Dec 29, 2009

இரத்தம் சுண்டும் கால்கட்டு....

தம்பி! நாங்கெல்லாம் பேசாத கடவுள் மறுப்பா? எல்லாம் ரத்தம் சுண்டுனா சரியாய் போய் விடும்..
இப்படி பேசுபவர்களை கண்டால் முதலில் சற்று எரிச்சல் வரும் இப்பெல்லாம் அனுதாபமே வருகிறது.சரி இவங்களுக்கு எப்ப இரத்தம் சுண்டுச்சுன்னு பார்த்த எல்லாம் ஒரு கால்கட்டு போட்ட சரியாயிடும் அங்கதான்..
புண் உள்ள இடத்தில் தான் கட்டுப்போட வேண்டும் சம்பிரதாயத்திற்காய் காலில் கட்டு போடுவதால் ஏற்படும் சமுகத்தில் ஏற்படும் புண் பற்றி யாருக்கும் கவலையில்லாததால் அப்புண் புரையோடியுள்ளது,அதற்கு களிம்பு தடவி சரி செய்ய முடியாது அறுவை சிகிச்சை அவசியம்.

நம் சமூகத்தில் சாதி முறை என ஆரம்பித்து பக்கங்களை நிரப்ப வேண்டிய அவசியமில்லை எனெனில் இக்கட்டுரையை சற்று முற்போக்கு பேசுபவர்களே படிக்கும் படி எழுதியுள்ளேன்(அவர்கள் படிச்சு கிழிச்சலே போதும்) என் கோபத்திற்கான விடை இறுதியில் ஆக நேரடியாக விசயத்திற்கு வருவோம்....

கடவுள் மறுப்பு பேசுபவர்களை இங்கே இருவிதமாக பிரிப்போம்.அதாவது நம் சமூகத்தில் நிலவும் நாம் விருப்பபட்டு ஏற்று கொண்ட அல்லது நம் மேல் திணிக்கப்பட்ட குடும்ப அமைப்பு முறை அதனால் ஏற்பட்ட தலைமுறை(வாழ்வியல் கால அளவு தொடர்ச்சி) என்பதன் மூலம்
1.முதல் தலைமுறை பகுத்தறிவுவாதிகள்
2.ஒன்றுக்கு மேற்பட்ட தலைமுறை பகுத்தறிவுவாதிகள்..

முதலில் 2 ம் வகையினரை பற்றி பார்ப்போம்

தன்னுடைய பெற்றோர் அல்லது அவர்களின் பெற்றோர் இயல்பாக பகுத்தறிவுவாதிகளாக இருப்பதால் இவ்வழிக்கு வந்தவர்கள், இவ்விடத்தில் இன்னொன்றையும் ஆராய வேண்டும்,கரடுமுரடான இப்பாதை வழக்கம்போல்(மூத்தோர் சொல்லே வேதவாக்கு) என்றிருக்காமல் தன் அறிவுக்கும் சற்று பொருத்தி பார்த்து சரி என வருபவர்களே என்பதில் மாற்று கருத்திருக்காது..
என்னுடைய மகனும் என்னைப்போல சிறந்த பகுத்தறிவுவாதியாக வாழ்கிறான் எனப்பெருமைப் பட்டுக்கொள்ளும் தந்தைக்கும்,மகனின் வளர்ச்சியை பார்த்து பெருமை கொள்ளும் தந்தை(மதவாதி) எவ்வித்தியாசமும் இல்லை,நோக்கம் உயர்வானது உணர்வு ஒன்றே!..

ஆக, இம்மாதிரியான தோழர்களுக்கு எதிர்ப்பிருக்காது.இவர்கள் வெளியில் பேசும் எதையும் வீட்டினுள்ளும் பேசலாம்.இவர்கள் தங்கள் வாழ்க்கையை சுதந்திரமாக அமைத்துக்கொள்ளலாம்.எவ்வித ஆதரவும் உண்டு..
இப்ப முதலாமவர்களையும் அவர்களின் வாழ்வியல் சிக்கல்களையும் பற்றி ஆராய்வோம்..

சாமி இல்லையின்னு சொன்னான்! பரவாயில்லை சீக்கிரம் சாமி நல்ல புத்தியை தருமுன்னு நிணைச்சோம்,பாவிப்பய இப்ப சாதியில்லைங்கறான்.நமம சனம் எப்படி ஏத்துக்கும்...
இப்படிபட்ட பேச்சுகளுக்கிடயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இவர்கள்...
பெரியாரியம் ஒரு ஈர்க்கதக்க தத்துவமா? இல்லை போதை தரும் பொருளா? அது ஒரு மருந்து காயமுள்ளவனுக்கு தேவைப்படும்.
இப்ப நம்ம பார்த்த முதல் தலைமுறை பகுத்தறிவுவாதிகளில் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து எல்லோருக்கும் இது ஒரு மருந்து,அவர்களின் இரட்டை குவளை,செருப்பில்லா கால் என எல்லாவற்றிருக்குமான மருந்து அது..

