Oct 29, 2009

விட்டாச்சு லீவு...

 


நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளை சந்தித்துள்ளது ஆம் விடுமுறை நாட்களை தவிர்த்த வேலை நாட்களில்....

வழக்கறிஞர் தோழர் ஒருவரின் சந்திப்பின் அவர் பகிர்ந்து கொண்டவையே மேற்கூறிய வரிகளுக்கு காரணம் சரி வாருங்கள் விரிவாய் பார்ப்போம்...

நாட்டில் நடைபெறும் குற்றங்கள் எல்லாம் வாசுது புருசன் எந்திரித்து பல் துலக்குவதைப்போல் நேரம் காலம் பார்த்து நடப்பதில்லை. (என்னது வாசுது புருசன் எங்கிருந்து எந்திரிக்கறானா? அட பூமி பொண்டாட்டி மேல இருந்துதான் அடக்கண்றாவியே ஏ! யாரப்பா அது எழுத வந்த தலைப்பை மாத்திர மாதிரி கேள்வி கேட்பது)....

குற்றவாளிகளை உடனடியாக பிடித்து!!!! கொடுக்கும் காவல்துறையின் வேலை நேரம் 24+7.ஆனாபபாருங்க இந்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குற நி திமன்றங்கள்(மன்னா இது சொற்குற்றமா? பொருற்குற்றமா?) வருடத்தில் எத்துனை நாட்கள் வேலை செய்கின்றன வரும் 2010 ம் ஆண்டில் நீதிமன்றங்களுக்கு 210 நாட்களே வேலை நாட்கள்..

ஆங்கிலேயன் ஆட்சி காலத்தில் அவர்களுக்காகவே எற்படுத்தப்பட்டது இந்த கோடை விடுமுறை.அவன் நாட்டை விட்டு போய் 60 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில் இன்னும் இவர்கள் மட்டும் இதை விடவில்லை.நாட்டில் குற்றங்கள் பெருகி விட்ட நிலையில் வழக்குகள் தேங்கி கிடக்கும் நிலையில் நீதிமன்றங்களுக்கு கோடைவிடுமுறை மற்றும் சனிக்கிழமை விடுமுறை தேவைதானா? இதைப்பற்றி விரிவாக விவாதிப்போம் அடுத்தடுத்த தளங்களுக்கு எடுத்து செல்வோம்...

என்னது அந்த 210 நாட்களில் வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தத்தை சேர்க்கலையா?? ம் ம் அது அப்படி இல்லீங்க வழக்கறிஞர்கள் நிறைய சமூக பொறுப்புள்ளவர்கள்(அதென்னவோ தெரியலை கருப்பு சட்டை போட்டாலே இப்படித்தான் போல.அதிலியும் அய்யோஅப்பனுக்கு மாலை போட்டு கேரளாவுக்கு அரிசி கடத்துறவனுகளை விட்டு விடுங்க.) ஈழப்போராட்டம் தமிழகத்தில் தீவிரமடைய அவர்கள் கொடுத்த விலைதான் அவை..அவர்களை தவிர எந்த துறையினரும் இந்தளவு ஒன்று சேர்ந்து போராடவில்லை..

ஆக, வழக்கறிஞர்களே! ஒருமுறை இதையும் சிந்தியுங்கள் தேவைப்பட்டால் சேர்ந்து போராடுவோம்.இல்லாமல் மீண்டும் பள்ளிக்கு போகலாம் பாடிக்கொண்டே சனி,கோடைவிடுமுறை,தீபாவளிக்கு சேர்ந்த மாதிரி என வரிசையாக விடுமுறை எடுத்து கொண்டே போனால்...

என்னது?! ! இராசராச சோழன் பெரிய கோவில் கட்டிய போது வாங்கிய கடன் பத்திர வழக்கு நிலுவையில் உள்ளதா?..

மனுநீதி சோழன் மகன் கொலை வழக்கில் சாட்சி ஆஐராக வில்லையா?

நேரு மீது எட்வினா பிரபு தொடர்ந்த ஈவ் டீசிங் வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வருதா?

