Aug 28, 2009

அவசியம் படியுங்க உடன் செயலும்...

ஆரிய வாழ்வியலை கடைசிவரை கடைபிடிக்கவேண்டுமா


http://thozharperiyar.blogspot.com/2009/08/blog-post_3335.html

Aug 26, 2009

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அவலம்......

இன்று பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காயில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது.

கண்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், பூட்ஸ் காலால் உதைத்து பின்னர் தமிழ் இளைஞரைச் சுடும் காட்ச்சியைப் பார்த்தும் நாம் சும்மா இருந்துவிட முடியுமா ? சாகப் போகிறோம் என்று தெரிந்து ஒன்றும் பேசாமல் நிசப்தமாக நிற்கும் ஒரு நிராயுதபாணியை சிங்கள அரக்கன் கொல்கிறானே. இரண்டாவதாகச் சுடப்படும் தமிழ்ச் சகோதரன் எந்தப்பக்கத்தில் இருந்து வெடிவெடித்து சன்னம் பாயப்போகிறது என்று தெரியாமல் தலையை அங்கும் இங்குமாக அசைக்கிறான் , அவன் நிலையைச் சற்றி நினைத்துப்பாருங்கள் தமிழர்களே ! இனியும் நாம் சும்மா இருக்க முடியுமா ? இதற்கான பதிலடியை நாம் எப்போதுகொடுக்கப்போகிறோம்.

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1251225978&archive=&start_from=&ucat=4&

Aug 22, 2009

பிள்ளையாரப்பாஆஆஆஆஆ..........

 


தண்ணீர் தேவைக்கான நெருக்கடிகள் பற்றி மனிதன் புரிந்து கொண்டுள்ள செய்திகளும், எண்ணங்களும்:

* குறைந்த மழையளவும், பருவநிலை தவறுதலும்

* அதிக மக்கள் தொகை

* கிடைக்கின்ற நீரைவிட தேவைகள் அதிகம்

* தண்ணீர் சேகரிப்பு முறைகளில் நவீன வழிமுறைகள் பயன்படுத்துவதில்லை

* தண்ணீர் என்பது வியாபாரப் பொருளாகி வருகிறது


தண்ணீர் தேவைக்கான நெருக்கடி பற்றி எழுந்துள்ள பிரச்சனைகளில் ஆராய்ச்சியாளர் களின் அணுகுமுறை:

நீராதாரங்களின் நிர்வாகம் என்பது தண்ணீர் உபயோகத்தையும் அதன் உபயோகிப் பாளர்களுக்கு உள்ள தொடர்பை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த நிர்வாகம் சமூகப் பொருளாதராம், சுற்றுச்சூழல் மற்றும் வரலாற்றோடு தொடர்புடையது. எனவே தண்ணீர் மற்றும் அதன் தேவையை ஒரு தனிப் பொருளாக மட்டும் பார்க்காமல் அதை சமூக வாழ்க்கையோடு இணைந்து பார்க்க வேண்டும்.

நான் என்ன சொல்வது புரியலையா? இந்த கருப்பு சட்டைக்காரனுகளே இப்படித்தான்....படத்துக்கும் செய்திக்கும் தொடர்பில்லை அப்படினா கேட்க மாட்டேனு அடம் புடிக்கறாங்க.....சாமி தெய்வகுத்தமாகிட போகுது......
Posted by Picasa

Aug 21, 2009

கொஞ்சம் காதல்....

 



அன்று
பேசிக்கொண்டிருந்தாய்
33 சதவீதம்
பெண் விடுதலை
காதலுக்கு
தாடி முளைத்திருந்தது.....


ஒன்னேமுக்கால்
அடியில்
இன்பத்துப்பால்
மீதியில் - நம்
காலடி.....


மண்டபம்
காலியாண பின்
திருமணம்
உனை இன்னும்
காதலித்தேன்.....


நல்லவேளை
நீ.......
என் சாதி இல்லை......