சரி, இவர்கள் இப்படியென்றால் பிற்படுத்தபட்ட சமுகத்திலிருந்து வந்து பெரியாரியம் பேசுபவர்களுக்கு இது மருந்தா? வலியே இல்லாதவர்களுக்கு எதற்கு மருந்து?இவர்கள் அடிப்படையில் மனிதநேயம் மிக்கவர்களாகவும் நன்றியுணர்ச்சியுள்ளவர்களாகவும் உள்ளார்கள்.

மேற்கூறிய இரு வேறுபட்ட நிலையிலுள்ள தோழர்களும் தங்களின் பொருளாதார போராட்டங்களிடையே வாழ்வை பல்வேறு இடையூறுகளிடையே எதிர்கொள்கின்றனர்.அவ்வகையில் திருமணம் எனும் நிகழ்வில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மிக அதிகம்.

அடிப்படையாய் முள்ளை முள்ளால் எடுப்பது போன்று சாதி ஒழிய சாதிக்குள் கலப்பு ஏற்பட வேண்டும்,அவ்வகையில் உருவாகும் வருங்கால தலைமுறைகள் சாதீய அடையாளம் அற்றவர் ஆகி விடுகிறார்கள்,அதற்கான முறைகளை வரிசைப்படுத்துவோம்..
1.சாதியை மறுத்து சடங்களுடன் நடைபெறும் திருமணங்கள்(குளிப்பாட்ட வண்னாண்,செருப்பு மாட்டும் சக்கிலியன,மந்திரம் ஓதும் பார்ப்பான்) பெரும்பாலும் பெற்றோர் அனுமதியுடன் நடைபெறும் காதல் திருமணங்களாக இருக்கும் இதில் கூட நாம் நிணைப்பது சாத்தியமே,சடங்குகள் முடிந்தவுடன் சுவடுகள் அழிந்து போகும் உருவாகும் சுவடு கலப்பினமாய் இருக்கும்.இதிலிருக்கும் இன்னோர் சிக்கல் பிறக்கும் குழந்தை அப்பாவின் சாதியாய் வளரும் அதன் திருமண வயதில் பெற்றோர் ஆதிக்கம் இருக்கும்.

2.சாதி மற்றும் சடங்குகளை மறுத்து நடைபெறும் சுயமரியாதை திருமணங்கள் இதைத்தான் தீர்வாக பெரியார் சொன்னார், இதிலும் இருவகை உண்டு காதல் திருமணங்கள் பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணங்கள்.
இதில் காதல் திருமணங்களாக நடைபெறுபவை போராட்டங்கள் நிறைந்தவையாக இருக்கும், 2ம் தலைமுறை பகுத்தறிவுவாதி என்றால் கூட காதலித்த ஆண் அல்லது பெண்னிற்காய் சரி சடங்கு தானே போனால் போகட்டும் என செய்து விட்டு,பிறகு எவ்வித அடையாளங்களும் இல்லாமல் வாழ்வார்கள்..

ஆக சாதியை மறுக்கும் திருமணங்களில் இழையோடுவது காதல் என மேற்கூறியவற்றில் பார்த்தோம், இயல்பாகவே காதலிக்காத தோழர்களின் நிலை என்ன?

என்னுடைய பையனுக்கோ,பொண்னுக்கோ உறுதியாய் வேறு சாதியில் தான் திருமணம் செய்து வைப்பேன் நான் செய்த தவறை அவர்களும் செய்ய வேண்டாம்...
நீ..யாரை வேண்டுமானாலும் காதலி, ஆனால் நம்ம சாதிக்குள்ள வேண்டாம்...
இது என் காது குளிர நான் கேட்ட பகுத்தறிவுவாதிகளாக உள்ள பெற்றோரின் வார்த்தைகள்...


இப்ப,நிணைத்து பாருங்க முதல் தலைமுறை சேர்ந்த காதலிக்க தவறிய தோழர்கள் நிலையை?

தொலைக்காட்சிகளில் வரும் விவாத நிகழ்ச்சிகளில் எதாவது ஒரு பிரச்சனையை பற்றி விவாதிக்கும் போது உங்க வாழ்க்கையில் நடந்திருக்கா? பொதுவா பேசறதெல்லாம் வேண்டாம் எனச் சொல்லுவார்கள், ஆக உளறல் நாயகன் பாணியில் இக்கட்டுரையை எழுதும் நானே கட்டுரையின் கருவும் ஆனேன், ஆம் காதலிக்க தவறிய கொள்கையில் உறுதியாக இருக்க நிணைக்கும் முதல் தலைமுறை தோழர்களில் நானும் ஒருவன்..எனக்கு ஏற்பட்ட அனுபவங்களாய் இக்கட்டுரையை தொடர்கிறேன்..

பொருளாதாரத்தில் என் சொந்த காலில் நிற்பதாலும் ஓரளவு தெளிந்த நிலையில் இருக்கும் பெற்றோர்களாலும் சுயமரியாதை திருமணம் என்பது சற்று போராடினாலும் எனக்கு எட்டுவதாகவே தெரிந்தது..