இப்படியெல்லாம் ஆச்சரியப்பட வேண்டியிருக்கும்
Posted by Picasa

Oct 23, 2009

எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்திலே....

 அமைதிப்படை திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் வில்லனை பார்த்து நாயகன் செல்வார் உன்னையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் கொன்னுட்டா தியாகி அக்கிடுவானுக. அப்புறம் 8 ம் வகுப்பு பாடப்புத்தகத்தில எழுதி வருங்கால தலைமுறை அதைப்படிப்பாங்க..என்பார்...

இயக்குநர் தோழர்.மணிவனணின் வசனம் இப்போது நிசமாகி விட்டது...தமிழ் நாடு அரசு பாட நூல் 8 ம் வகுப்பு சமுக அறிவியல் பாடத்தில் அப்படித்தான் சிலரை தியாகி ஆக்கியுள்ளனர்..

அந்நுலில் 113 ம் பக்கத்தில் தமிழ் புதினங்களின் வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ் சமூக கருத்துக்களை மையமாக வைத்து 19 ம் நூற்றாண்டின் முக்கிய ஆசிரியர்கள் எனும் பட்டியலில் செயகாந்தன் ,டி.சானகிராமன்,நா.பார்த்தசாரதி,சுஐஐதா,வை.மு.கோதைநாயகி அம்மாள்,சிவசங்கரி,இந்துமதி,லட்சுமி,இராசம் கிருசுணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

அக்கிரகாரங்களை தாண்டி புதினங்கள் வளரவேயில்லையா அதிலையும் பாருங்க நம்ம சுஐஐதா எழுதிய பாய்சு பட வசணம் சிறந்த புதினம் போங்க..8 ம் வகுப்பிலையே தெரிஞ்சுக்க வேண்டிய மா மேதைங்க இவங்கெல்லாம் நாடு விளங்கிரும் இப்ப எனக்கொரு சந்தேகம் இந்த அண்னாதுரை,கருணாநிதி,புலவர் குழந்தை, இவங்கெல்லாம் யாருங்க....

51 ம் பக்கத்தில வ.வே.சு.அய்யர் சேரன்மாதேவியில் திவிரவாதிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக குருகுலம் நடத்தினார்...வாஞ்சி நாதன் தேசபக்தி முத்திபோய் அசுதுரையை சுட்டு கொன்றார்

அப்புறம் பெரியார் துறவி போல் எளிமையாக வாழ்ந்தார்.


இந்த அபத்தமெல்லாம் இதில் உள்ளது.(இதுபற்றி நக்கீரன் கட்டுரை படிச்சு தேடுதுனது). இப்ப எனக்கிருக்கிற பயமெல்லாம் இது இன்னும் எத்துனை வகுப்புகளில் உள்ளதோ என்பதே...

படிக்கும் வயதில் விதைக்கப்படும் நச்சு மிகவும் அபாயகரமானது பாரதிய சனதா அட்சியில் இல்லையில்லை அவசர நிலையின் போதே 1 ம் வகுப்பில் சிங்கம் முழங்கும் என்ற வார்த்தையை மாற்றி சிங்கம் கர்சிக்கும் என பதிப்பதற்கு புது நூலையே கொண்டு வந்தார்கள்...

அக அசிரியர் துறையில் இருக்கும் தோழர்களே ! தயவு செய்து கவனியுங்கள், இவைகளை மாற்ற அறிவுறுத்துங்கள்...

ஐந்தில் வளையாததை இருப்பத்தைந்தில் கூட்டம் போட்டு வளைக்க முடியாது...

எனக்கு கழிவறையில் அமர்ந்திருக்கும் போது கண நேரத்தில் தோன்றிய யோசனை வரலாறு முக்கியம் மண்னா!கல்வி மத்திய தொகுப்போ,மாநில தொகுப்போ அது அக்கிரகார தொகுப்பாக மாறவிட்டால் நாளைய வரலாறு எழுதும் ஆடோட்டி வந்தவன் நாடாண்டான், நாடாண்டவர்கள் வேறன்ன ஆடுதான் ஓட்டனும் அமாவாசை.... எய் டிரியோ, டிரியோ,டிர.ியோ,ட்ட்ட்ட்டுரு....
Posted by Picasa

Oct 21, 2009

கணக்கில் புலி தமிழன்.....

