம் ஒரு மெல்லிய நூலில் கட்டிஇருக்குது அது இத்துபோகிற வரைக்கும் நீங்க ஆடலாம், பாடலாம், கும்மியடிக்கலாம் என்ன வேனா பண்ணலாம் போங்க ஏன்னா 95 வயதில் மூத்திர சட்டியைக் கட்டி தொங்கவிட்டுட்டு கிழவன் கத்தின அப்ப முழிக்கதவனுங்க இப்பவா முழிக்க போறாங்க இப்ப அதில்லீங்க பிரச்சனை தைரியமா கைகளை கொடுங்கள் நம் ஈழத்தமிழர்களுக்காய் ... உயிரையும் உடைமையையும் இழந்து கவலைப்படும் நம் சொந்தங்களுக்காக குரல் கொடுங்கள் இதையயல்லாம் மீற இறையாண்மை போச்சுனா ஒரே ஒரு யோசனை இருக்குதுங்க ... பேசாம சேலம் சித்த வைத்திய சாலைக்குப்போங்க...

அல்லகைகள்

எங்கள் காடு
விசித்திரமானது ...
எப்போதோ தோகை
வெட்டப்பட்ட மயிலுக்காய்...
மறக்காத பெண் மயில்

பக்கத்து காட்டில்
புலிக்கும் சிஙகத்துக்கும்
சண்டையாம்...
சிங்கத்துக்காய் முக்கை நிட்டும்
மயில் குள்ளநரிகளுடன் ...
சிங்கம் காட்டுக்கு ராசாவாம்...

புரிவதெயில்லை அறிவியல் உண்மை
சிங்கம் சிங்கிளா வராது
புலிதான் சிங்கிளா வரும்...

புரியவைக்கனும்
மயில்களுக்கும்...
மயிரான்டிகளுக்கும்...
ஈழம் மலர்ந்தது

அன்பு எனும் கோல்கொண்டு
ஆளப்பிறந்த தமிழினமே
இனிமேல் தடைகள் ஏதுமில்லை
ஈழம் முழுவதும் நம்மினமே
உண்மை என்றும் வென்றிடுமே
ஊருக்கு நீயும் சொல்லிடுவாய்
எல்லாம் நமது சொந்தமென்று
ஏசித்திரிந்தோர் கூப்பிடுவர்
ஐயமெதும் நமக்கில்லை - வரும்
ஒவ்வொரு நாளும் நம் நாளே
ஓலம் என்பது இனியில்லை ...

ஈழத்தமிழர்களும் ஈனத்தமிழர்களும்

அன்று
தனிக்குடித்தனம்
போகலாம் - அய்யா
கூட்டுக்குடும்பம்
நடத்தலாம் - அண்ணா
இன்று
தம்பிக்கு ஒன்று
உறவு சிக்கலில்
ஊமையாய்