சரி, இருக்கவே இருக்கு மையங்கள் பதிவோம்,தேடுவோம் எனத் தேடினால் ஏமாற்றம்தான் மிச்சம்,தேடலில் எனக்கு கிடைத்தவை...

தமபி! உங்களுக்குத்தான் பெண் தேடறீங்களா? பெரியங்க யாரும் பேச மாட்டாங்களா?(அனுமதித்தே பெருசு எங்க போய் பேசறது)
எதுக்கு தோழா! ரிசுக் எடுத்துக்கிறீங்க,வீட்டில் சொல்ற மாதிரி செய்யுங்க! பிறகு நமக்கு தகுந்த மாதிரி மாத்திக்கலாம்(முதல்ல கருப்பு சட்டையை கழட்டி வீசுடா என கத்த வேண்டும் போல இருந்தது)

நான் இந்த துறையில் இருக்கிறேன், எனக்கு அதே துறையிலேயே இருக்கும் துணை வேண்டும்(வாழ்க்கை ஒப்பந்தமா?வியாபார ஒப்பந்தமா? என்ற கேள்வி எனக்குள் இப்போது)

படிப்பு குறைவா இருக்கே நான் நிறைய படிச்சுட்டேன்(வீட்டிலேயே சும்மா இருப்பவர்கள் கூட சொல்கிறார்கள்)

உங்க சாதிக்குள்ளேயே நம்ம ஆளுகளா தேடுங்க என அறிவுரைப்பவர்கள்.
நான் மேல் சொன்ன அனைவரும் பெரியாரியல்வாதிகள், நான் அவர்களை குறை சொல்லவில்லை இருந்தாலும் எதற்கு முக்கியதுவம் தருகிறார்கள் என்ற வருத்தமே...


இவ்விடத்தில் மற்றுமொறு முக்கிய நிகழ்வையும் சொல்லியாக வேண்டும், எனது பெற்றோர் சாதி ஆதிக்கம் நிறைந்த சாதியில் பிறந்தவர்கள், எனவே பார்க்கறதுதான் பார்க்கற பொழங்கற சாதியாப்பாரு என்றனர்.

சுயமரியாதை திருமண முறை சட்டமாக்கபட்டது தோழர் ஐவாவின் மகள் திருமணத்தின் போதுதான்,அப்போது மாப்பிள்ளை பார்த்த பெரியார்,பெண் வீட்டிற்கு தோழர்கள் நல்லகண்னு,மணலி கந்தசாமி ஆகியோரை அனுப்பியுள்ளார் அப்போது பெண்னின் தாயார் கேட்ட கேள்வி பையன் புழங்கற சாதியா?
பொதுவாகவே நாங்க சாதி பார்க்க மாட்டோம், ஆனா புழங்காத சாதியா இருந்தா மகள் சிரமப்படுவாள் எனக்கூறிய பகுத்தறிவுவாதிகள் ஆகியோரைப்பார்த்த போது என் அம்மா எவ்வளவோ முற்போக்கு..

ஒடுக்கப்பட்ட சமூகத்தை சார்ந்த பெண்னின் தந்தை எங்களிடம் கேட்டது பெற்றோர் சம்மதம் கட்டாயம் வேண்டும்(யாருக்கு திருமணம் என்பதே தெரியல போலும்)

அப்படி இப்படி என 2 ஆண்டுகள் ஓடிவிட்டன, இப்ப பிரச்சனை எப்படி போகுதுன்னா...

உனக்கு கொடுத்த காலம் முடிந்து விட்டது கருப்புசட்டைக்காரன் எவனும் உனக்கு பொண்னு தரப்போறதில்லை, இனி நாங்க பார்க்கிறோம் சரியான கட்டமைப்பு வைத்திருக்கும் மதவாதிகளுக்கு சுலபமான காரியம் இது...
இப்ப, என் நிலை சரி நம்ம சாதியா இருந்தாலும் பரவாயில்லை சடங்காவது இல்லாம பார்த்துக்கொள்ளலாம் என்ற என் நிலையில் இப்போது மற்றுமொறு அழுத்தம்...
கொள்கை பேசற வெங்காயங்கள் இப்படினா,மதவாதிகள் பையன் சாமி கும்பிடமாட்டானாம்,செயிலுக்கெல்லாம் போயிட்டு வந்தவனாம் என இருவர் தட்டி கழித்தவுடன் என் பெற்றோர் நிலை பொய் சொல்வது அதை உண்மையாக்க என் மீதான அழுத்தம்.

கடவுள் மறுப்பு கல்யானம் வரை பேசாதே,பார்ப்பான் வந்து திருமணம் செய்யும் நிலை ஏற்பட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்,கண்ட கட்சியில சேர்ந்து வாசுது இல்லாம வீட்டை கட்டி சிரமம் பாரு..
அட, இப்படித்தான் இரத்தம் சுண்டுவதா? இப்ப புரியுதுங்களா? முதல் பக்கத்தில் பெருசுக மேல ஏற்பட்ட அனுதாபம்...
நியாமோ இல்லையோ தெரியல இப்ப என் கோபமெல்லாம் தோழர்கள் மேலதான்..