நண்பர் அனுப்பியிருந்த மின்னஞ்சலை திறந்து பார்த்தால் அட போட வைக்கும் விடயம் நீங்களும் பாருங்களேன்...

1 = ONDRU -one
10 = PATHU -ten
100 = NOORU -hundred
1000 = AAYIRAM -thousand
10000 = PATTAYIRAM -ten thousand
100000 = NOORAYIRAM -hundred thousand
1000000 = PATTU NOORAYIRAM - one million
10000000 = KOODI -ten million
100000000 = ARPUTHAM -hundred million
1000000000 = NIGARPUTAM - one billion
10000000000 = KUMBAM -ten billion
100000000000 = KANAM -hundred billion
1000000000000 = KARPAM -one trillion
10000000000000 = NIKARPAM -ten trillion
100000000000000 = PATHUMAM -hundred trillion
1000000000000000 = SANGGAM -one zillion
10000000000000000 = VELLAM -ten zillion
100000000000000000 = ANNIYAM -hundred zillion
1000000000000000000 = ARTTAM -??????
10000000000000000000 = PARARTTAM --anybody know?
100000000000000000000 = POORIYAM ---??????????????
1000000000000000000000 = MUKKODI -??????????????????
10000000000000000000000 = MAHAYUGAM -?????????????????

இனி இலங்கைக்கு 500 MAHAYUGAM உதவி வழங்கலாமே...

எதற்கு சிறை...

 


கடந்த மே மாதம் நடந்த இந்திய இரானுவத்தாக்குதலில் கோவை மத்திய சிறை சென்ற போது எங்கள் மனதை பிழிந்தவர் வீரப்பனின் அண்னண் மாதையன் அவரை சிறையில் சந்தித்த போது...

அவரது வயது 81 தனது 60வது வயதில் சிறை பட்டவர் கடந்த 21 ஆண்டுகளாக சிறையில் இருப்பதாக சொன்னார்..
கண் பார்வை மங்கிய நிலையில் காதும் சரியாக கேட்காது...

அய்யா! நீங்க என்ன தப்பு செஞ்சீங்க என்ற எங்களின் கேள்விக்கு 'வீரப்பன் கூடப்பொறந்தது தான் வேறென்ன' 2 பொண்னுக தம்பி எனக்கு ஒவ்வொரு மாப்பிளை மேலயும் பல வழக்குகள் இருக்கு..வக்கீல் படிப்பு முடிச்சுட்டு சென்னையில பயிற்சி எடுத்திடுத்திருந்த ஒரே பையனையும் லாரி விட்டு கொன்னுட்டாங்க..என்ற போது கண்கள் குளமாயின..

கடந்த 3 நாட்களாக விடுதலை செய்ய கோரி உண்னாநிலையில் உள்ளார்..அவருக்கு அதரவாக 21ம் தேதி மாலை பெரியார் தி.க வினர் கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்...

எதற்கு ஒருவரை சிறையில் அடைக்க வேண்டுமோ அதையெல்லாம் கடந்த நிலையில் மாதையன் உள்ளார்.ஆக அவரின் மொழியிலேயே சொல்வதென்றால் 'கருணாநிதி மனசு வச்சா கடைசி காலத்துல வெளி உலகத்த பார்த்துட்டு சாவேன்'....மனசு வையுங்க முதல்வரே....
Posted by Picasa

Oct 20, 2009

பேராண்மை- சனநாதன் மேல் பொறாமை....

 


நம்மூர்ல பழமொழி சொல்வாங்க 'அறுக்க மாட்டாதவன் கையில அம்பதெட்டு அருவாளு'....

15 ஆண்டுகளுக்கு முன் ஒரு இயக்குநர் என் படத்தில் நாயகனும் நாயகியும் இறுதிக்காட்சியில் தான் பார்ப்பார்கள் எனச்சொல்ல படம் மயிரு மாதிரியிருக்கும் என சில தாயாரிப்பாளர்கள் சொல்ல இறுதியில் சிறந்த இயக்குநருக்கான இந்திய தேசிய விருதை பெற்றது அப்படம்..