வீட்டில்
தமிழிலேயே
அர்ச்சணை....
நம் காதல்.....
Posted by Picasa

ஒத்தப் பனமரம்

 






சனிக்கிழமை
மதியங்களில்
கிணத்தடி குளியல்
திரும்புகையில்
தலையாட்டி இரசிக்கும்
ஒத்த பனமரம் ...

பேய் புடிச்ச
எதிர்வீட்டு
சரசுவின்
ஞாபகம் எட்டிப்பார்க்கும் ...

வருசத்துக்கொருமுறை
குலதெய்வப் பொங்கல்
நேரத்தில் களைகட்டும்
பனமரத்து
ஒத்தயடிப்பாதை ...
கள்ளச்சாராயம்
காய்ச்சுபவனை
புடிக்கையில் ...

அவிழ்ந்த வேட்டியுடன்
ஓடிய
சீனிவாச அய்யர்
இன்னும்
கண்ணுக்குள்ளே ...

ஒத்தையடிப்பாதை
முப்பதடியாய்
பன்னாட்டு நிறுவன
ஒளி வெள்ளத்தில்
கருப்பு வெள்ளை
கதை சொன்னபடி
ஒத்தப்பனமரம் ...
Posted by Picasa

சிவனே...

 



தென்னாடுடைய சிவனே....
எந்நாட்டவர்க்கும் இறைவா...
உள்ளூர்
சக்கிலியன் பறையன்
உள்ளே வராதே.....

Aug 10, 2009

இராணுவ வீரன் தாக்குதல்.....

மே 2 நீலாம்பூர் இராணுவத்தாக்குதலுக்கு பின் நிறைய மக்கள்
நாம் நிம்மதியாக தூங்க காரணமான இராணுவத்தை தாக்கலாமா என கேள்வி எழுப்பினர்..(நான் நிம்மதியாக தூங்க கொசுவர்த்தி சுருள்தான் காரணம்)



குருவிந்தர் சிங் அசாம் மாநிலத்தில் இருக்கும் இராணுவ வீரர். அவருடைய போதாத காலமோ என்னவோ. துணிக்கடைக்கு உள்ளாடை வாங்க சென்ற இடத்தில் அக்கடை உரிமையாளரான இளம் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசப் போய் பட்டபாடு சொரி நாய் மீது நடத்திய கல்வீச்சு போல் ஆகிவிட்டது.

http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1140421

http://www.youtube.com/watch?v=uBKBwfdcDog

புலியை முறத்தில் துரத்தின பரம்பரை என பெருமை பேசினால் மட்டும் போதாது அந்த அசாம் தோழருக்கு பெரியார் பேரனின் வாழ்த்துகள்

Aug 9, 2009

வந்த கதை

அய்யனாரு
சாமிகையில
அருவாளு
காக்குற தெய்வமுன்னு
கொடுத்து வச்சோம்....

சம்பாத்தியத்தில
பாதிக்குமேல
அய்யனாருக்கு
அருவா வாங்கவே போச்சு...

தின்னு கொழுத்தஅய்யனாரு
சும்மாவே சுத்தி திரிஞ்சான்...

ஆத்துக்கு
அந்தப்பக்கத்துருல
பாதி சனம் -எங்கசாதி சனம்....

மீதி சனம்போட்ட பிச்சையில
சாதி சனத்தஅடிக்க போன
அய்யனாரு
ரத்தம் சொட்டஓடினாரு
நீலாம்புர் பை-பாசுல.....

சிறைக்கவிதை

நாங்கள் நாடுகடத்தப்பட்டவர்கள்
சட்டம் போட்டவர்திட்டங்கள் -ஆம்
நாடுகடத்தப்பட்டவர்கள்.....


இந்திய தேசியத்தின்
கைதிகள்
எங்களை பார்க்க
மனு போடனும்....

அம்மா கைப்பக்குவம்
அச்சு சோற்றிலில்லை
தொட்டுக்கொள்ள
தொழமை ஊறுகாய்களுன்டு...

வணக்கம் தோழர்!
என்றவாறேகூட்டத்தில்
உணர்வுபகிர்ந்தோமன்று -இங்கு
கூடத்தில் ஒரே தட்டில்
உணவு பகிர்ந்தவாறு...