தம்பி..ஆதிக்க சாதியில பிறந்து சொந்தமா தொழில் செய்யும் உங்களுக்கே சுயமரியாதை திருமணம் செய்வதில் இவ்வளவு சிரமம் என்றால் நானெல்லாம் என்ன செய்வது? ஒடுக்கப்பட்ட சமுகத்திலிருந்து வந்து ஒரு சாதி சடங்கு திருமணம் செய்த தோழனின் குரல் நிறைய சிந்திக்க வைத்தது..
தோழர்களே!
நாம் அடைய நிணைக்கும் சாதி,மத,வர்க்க பேதமற்ற நிலை வர குடும்பம்,சொத்து,வாரிசு அதை ஒட்டி நடைபெறும் திருமண அமைப்பும் மாற வேண்டும், இவைகள் உடைய வேண்டாம் உதிர வேண்டும்,நாம் தான் உதிர்க்க வேண்டும்...

ஒரு கோட்டை அழிக்காமல் அதை சிறிதாக்க பக்கத்தில் பெரிய கோடு போடுவது தாத்தா காலத்து பார்முலா, ஆம் பகுத்தறிவுவாதிகள் குடும்பங்களாக இணைய வேண்டும்,நிறைய குடும்ப விழாக்கள் நடைபெற வேண்டும் அதன் மூலமே நிறைய சாதிக்க முடியும்..

முற்போக்கு அமைப்புகள் சரியான வாழ்க்கை திட்டத்தை தயார் செய்ய வேண்டும், கருப்பு சட்டை தலைவர்கள் தாலி எடுத்து தருவதை நிறுத்த வேண்டும்..

சுயமரியாதை திருமணம் செய்வதாய் உறுதியாய் முடிவெடுத்தால் அது அவர் சார்ந்திருக்கும் அமைப்பின் வேலைத்திட்டமாய் மாற வேண்டும்...

என் அன்புத் தம்பிமார்களே! தயவு செய்து வேறு சாதியில் காதலியுங்கள் இல்லையேல் இவர்கள் உங்களையும் கட்டுரை எழுத வைத்து விடுவார்கள்...


Dec 9, 2009

பெரியாரியல் பயிற்சி முகாம்...


பெரியார் திராவிடர் கழகம் நடத்தும்- கோவை திருப்பூர் மாவட்ட தோழர்களுக்கான பெரியாரியல் பயிற்சி முகாம் வரும் சனவரி 01,02,03-2010 ஆகிய தேதிகளில் உடுமலைப்பேட்டை,திருமூர்த்தி மலை படகுத்துறை ருக்குமணி திருமண மகாலில் நடைபெறவுள்ளது.

முகாம் நிகழ்ச்சிகள்

சனவரி 01-வெள்ளி

காலை 10 மணி

சமுதாய நிலை பெரியாருக்கு முன்னும் பின்னும்-விடுதலை இராசேந்திரன்

மதியம் 3 மணி

பெரியாரின் கடவுள் மறுப்பு-கொளத்தூர் மணி

மாலை 5 மணி

குழு விளையாட்டு

மாலை 6 மணி

புராணங்கள்-சிற்பி இராசன்

இரவு 8.30

குறும்படம் திரையிடல்

சனவரி 02-சனி

காலை 9

பெரியாரின் அரசியல்-விடுதலை இராசேந்திரன்

பகல் 11

மார்க்சியம்-ஒரு அறிமுகம்-ச.தமிழ்ச்செல்வன்

மதியம் 2

பெரியார் நடத்திய போராட்டங்களின் பின்னனி-கொளத்தூர் மணி

மாலை 4

பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பு-வழக்கறிஞர் சு.துரைசாமி

மாலை 6

சோதிடம்-உலகம் தோன்றிய விதம்

இரவு 8

பங்கேற்பாளர் நேரம்

சனவரி 03-ஞாயிறு

காலை 9 மணி

பெரியாரின் திராவிடமும்,தமிழ் தேசியமும்-கொளத்தூர் மணி

பகல் 11 கழகத்தின் களப்பணிகள்-கு.இராமகிருட்டிணன்

தொடர்புக்கு

சு.துரைசாமி,திருப்பூர் மாவட்ட தலைவர் -98420 88466

கா.கருமலையப்பன்,திருப்பூர் மாவட்ட செயலாளர்-97883 24474

கோபால்,கோவை மாநகரத் தலைவர்-97877 22147

சாசித்,கோவை மாநகரச் செயலாளர்-98430 73082
Posted by Picasa

Dec 6, 2009

சமச்சீரும் மதவாதியும்...