ஆக முதல் பாராவை படியுங்கள் ஐந்து நாயகிகள் டூயட் பாடாத நாயகன் 'அறுக்க மாட்டாதவன் கையில அம்பதெட்டு அருவாளு'....
தமிழ் சினிமாவின் பல விதிகளை மீறியிரிக்கிறார் இயக்குநர் சனநாதன்..அட பின்ன என்னங்க எப்ப பார்த்தாலும் இதே மாதிரி படத்த தர்றதே பொழப்பா போச்சு லட்டு மாதிரி 5 நாயகிகள் 5 பாட்டு ,4 பைட்டு,சில காமெடி பல காமநெடி சீன்னு காக்டெய்ல படத்த தராம...

கோவனம் கட்டிட்டு எருமைக்கு பிரசவம் பாக்கிற நாயகன் அடுத்த சீன்ல பொதுவுடமையோ புன்ணாக்கோன்னு கிளாசு எடுக்கிறான்.ஐந்து பெண்களோட காட்டுக்குள்ள போற நாயகன் சும்மா சண்ட போட்டே காலத்த ஓட்டுறான் தப்பு தப்பு காட்டுக்குள்ள போன எப்படி படம் எடுக்கறதுன்னு காதல் கொண்டு இளமை துள்ளிய செல்வராகவன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க இயக்குநரே.....

அப்புறம் இந்திய ராக்கெட்ட தகர்க்க வர்றது உலக முதலாளிகளின் கூலிப்படையா என்ன காமெடி போங்க உங்களுக்கு அவ்வளவா அரசியல் அறிவு போதாது பளிச்சுன்னு பாகிசுதான் தாவிரவாதினு சொல்லாம...நீங்க படப்பிடிப்புக்கு முன்னடி நம்ம உள்ளூரு நாயகன் கமல் ஒரு அவதாரம படபடப்ப நடிச்ச உன்னை போல் ஒருவன் பார்க்கலைங்களா இயக்குநரே...
இப்படி படமெடுத்தா எப்படி கல்லா கட்டறது நீங்க படத்துல செஞ்ச தப்பெல்லாம் பாருங்க...

முதல்ல நாயகனை ஆதிவாசி இனத்துல பிறந்து ஒதுக்கீட்டில் படித்தவனாவா காட்றது அதுவும் அவன் உயர்சாதி கான்வென்ட் பெண்களுக்கு பயிற்சி கொடுக்கலாமா? அப்பறம் நாயகன் பேர் துருவன் என்னங்க இயக்குநரே அம்பி,ராகவன் இப்படி நல்ல பேரே கிடைக்கலையா உங்களுக்கு...
நாயகன் பேசற வசனமெல்லாம் சகிக்கல பாருங்க

பொதுவுடமை அரசியல் படிங்க பொருளாதாரம் படிங்க..

வெள்ளைக்காரன் ஊறுகாய் விக்க வந்தா கூட சந்தேகப்படனும்....

அந்த காலத்தில பெண்கள் முந்தானை எடுத்து விடவே நேரம் சரியா போச்சு இப்ப பெண்கள் முடியை ஒதுக்கவே நேரம் சரியா போகுது...

எங்க ஊர்ல நானே பிரசவம் பார்ப்பேன் நிர்வானம் எனக்கு ஒன்னுமில்லை...

அய்யோ நாங்க எங்க நாயகர்களை உலக அளவில கொண்டு போகும் போது 'வேப்ப மரத்துல எழுதி வெச்சா பணம் தர்றவனா' கருப்பு பணத்துக்கு வெள்ளை பெயின்ட் அடக்கிறவனா' துணை நடிகர்கள் நடிக்கற வேசம் உள்பட 15 வேசம் கட்டுறவனா' இப்படியெல்லாம் தமிழ் சினிமாவை துக்கி நிறுத்தும் போது 50 வருடம் பின்நோக்கி போறீங்களே சனநாதன் சாரே...
இதெல்லாம் தெரியாம ஒரு கூட்டம் எதோ நல்ல திரைப்படம் அப்படீனு செல்றாங்க கேட்டா....