கொட்டரையில் பயிலரங்கம்
கூடத்தில் பொதுக்கூட்டம்
கூர்மைபெற என்றுமே ஞாயிறுதான்...

பண்பலை பாட்டோடு
நடைப்பயிற்சி நாளுமுன்டு
நாடகப்பயிற்சியுன்டு....

நீதிமன்றம்
விசித்திரமான வழக்குகளை
சந்தித்துள்ளதாமே
அதன் விளைச்சல்களிங்கே...

தப்பித்த
குற்றவாளிகள்கோட்டையிலே
மாட்டிய ஆயிரம்நிரபதாரிகளிங்கே....

கூடி நின்னழுதா
சிறையே கொளமாகும்
சோகங்கள் ஆயிரம்....

நா செஞ்ச தப்பென்ன !
வீரப்பன் கூடப்பொறந்தது தவிர....
மனதைப்பிழியும்
மாதையன்...

கைதிகளிடம்
பிசுகட் பிடுங்கும்
மடச்சாம்பிராணிகளுமுன்டு....

காலா காலத்துல
கால் கட்டு போடும்
அப்பா இங்கில்லை
கைகட்டு போடும்
மாமனுகங்குன்டு....

கூடி கும்மியடித்து
போலிகளை பேட்டியெடுத்து
கேக் வெட்டிய
தலைவன்
மரணச்செய்திபாதிப்பில்லை...
செல்போன் சினுங்கலில்லை
செயற்கைகோள் தொலைக்காட்சி
தொல்லையில்லை..

வாழ்ந்த கதையிது
வந்த கதையினி....
Posted by Picasa

Aug 7, 2009

விடுதலைக்காட்சிகள்...


நாங்கள் எங்கள் கடமையைச் செய்ய சட்டம் அதன் கடமையை செய்த்து....சிறை எங்களை செதுக்கியுள்ளது இன்னும் கூர்மையாய் செயல்பட....விரைவில் சிறை அனுபவங்கள் உங்களோடு....

Posted by Picasa

சிறைக்கு வெளியே.


ஈழத் தமிழர் ஆதரவாளர்கள் மீது ‘இராணுவ வாகன’ தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் தேசியப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள தோழர்கள் மீதான வழக்குகளை சந்திக்க பெரியார் திராவிடர் கழகம் வழக்கு நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.நிதிக் குழுவினர்: வே. ஆறுச்சாமி, பொள்ளாச்சி இரா. மனோகரன், இல. அங்ககுமார், சு. துரைசாமி, வழக்கறிஞர் சாஜித், கோவை கோபால்.வங்கி வழியாக வழக்கு நிதி செலுத்த விரும்புவோர் கீழ்க்கண்ட வங்கிக் கணக்குக்கு அனுப்பலாம்.தா.செ.மணி, கணக்கு எண்: 555850503, இந்தியன் வங்கி, கொளத்தூர், swift code NO : IDIB 000KO43 சேலம் மாவட்டம்.தொடர்புக்கு:தா. கருமலையப்பன், ஒருங்கிணைப்பாளர், யாழ் தையலகம், வ.உ.சி. வீதி, உடுமலை - 642 126. கை பேசி: 9788324474 தமிழர்களே! அடக்குமுறை வழக்குகளை சந்திக்க நிதி குவிப்பீர்
Posted by Picasa

Aug 6, 2009

தமிழச்சி கோவை வருகை

பெரியார் எழுத்துக்களை இனையத்தில் அதிகம் பதியும் தோழர் தமிழச்சி இரானுவ வாகனத்தாக்குதல் வழக்கில் விடுதலையான தோழர்களை சூலூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடும் போது சந்தித்தார்.வழக்கில் சம்பந்தப்பட்ட தோழர்களின் விடுகளுக்கு சென்றார்
Posted by Picasa

Aug 4, 2009

மீன்டும்....

மே 2 ல் நடைபெற்ற இரானுவ வாகனத்தாக்குதல் வழக்கில் 61 நாள் சிறை வாசத்திற்கு பின் மின்டும்..... விரைவில் சிறைபட்ட தோழர்களின் முழு விவரம்....