சமச்சீர் கல்வித் திட்டத்தில் இந்து விரோத பாடத் திட்டங்களை திணிக்கக் கூடாது என்று இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

சமச்சீர் கல்வியில் முதலமைச்சர் ஆர்வம் காட்டும் போதே சந்தேகம் எழுந்தது. எல்லோருக்கும் ஒரே கல்வி என்ற பெயரில் இந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கவே இந்த தகிடுதத்தம் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்து விட்டது. இதை வரைவுத் திட்ட அளவிலேயே இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கிறது.மக்களால் புறந்தள்ளப்பட்ட ஈ.வெ.ரா.வின் இந்து விரோதக் கொள்கையைத் தூக்கிப் பிடிக்க முதலமைச்சர் முயல்கிறார். மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு தோற்றுப் போன நாத்திகப் புலம்பலைக் கல்வி என்ற பெயரில் மாணவர்களிடம் திணிக்க சதி செய்கின்றனர் தி.மு.க.வும் அதன் தலைவரும். சமச்சீர் கல்வி என்பது கல்வித் திட்டத்திலும் இருக்கும் நல்ல கருத்துக்களை ஒருங்கிணைப்பது என்ற பசப்பு வார்த்தையைக் கூறிய கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று வரைவுத் திட்டத்திலேயே இந்து மதத்தைக் கேவலப்படுத்தும் அவலத்தை வெளியிட்டுள்ளார்.மூன்றாம் வகுப்பு பாடத்தில் ஈ.வெ.ரா.வின் தாக்கம், நான்கில் மறுமலர்ச்சிப் பாடல்கள், விழிப்புணர்வு பாடல்கள், ஐந்தில் மூட நம்பிக்கை, ஆறில் கட்டுக்கதை, எழில் அன்னை தெரசா சேவை, சமூக அறிவியலில் இஸ்லாமியர் வருகை, எட்டில் விழாக்கள் அவசியமா? ஒன்பதில் ஆற்றுச் சமவெளி நாகரிகம் இதில் கிறிஸ்தவமும், ஜுடோயிசமும் வருகிறது. அலகு2 இடைக்காலம் நிலமானிய முறைதிருச்சபையின் பங்கு, இஸ்லாமியர் நன்கொடை, பத்தாம் வகுப்பில் ஈ.வெ.ரா.வின் விழிப்புணர்வு சிந்தனை. என்னவிதமான சமச்சீர் கல்வி இது?


மாமா நம்ம கவலை நியாயம்தானுங்க,

இப்படியெல்லாம் வருங்கால தூண்களுக்கு சொல்லி கொடுத்தா அப்பறம் எங்களக்கெங்கே அடிமைகள்?சரி அதெல்லாம் இருக்கட்டும் இதற்கெதற்கு அரசாங்கத்தை எச்சரிச்சுட்டு,நமக்கு வசதியா மூன்றாம் வகுப்பில் கண்ணன் வெண்னெய் திருடுனது, ஐந்தில் ராமன் வில்லை வளைத்தது, எட்டில் விநாயகன் பால் குடிச்சது,பத்தாம் வகுப்பில் அறிவியலில் கடலுக்கடயில் பாலம் கட்டுவதெப்படி,அப்பறம் பாலியல் கல்வி அவசியமுன்னு முற்போக்குவாதிகள் சத்தம் போடறாங்க அதிலெயும் எதாவது உருப்படியா செய்வதற்கு முன்னடி கோபியர் லீலை,100 மனைவி சமாளிப்பதெப்படின்னு நம்ம அயிட்டங்களை எடுத்து விடனும்.இதுக்கு போராட்டமெல்லாம் வேண்டாங்க அதுதான் நமம ஆத்தா சரசுவதி தாமரையில் சும்மாதானே உட்கார்ந்திருக்காங்க அவங்களுக்கு ஒரு கோமம் போடுவோமா பேசா......
Posted by Picasa

டிசம்பர் 6.....


வருட இறுதியில் டிசம்பர் 6 வந்தாலே ஏதோ சுனாமி வருவது போல ஒரே அளப்பாரை,வெற்றி திருநாள் எனக் காவிப்பயல்களும்,மறக்க முடியுமா என இசுலாமிய சகோதரர்களும் மாற்றி மாற்றி சொல்லி கொண்டே போனதில் வசதியாய் மறந்து போனது அம்பேத்கர் நிணைவு நாள்என்பதே,அம்பேத்கர் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடு, ஆக திட்டமிட்டே அவரின் நிணைவு நாளை தேர்ந்தெடுத்துகலகம் செய்த பார்ப்பன பயங்கரவாதிகளின் சூழ்ச்சியை முறியடிக்க இந்நாளில் அண்னாரது புகழை உரக்க முழங்குவோம்.

அம்பேத்கர் நிணைவாய்...

மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் அம்பாவாதே என்னும் கிராமத்தில் 1891 ஏப்ரல் 14 அன்று ராம்ஜி - பீமாபாய் ஆகியோரின் 14-வது குழந்தையாகப் பிறந்தார். மகர் என்னும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த அவர், இளம் வயதில் பல்வேறு துன்ப, துயரங்களை அனுபவித்தார். டாக்டர் அம்பேத்கர் தனது இளம் வயதில் ஒரு முறை மாட்டு வண்டியில் சகோதரருடன் பயணம் செய்து கொண்டிருந்தபொழுது, இவர்கள் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை வண்டிக்காரன் அறிந்ததும் உடனே மாட்டை அவிழ்த்து விட்டு அச்சிறுவர்களை குப்பையைக் கொட்டுவது போலக் கொட்டிய கொடுமை நிகழ்ந்தது.டாக்டர் அம்பேத்கர் மிகச் சிறந்த கல்வியாளர். பரோடா மன்னரின் உதவியுடன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் உயர்கல்வி பயின்றார். அங்கு அவர் 1915-ல் “பண்டைய இந்தியாவின் வர்த்தகம்’ என்ற ஆய்வுக்கு முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர், “இந்திய லாபப்பங்கு ஒரு வரலாற்றுப் பகுப்பாய்வு’ என்ற ஆய்வுக்கு கொலம்பியா பல்கலைக் கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. “பிரிட்டிஷ் இந்தியாவில் அரசு நிதியைப் பரவலாக்குதல்’ என்ற ஆய்வுரைக்கு 1921-ல் முது அறிவியல் பட்டம் பெற்றார். “ரூபாயின் பிரச்சினை’ என்ற ஆய்வுரைக்கு 1923-ல் டிஎஸ்சி பட்டம் பெற்றார்.
1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.
எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’
டிசம்பர் 6

குவளை ரெண்டு
மசுரு
ஒரே கல்லா....

தனியே
முடி திருத்தகம்-முட்டாள்
முதலில்
திருத்துமனதை...

சாதிகள் இல்லையடி
பாப்பாத்தீ....


சமபந்தி விருந்தாமே !!
கோமாதா குழம்பு வை...
Posted by Picasa

Dec 2, 2009

தேவநாத சங்கராச்சாரியர்.....