பெண் மான்கள்,குயில்கள்,மயில்களை பார்த்த எங்களுக்கு பெண் புலிகளை திரையில் காட்டியுள்ளீர்களாம்...

தமிழர் வீரத்தை உலகே பார்த்தது நீங்களும் காட்டுங்கன்னு சொன்ன நாயகன் வழி எங்கள் தமபி தெரிஞ்சாராம்...

சாகும் தருவாயில் தனது விரனையே சுட்டுக்கோல்லும் கூலிப்படை ,வீரமரணமடைந்த தோழிக்கு மரியாதை செலுத்தும் தமிழ் பெண்கள் என ஈழ போரை கண் முன் காட்டியுள்ளீர்களாம்...

மூலதனம்,பொதுவுடமை என தமிழ் சினிமா பேசாததை பேசியிருக்கிறது பேராண்மை...

அராங்கத்த எதிர்த்து அரசியல் செஞ்ச இப்படித்தான் என கனபதிராம் கேரக்டர் வழியே சொல்லிய பல கருத்துகளுக்கு வெட்டு(நாங்க காட்டுல பாம்பே பார்க்கல காட்டுங்க என நாயகிகள் கேட்பதை எல்லாம் விட்டு விட்டு மற்ற முக்கிய இடங்களில் வெட்டிய வெட்டி பயல் யாரோ தெரிஞ்ச வெட்டியவனுதை வெட்டும் ஆத்திரமாம் அவங்களுக்கு)..

அப்புறம் இது எதோ ரசுய மொழி படத்தோட உல்டா அப்படினு சில விமர்சனங்கள் வருது சிறந்த 100 படங்களில் ஒன்றான நாயகனுக்கு எத்துனை நாள் முன்னாடி காட்பாதர் வந்தது..தெரியுமா ?பூணுலை கழட்டி வைச்சுட்டு பாருங்க....


வாழ்த்துகள் சனநாதன் சார் இப்படியொரு அருமையான படம் கொடுத்ததுக்கு என்னது அட ஆமாம்ப்பா இந்திய ராக்கெட்டுத்தான் ஒருமைப்பாடா அட விடுங்கப்பா இதெல்லாம் இல்லையினா பெட்டிகுள்ளேயே படம் தூங்கி விடும்...

ஓ.தமிழ் திரைப்பட இயக்குநர்களே உலக தரத்துக்கு தமிழ் சினிமாவை கொண்டு போறதா சொல்லி சிவாசி,தசாவதாரம்,கந்தசாமி மாதிரி மண்டையை பிச்சுக்க வைக்காம!!!!
தமிழ் தரத்துல நல்ல தமிழ் படங்களா சுப்பிரமணியபுரம்,பசங்க,பேராண்மை மாதிரி தாங்க!!!!!!

ஒலக தரத்த அப்பறம் பார்க்கலாம் முதல்ல உங்க தரத்த உயர்த்துங்க......
Posted by Picasa

Oct 15, 2009

ஹப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பி டெவாஆஆஆலி....

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1.ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒழிந்து கொண்டான்.

2.தேவர்களின் முறையீட்டின் மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்துக் கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு மீண்டும் வந்து விரித்தார்.

3.விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4.ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5.அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று, நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6.அந்தப்பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7.தேவர்களுக்காக விஷ்ணு, நரகாசூரனுடன் போர் துவங்கினார்.

8.விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி
நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றான்.

9.இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10.இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான
திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்!

இந்த 10-விஷயங்கள்தான் தமிழனைத் தீபாவளி கொண்டாடும் படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்கு பூமி நூல் கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

*பூமி தட்டையா? உருண்டையா?

*தட்டையாகவே இருந்த போதிலும் ஒருவனால் அதைப் பாயாகச்
சுருட்ட முடியுமா?

*எங்கு நின்று கொண்டு சுருட்டுவது?

*சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ, தலைமீதோ எடுத்து ஏக முடியுமா?

*எங்கிருந்து தூக்குவது?

