Sep 18, 2009

கேள்வி பதில்கள்

இராணுவ தாக்குதல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்ததுபற்றி சில கேள்விகளை வெளி நாடுவாழ் தமிழர்கள் நம்மிடம் வைத்துள்ளனர் அதை எனக்கு தோழர் தமிழச்சி அவர்கள் அனுப்பி வைத்தார் அவை...

கேள்வி: இந்திய ராணுவத்தை தாக்கிய சம்பவம், ஏற்கனவே ஒருதலைபட்சமாகசெயல்படுவதாக நீங்கள் கூறும் இந்திய அரசின் வெறும் வாய்க்கு அவல் கொடுத்ததாய் ஆகாதா? இதனால் இந்திய அரசின், தமிழகத்தை ஓரம்கட்டும் செயல்கள் அதிகரிக்கத்தான் செய்யுமேயொழிய குறையாது என்பதை நீங்கள் உணரவில்லையா?

இளவரசன் அவர்களே ஈழப்போராட்டத்தில் ஒருதலைபட்சமாக செயல்படும் இந்திய அரசுக்கு தமிழகம் ஒரு பொருட்டல்ல தெற்காசியாவில் தன் வல்லாதிக்கத்தை நிறுவ சீனாவுடன் நடக்கும் போட்டியும் ஆளும் நபர்களின் தனிப்பட்ட வெறுப்பும்தான் .
ஈழ அதரவு என வரும் போது தனி ஈழம் அமைந்தால் தமிழ்நாடு தனியே பிரிந்து விடும் என்ற பல்லவியை பாடி இந்திய ஒருமைப்பாடு காப்போம் என்ற பெயரில் சிங்கள எச்சில் எலும்பு தின்னும் பார்ப்பனிய ஊடகங்கள் மக்களை முளைச்சலவை செய்து வருகின்றன அதையும் தாண்டி தமிழ் மக்கள் வாக்குகள் சில்லறை விற்பனைக்கு தயாராக இருக்கும் போது மத்திய அரசுக்கு தமிழகத்தை சர் செய்ய 5 அமைச்சர் பதவிகள் போதும் ஈழ ஆதரவு தேவையில்லை அதை மத்திய அரசும் உணர்ந்துள்ளது..

அரசியல் கைதிகளாக நடத்தப் பட்டீர்களா? இல்லை கிரிமினல் குற்றவாளிகளுடன் தங்க வைக்கப்பட்டீர்களா?
அரசியல் கைதிகளாகவே நடத்தப்பட்டோம்.கிமனல் குற்றவாளிகளை சந்திக்கலாம் ஆனால் உணவு தங்குவது வேறு இடம்.

கடைசி வரை தேசையப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தான் கைதில் இருந்தீர்களா?
இல்லை வேறேனும் வழக்கு பதியப்பட்டதா?


கைதான 52 பேரில் 5 பேர்தான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்

நீங்கள் ஈழ மக்களுக்காக செய்த இப்போராட்டம், எதேனும் ஒரு வகையில் அவர்களுக்கு உதவியதென்று எண்ணுகிறீர்களா? மேலும், தற்போதுள்ள நிலையில் உங்கள் போராட்டம் வேறு வடிவங்கள் எடுக்குமா? ஆம் எனில் அவை என்ன?
நிச்சயமாய் எங்களால் மறிக்கப்பட்ட அயுதங்களால் செத்து மடியும் எம் ஈழத்தமிழர் மரணத்தை தள்ளி போட முடிந்த்து மற்றபடி நாங்கள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை இருந்தாலும் இண அழிப்பின் போது கூட்டம் மட்டும் நடத்தி பேசிக்கொண்டிருக்காமல் ஏதோ செய்த நிறைவு..உறுதியாக எங்கள் போரட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது வடிவங்கள் சூழலை பொறுத்தே..

மற்ற பதில்கள் அடுத்த
அஞ்சலில்தோழமையுடன்அ.ப.சிவா


Sep 6, 2009

அரசின் அறிவுரை.....

பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் - 4' வெளியிட்ட காணொலியில் தமிழர்களை கொடூரமாக சுட்டுக்கொல்லும் காட்சி தொடர்பாக குமுதத்தில் வெளிவரும் அரசு கேள்வி - பகுதியில் இளையான்குடியைச் சேர்ந்த இப்ராகிம் என்பவர் கேள்வி கேட்டுள்ளார்.ஈழத் தமிழர்களை சிங்கள இராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லும் கொடூரக்காட்சியைப் பார்த்தீர்களா? அது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சொல்லியிருக்கிறாரே நம்பலாமா?

கிருஷ்ணாக்கள், நாராயணன்கள், மேனன்கள் எல்லாம் விசாரணை என்ற பெயரில் ராஜபக்ச வீட்டில் டிபன் சாப்பிட்டு வருவார்கள்.

இப்போதைய தேவை விசாரணை அல்ல, தண்டனை. அதை இந்திய அரசிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. தமிழர்களே தந்தால்தான் உண்டு......

Sep 4, 2009

இரு மொழி கொள்கை......

 தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும் முதலில் சந்தித்த ஊர்
தமிழ் உணர்வாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களால் கட்டாயம் அறியப்படும் ஊர்.....
பகுத்தறிவுவாதிகள் நிறைந்த ஊர்.......
ஊர் குளத்தில் விநாயகரை கரைக்க விடாத ஊர்....
இப்படி பல பெருமை பெற்ற சூலூரில் எடுக்கபட்ட புகைப்படம் தான் இது.
நமக்கு அவ்வளவு அரசியல் அறிவு போதாது . .
அட இதுதான் இரு மொழி கொள்கை போலும்........
Posted by Picasa