காஞ்சீபுரம், டிச. 1-
அர்ச்சகர் தேவநாதன் நேற்று மாலையில் விசா ரணை முடிந்து காஞ்சீபுரம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் மன்றம் அமைப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோர்ட்டு வளாகத்தில் அர்ச்சகர் தேவநாதன் வந்த போலீஸ் ஜீப்பை வழிமறித்து செருப்பு மற்றும் துடைப்பம் ஆகியவற்றால் தாக்கினர். சாணியை வாரி ஜீப் மீது வீசினர்.
தகவலறிந்த டி.எஸ்.பி. சமுத்திரகனி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆவேசமாக இருந்த பெண்களை கைது செய்து ஜீப்பில் ஏற்றிசென்றனர். பின்னர் அர்ச்சகர் தேவநாதனை போலீசார் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று நீதிபதி சுதா முன்பு ஆஜர்படுத்தினர்.
நீதிபதி சுதா அர்ச்சகர் தேவநாதனை மீண்டும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தேவநாதன் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அர்ச்சகர் தேவநாதனை செருப்பாலும், துடைப்பத்தாலும் தாக்கிய மக்கள் மன்ற அமைப்பாளர்களில் ஒருவரான மகேஷ் கூறியதாவது:-
கோவிலின் புனித இடமான கருவறையில் பெண்களுடன் காமவெறியாட்டம் நடத்திய காமகொடூரன் அர்ச்சகர் தேவநாதனை ஜாமீனில் விடுவிக்ககூடாது. மேலும் இந்த வழக்கில் பல உண்மைகள் வெளி வரவேண்டும். போலீசார் உரிய முறையில் விசாரணை நடத்தி பல உண்மைகளை வெளியில கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மத உணர்வுகளை சீர்கெடுத்த காமகொடூரன் தேவநாதனுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
தேவநாதனை எந்த காலத்திலும் எந்த கோவிலிலும் அனுமதிக்கவே கூடாது. அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். அர்ச்சகர் தேவநாதனுக்கு உரிய தண்டனை வழங்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம் . காமகொடூரன் தேவநாதனை எங்கு பார்த்தாலும் அவரை விரட்டி, விரட்டி செருப்பால் அடிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அர்ச்சகர் தேவநாதனுக்கு எதிராக கோர்ட்டு வளாகத்தில் போராட்டம் நடத்திய 47 பெண்கள் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 447 ஐ.பி.சி. (அத்து மீறி நுழைதல்), 143 சட்ட விரோதமாக கூடுதல், 341 வழிமறித்து தாக்குதல், 294 ஆபாசமாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்
காஞ்சீபுரம், டிச. 1-
காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் வைத்து அர்ச்சகர் தேவநாதன் பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து சிவகாஞ்சி போலீசார் தேவநாதனை பிடிக்க வலைவிரித்தனர். போலீஸ் தேடுவதை அறிந்ததும் அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
2 முறை காவலில் எடுத்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.
செக்ஸ் லீலையில் ஈடுபட்ட தேவநாதனை மச்சேஸ்வரர் கோவிலுக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு கருவறையில் பெண்களுடன் எவ்வாறு செக்சில் ஈடுபட்டேன் என்பதை தேவநாதன் நடித்து காட்டினார். அதன் பின்னர் கருவறையில் இருந்து ஒரு முக்கிய ஆதாரம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர்.
பின்னர் தேவநாதன் தன் செல்போனில் பதிவு செய்த செக்ஸ் காட்சிகள் எவ்வாறு வெளியானது என விளக்கினார். காஞ்சீபுரம் கவரை தெருவில் உள்ள ஒரு செல்போன் கடையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அந்த கடையை தேவநாதன் அடையாளம் காட்டினார்.
தேவநாதன் பல பெண்களுடன் செக்சில் ஈடுபட்ட காட்சிகள் செல் போனில் இருந்து ஒரு லேப்-டாப் (கம்ப்யூட்டர்) மூலம் டவுன்லோடு செய்யப்பட்டது தெரிய வந்தது. அந்த கடையில் இருந்து லேப்-டாப், உயர்ரக செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து தேவநாதனுடன் கோவில் கருவறையில் செக்சில் ஈடுபட்ட ஒரு பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த பெண், போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலம் வருமாறு:-
நான் தினமும் மச்சேஸ்வரர் கோவிலுக்கு செல்வேன். மிகவும் பயபக்தியுடன் சாமி கும்பிடுவேன். அங்கு அர்ச்சகராக இருந்த தேவநாதன் பார்ப்பதற்கு அப்பாவி போல நல்லவராக காட்சி அளித்தார். அவரிடம் என் கஷ்டங்களை சொல்லுவேன். அவரும் ஆறுதலாக பேசுவார்.
ஒருநாள் எனக்கு கோவில் பிரசாதம் என்று சர்க்கரை பொங்கல் கொடுத்தார். பின்னர் ஒரு சாக்லெட் கொடுத்து சாப்பிட சொன்னார்.
நானும் சாமிக்கு வைத்து பூஜை செய்தது என்று நம்பி பிரசாதத்தை சாப்பிட்டேன். சிறிது நேரத்தில் எனக்கு மயக்கமாக இருந்தது. என்னை கோவிலின் கருவறைக்கு அர்ச்சகர் தேவநாதன் அழைத்து சென்றார். என் ஆடைகளை எல்லாம் களைந்தார். நான் தடுக்க முயன்றேன். ஆனால் மயக்கமாக இருந்ததால் என்னால் முடியவில்லை. என்னை அர்ச்சகர் தேவநாதன் கருவறையில் வைத்து கற்பழித்து விட்டார். அதை தனது செல்போனில் படம் பிடித்து அடிக்கடி என்னை மிரட்டி பலமுறை என் கற்பை சூறையாடினார்.
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து தேவநாதன் மீது போலீசார் புதிதாக கற்பழிப்பு வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
போலீசார் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களை அனைத்தையும் காஞ்சீபுரம் கோர்ட்டில் ஒப்படைத்துள்ளனர். போலீஸ் விசாரணையில் காஞ்சீபுரத்தில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் விபசாரம் நடப்பதாகவும் அதில் அர்ச்சகருக்கு தொடர்பு உடையதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.இது போல மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்கள் பலர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர், நவ. 29-