*கடலில் ஒளிந்து கொள்வதாயின் கடல் அப்போது எதன் மீது இருந்திருக்கும்?

*விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?

*அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்குப் பன்றி மீது
காதல் ஏற்படுவானேன்?

*பூமி மனித உருவா? மிருக உருவமா?

*மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா?

*பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்?

*இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடையவேண்டும்.

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா?

நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம், இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது.

இது வங்காளத்தில் அசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதைத் திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும் சொல்லுகிறான் என்பதற்காகவும் நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத் துணி உடுத்து வதும் பட்டாசு சுடுவதும், இந்த பார்ப்பனர்கள் வந்து பார்த்து "கங்கா ஸ்நானம் ஆயிற்றா" என்று கேட்பதும், நாம் ஆமாம் என்று சொல்லி கும்பிட்டு காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால் இதை என்னவென்று சொல்லுவது?

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லா விட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால், இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக்காலத்தில் நாம் ஈன நிலை அடைந்தது ஏன்? என்பதைத் தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

பெரியார்....

Oct 7, 2009

தினமலரின் மலம்...

 


தினமலம் நாளிதழில் வெளியான செய்தி இதோ..ஐதராபாத்: "நமது அரசியல்வாதிகளின் பிரபல முழக்கமான ஆரியர் - திராவிடர் கொள்கை வெறும் கட்டுக் கதையே' என்று, விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.இந்தியர்களின் மரபுவழி உண்மை குறித்து, செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையத்தின் விஞ்ஞானிகள் குமாரசாமி தங்கராஜன், லால்ஜி சிங் இருவரும் ஆராய்ந்து வருகின்றனர். இந்த ஆராய்ச்சியில், இந்தியாவின் 13 மாநிலங்களைச் சேர்ந்த 132 பேர்களின் மரபணு சோதனை செய்யப் பட்டது.ஆறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள், 25 வெவ்வேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்களில் உயர்வகுப்பினரும், தாழ்த் தப்பட்டவரும், பழங்குடியினரும் அடங்குவர். இவர்களின் மரபணுக்களில், ஐந்து லட்சம் மரபணு மாற் றங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவுக்குள் ஆரியர் நுழைந்து இங்குள்ள மக்களுடன் கலந்தனர் என்பதை, இந்த மரபணு மாற்றங்கள் காட்டவில்லை. மாறாக, இந்தியச் சமூகத்துக் குள்ளேயே, கலப்பு ஏற்பட் டுள்ளது என்பதைத்தான் அறுதியிட்டுக் கூறுகின்றன.
மேலும், இன்றைய ஜாதிமுறைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்த பல்வேறு இனக் குழுக்களிலிருந்து வந்தவைதான் என்றும், இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இது குறித்து, விஞ்ஞானி லால்ஜிசிங் கூறுகையில்," இந்த ஆராய்ச்சி வரலாற்றை மாற்றி எழுதப் போகிறது. நமக்குள் வடக்கு - தெற்கு என்ற பிரிவினை இருந்ததில்லை என்பதை இது நிரூபித்துள்ளது,' என்றார்.விஞ்ஞானி குமாரசாமி தங்கராஜன் கூறியதாவது:
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்து இங்குள்ள திராவிடர் எனப்பட்ட மக்களுடன் கலந்தனர் என்பதில் எவ்வித உண்மையும் கிடையாது. 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அந்தமான் மற்றும் தென் மாநிலங்களில் தான், மனித இனம் குடியேறி வாழ ஆரம்பித்தது. 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் வடபகுதி மக்கள் எண்ணிக்கையில் அதிகமாக ஆரம்பித்தனர். ஒரு நிலையில், தென் மாநிலங்களில் இருந்தவர்களும், வடமாநிலங்களில் இருந்தவர்களும் ஒன்றாக கலக்க ஆரம்பித்தனர்.
இதன் விளைவாக புதிய இனங்கள் உருவாகி, மக்கள் தொகை பெருகியது. இதனால் தான் இன்றைய மக்களிடையே மரபணு ரீதியில் எவ்வித வித்தியாசமும் காணப்படுவதில்லை. இந்தியச் சமூக உருவாக்கத்தின் போது, நிலவி வந்த பல்வேறு இனக் குழுக்களிடமிருந்துதான் ஜாதிகள் தோன்றின. ஜாதிகளுக் கும் பழங்குடியினருக்கும் இடை யே முறையான வேறுபாடுகள் இல்லாததால், அவர்களை வேறுபடுத்திக் காட்டுவது என்பது மிகவும் கடினமே. இவ்வாறு தங்கராஜன் தெரிவித்தார். ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்டு பொது சுகாதாரப் பள்ளி, பிராட் இன்ஸ்டிடியூட் ஆப் ஹார்வர்டு மற்றும் எம்.ஐ.டி., ஆய்வு மையங்களுடன் இணைந்து இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டது.

உண்மை விளக்கும் விதமாக தோழர் தமிழச்சியின் கட்டுரை
http://www.tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=01&article=1508

நம் கேள்வியெல்லாம்
நாங்கள் ஆராய்ச்சி வரலாற்றுக்கெல்லாம் வரவில்லை எல்லோருமே இந்நாட்டு மன்னர்கள் தான் ஆக வா வந்து மலம் அள்ளு..நாங்க பேனா பிடிக்கிறோம் டி.வி.ராமசுப்பையா எங்களுக்கும் தாத்தா தான்..

நாங்க மணியாட்டி பார்க்கிறோம் நீ வந்து திருநீறு வாங்கு..தொட்டே கொடுக்கிறோம்..

டீ கடை பெஞ்சில எங்களையும் உக்கார வை இரட்டை குவளையை உடை..

இதெல்லாம் செய்றது எங்களுகதான் ஆனா காரணம் நீ தான்...

வடக்கு தெற்கு பிரிவினையே இல்லையினா ஈழப்போராட்டத்த அங்கிகரி...

இதெல்லாம் முடியுமா இல்லையினா செய்தியை சரியா போடு

These results do not mean that the Indian groups descend from mixtures of European and Austro-Asiatic speakers, but only that they derive from at least two different groups ......

திராவிடம அரியம் எவ்வளவு அடிப்படையானது பார்த்தீங்களா.. பூணூலில் முதுகு சொரியிர பசங்க சரியா இருக்காங்க அவங்க இனத்துக்கு ஆனா செந்தமிழன்கள் வீணாப்போயிடக்குடாதுனுதான் எங்க கவலையெல்லாம்...

Oct 5, 2009

உளறல் நாயகனுக்கு பாசா கடிதம்

 


 நானும் நாத்திகன்தானுங்கோ என செல்லி கொண்டே பூணுலில் அடிக்கடி சொரிகிற உளறல் நாயகனின் சமிபத்திய உளறல் தான் உன்னைப் போல் ஒருவன், அதற்கு எதிர்வினையாக கோவை சிறையிலிருக்கும், அல்-உம்மா இயக்கத் தலைவர் பி.டி.பாஷா அவர்கள், நடிகர் கமலஹாசனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவரது வழக்கறிஞர் இராகவன் மூலம் இளந்தமிழர் இயக்கத்திற்குக் கிடைக்கப் பெற்ற அக்கடிதத்தை இளந்தமிழர் இயக்கம் வெளியிடுகின்றது

மேலும் அறிய http://suthumaathukal.blogspot.com/2009/10/blog-post_7505.html...
Posted by Picasa

அயுதம் கொடுக்கவில்லைங்கோ....

 


கட்டின பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டு தீக்குளிக்க சொன்ன உத்தமர்,வாலியை மறைந்து தாக்கிய, சராயு நதியில் விழுந்து தற்கொலை செய்த மாவீரன்,கடலுக்கடியில் பாலம் கட்டிய அதிபுத்திசாலி இராமன். அவனின் லீலாவில் தமிழ் மன்னன் இராவனின் உருவத்தை அழிக்க விடும் அம்புதான் படத்தில் பார்ப்பது.