காஞ்சிபுரம் மச்சேசுவரர் கோவில் அர்ச்சகர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் பெண்களிடம் செக்ஸ் லீலையில் ஈடுபடட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் ஏராளமான செக்ஸ் லீலையில் ஈடுபட்ட படம் ரகசிய காமிராவில் படமாக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆபாச படம் செல்போனில் தமிழ்நாடு முழுவதும் பரவி வருகிறது. மேலும் செல்போனில் டவுன் லோடு செய்து ஏராளமான சி.டி.க்கள் தயாரிக்க்பபட்டு வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் அர்ச்சகரின் செக்ஸ் சி.டி.க்கள் அமோக மாக விற்பனை ஆகிறது. அதாவது ஆண்டாள் கோவில் வீதி, பெரிய பெருமாள் மேலமாட வீதி பஸ் நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் அர்ச்ச கரின் செக்ஸ் சி.டி.க்கள் விற்பனை ஆகின்றன.
எனவே இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்
ஸ்ரீபெரும்புதூர், நவ. 29-
காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் அர்ச்சகராக பணி புரிந்து வந்தவர் தேவநாதன். இவர் கோவில் கருவறையில் வைத்து பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் முடுக்கி விடப்பட்டிருந்த நிலையில் காஞ்சீபுரம் கோர்ட்டில் தேவநாதன் சரண் அடைந்தார். அவரை 2 முறை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். போலீஸ் விசாரணையில் அர்ச்சகர் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்த பெண்கள் யார்-யார் என்பது தெரிய வந்துள்ளது.
அர்ச்சகர் தேவநாதன் 25 பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற சி.டி.க்கள் வெளியாகியுள்ளது. இதில் குண்டு பெண் ஒருவர் கருவறையில் வைத்து தேவநாதனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபடுவது போன்ற சி.டி.யும் ஒன்று அந்த பெண் யார் என்பது தற்போது அடையாளம் தெரிந்துள்ளது. கோவில் அருகே பூ வியாபாரம் செய்து வரும் அப்பெண்ணிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். பெரிய இடத்துப் பெண்கள் (தொழில் அதிபர்களின் மனைவிகள்) 3 பேரும் அர்ச்சகரின் வலையில் விழுந்துள்ளனர். 2 பள்ளி மாணவிகளின் வாழ்க்கையையும் தேவநாதன் நாசப்படுத்தியுள்ளார். விப சார அழகிகள் 3 பேரும் தேவநாதனுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இவர்கள் அனைவரிட மும் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இந்த விசாரணை மிகவும் ரகசியமாக நடத்தப்பட்டு வருகிறது.
அர்ச்சகர் தேவநாதன் தன்னுடன் உல்லாசமாக இருக்கும் பெண்களுக்கு பணத்தை வாரி வழங்கியுள்ளார். இதற்காக கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை பணத்தையும் திருடியுள்ளார்.
இந்த பணத்தை வைத்துக் கொண்டு நட்சத்திர ஓட்டல்களிலும் பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அர்ச்சகருடன் உல்லாசமாக இருந்த பெண்கள் பலர் தங்களது வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு தப்பிச்சென்று விட்டனர்.
இவர்களது பட்டியலையும் போலீசார் தயாரித்து வருகிறார்கள்.
இதற்கிடையே சிவகாஞ்சி போலீசாரிடம் இருந்து இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு நேற்று இரவு மாற்றப்பட்டது. துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன் தலைமயில் 2 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் விசாரணயை தொடங்கியுள்ளனர்.
இனி வரும் நாட்களில் இந்த வழக்கு விசாரணை சூடுபிடிக்கும் அப்போது அர்ச்சகர் தேவநாதன் பற்றி மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீபெரும்புதூர், நவ. 28-
காஞ்சீபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் வைத்து பெண்களை ஆபாச படம் எடுத்த அர்ச்சகர் தேவ நாதன் போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை முதலில் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். தற்போது அவரிடம் இருந்து மேலும் முழுமையான விவரங்களை பெறுவதற்காக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்த போலீசார் கோர்ட்டு உத்தரவுபடி 3 நாள் காவலில் எடுத்தனர்.
நேற்று இரவோடு இரவாக செக்ஸ் அர்ச்சகர் தேவநாதனை வேலூர் ஜெயிலில் இருந்து காஞ்சீபுரம் அழைத்து வந்தனர். இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் தலைமையிலான சிவகாஞ்சி போலீசார் பாலுச்செட்டிசத்திரம் போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் தேவநாதன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட வங்கி கணக்கு புத்தகங்கள், மெமரி கார்டுகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.
இதில் காஞ்சீபுரத்தில் உள்ள ஒரு வங்கியில் தேவநாதன் பெயரில் ரூ. 80 லட்சம் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து தினந்தோறும் தீபாராதனை தட்டுகளில் விழும் காசை நம்பி குடித்தனம் நடத்தி வந்த குருக்கள் வங்கி கணக்கில் லட்சக்கணக்கில் பணம் வந்தது எப்படி? என்று கண்டு பிடிக்கும் வேலையில் போலீசார் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மெமரி கார்டில் மேலும் 5 பெண்களின் ஆபாச படங்கள் பதிவு செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர்கள் யார்? எவ்வளவு நாட்களுக்கு முன்பு அந்த படம் எடுக்கப்பட்டது என்பன போன்ற கோணங்களில் தேவநாதனிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர்.
அப்போது அவர் ஒவ்வொருத்தரும் தங்கள் செல்போனில் அவா, அவாவுக்கு பிடித்தவாளை படம் எடுத்து வைத்திருப்பார்கள். அது நடிகையாக கூட இருக்கும். அதே போலதான் எனக்கு பிடித்த பொம்மனாட்டிகளை படம் பிடித்து வைத்திருந்தேன். இதெல்லாம் குற்றமென்னு சொன்னால் எப்படி? அவாளை யாருன்னு காட்டி கொடுக்கமாட்டேன் என்று அடம் பிடித்துள்ளார்.காட்டி வருகின்றனர்.அவரிடம் உரிய முறையில் விசாரித்து உண்மையை வெளிகொண்டு வரும் முயற்சியில் போலீசார் தீவிரம்
நன்றி- மாலைமலர்
இவ்வளவு நடந்த பின்னாடியும் தேவநாத சுவாமிகளை சங்கராச்சாரியர் ஆக்கலையினா சரியா இருக்காது சொல்லிபுட்டேன்.....