இதையெல்லாம் புரிஞ்சுக்காம ஈழத்தமிழனை அழிக்க அயுதம் தருவதா தப்பா புரிஞ்சு போராட்டம் நடத்தினா கை மேல கோபம் வரும் புரிஞ்சுதா இளிச்சவாய தமிழர்களே....
Posted by Picasa

Oct 4, 2009

அர்ச்சகர் பயிற்சி முடித்தோரின் அவலம்!

 


தமிழக அரசு நடத்திய அர்ச்சகர் பயிற்சி பெற்ற 207 மாணவர்களுக்கு பயிற்சி முடிந்து ஓராண்டுக்குப் பிறகும் அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட வில்லை.
இப்போது - பயிற்சி முடித்த மாணவர்களுக்கு ஓராண்டுக்குப் பிறகும் சான்றிதழ்கள் வழங்கப் படாதது குறித்து, அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பனிடம் கேட்டபோது, சான்றிதழ்கள் வழங்க உச்சநீதிமன்றம் தடை ஏதும் விதிக்க வில்லை. சான்றிதழ் வழங்கப்படாத காரணத்தால்தான், பயிற்சி முடிந்தவர் களுக்கு, வேலை கிடைக்கவில்லை என்றால், இது பற்றி, விவாதித்து, முடிவெடுப்போம் என்று கூறியுள் ளார். பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது இதன் வழியாக அறநிலையத் துறை அமைச்சர் உறுதிப்படுத்தி யுள்ளார்.
செந்தில்குமார் என்ற தலித் இளைஞர் (வயது 24) அறநிலையத் துறை வெளியிட்ட பத்திரிகை விளம் பரத்தைப் பார்த்து கோயில்களுக்குள் நிலவும் தீண்டாமை ஒழிவதாக பெருமையுடன் கருதி, அர்ச்சகர் பயிற்சிக்கு விண்ணப்பித்தார். ஓராண்டு பயிற்சியையும் முடித்தார். இதற் கிடையே உச்சநீதிமன்றம் பார்ப்பன ரல்லாதாரை அர்ச்கராக நியமிக்க தடைவிதித்து விட்டது. திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயில் நிர்வாகத்தின் கீழ் இவர் வைணவ சம்பிரதாயங்களுக்கான பயிற்சியில் சேர்ந்தார். ஆனால் செயல்முறைப் பயிற்சிக்காக கோயில் கர்ப்பக்கிரகத் துக்குள் சென்று பயிற்சி எடுக்கும் நிலை வந்தபோது, தங்களை, கோயில் அர்ச்சகர்கள் கர்ப்பக்கிரகத்துக்குள் அனுமதிக்கவில்லை என்று செந்தில் குமார் கூறினார்.
“கோயிலுக்குள் நாங்கள் திவ்ய பிரபந்தம் பாடக்கூட அர்ச்சகர்கள் அனுமதிக்கவில்லை. அப்போதுதான் பார்ப்பன ஆதிக்கத்தை தகர்ப்பது என்பது எவ்வளவு கடினமானது என்பதைப் புரிந்து கொண்டேன்” என்று செந்தில்குமார் கூறுகிறார்.

பெரியார் நெஞ்சில் தைத்த முள் அகன்று விட்டது

அர்ச்சகர்
பயிற்சி நிறைவு
வா..
மந்திரம் சொல்லியே
மலம் அள்ளு...
Posted by Picasa

Oct 1, 2009

தோழர் ஆணைமுத்து அவர்களுடன்...


தோழர் ஆணைமுத்து அவர்கள் 30.09.09 அன்று சூலூரில் அவர் பெயரால் அமைந்த அவைக்கூடத்தில் தோழர்களை சந்தித்தார்.அவரின் கடின உழைப்பின் விளைவாய் பெரியார் சிந்தணைகள் 2 ம் பதிப்பு 2010 ம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிட உள்ளதை மகிழ்வுடன் பகிர்ந்தார்.

தோழர்கள் 200 படிகள் முன் பதிவு செய்வதாக உறுதி கூறினார்கள்.

பெரியார் மறைந்து 30 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அவரின் சிந்தணைகள் தலைப்பு வாரியாக படிநிலைகளை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்வது நம் தலையாய கடமையாகும்..
Posted by Picasa