Mar 31, 2010

அங்காடித் தெரு

 படம் இங்கே பதிவு கீழே....
Posted by Picasa

அங்காடித் தெரு- அரோக்கியமான திரைப்படத்திற்கான பாதை...

கடந்த 6 மாதங்களுக்கு முன் சாலை ஓரங்களில் இந்தியா மேப் விற்பவர் ஒருவர் என்னிடம் தம்பி காலையிலிருந்து போணியாகலை வாங்கிக்குங்க தம்பி என்ற போது வாங்கி மாட்டிய தமிழ் நாடு வரைபடத்தையும்,

கோவை ராச வீதியில் பெரிய கடை ஒன்றில் அம்மா வாங்கி வந்த சட்டையையும்

மேலாடை கிழிந்து போன சிறுவன் ஒருவனிடம் வாங்கிய டீ.வி ரிமோட்டையும்

வெறித்து பார்த்த படி வெகு நேரம் அமர்ந்திருந்தேன், ஆம் நான் வசந்த பாலனின் அங்காடித் தெருவில் நுழைந்து வந்த பின் தான் இப்படி ஆயிற்று.

இணையங்களில் பரவலாக பார்த்த விமர்சனங்களும் இயக்குநரின் முந்தைய படைப்பான வெயிலுமே இக்கோடை வெயிலிலும் ஆர்வமாக படத்தை பார்க்க தூண்டியது.

சாமான்ய மக்களின் வாழ்க்கையை பற்றிய எத்துனையோ படங்களைத் தாண்டியும் அங்காடித் தெரு நம்மை ஈர்க்க காரணம் கொடிது கொடிது இளமையில் வறுமை என்பதை திரையில் சொல்லிய விதமே.

இந்திய சூழல் நமக்கு தந்திருக்கிற குடும்ப அமைப்பு முறை அது சார்ந்திருக்கும் சிக்கல்கள் சிறு வயதில் குடும்ப பாரம் சுமக்கும் நாட்டின் மிக பெரும்பான்மையான கல்வி வசதி அற்ற கடைக்கோடி கிராமத்தின் இளசுகளை கதாபாத்திரமாக்கி பெரு நகரங்களில் அவர்களின் இளமையையும் இரத்தத்தையும் உறிஞ்சுகிற அடுக்குமாடி கடையை களமாக்கியதே அங்காடித் தெரு

அத்தெருவில் இறங்கி நடந்தபோது,

பருவம் அடைந்த வேலைக்கார சிறுமியை வீட்டன் பின் புறத்தில் நாயோடு அடைத்து வைத்திருக்கும் பார்ப்பன பெண் இந்தாம்மா மாமா மடி ஆச்சாரமெல்லாம் பார்க்கிறவா அவளை கூட்டி போய் தீட்டு கழித்து வா என்ற போது அப்பெண்னையை வரவழைத்து நீராட்டுகிற சூத்திர சாமி என மத இல்லை மட நம்பிக்கைகளின் மேல் சம்மட்டி அடி வைத்திருக்கிறார் இயக்குநர்.

பார்வையற்ற வியாபாரி, கழிவறையில் கட்டணம் வசூலிக்கும் ஆள், குள்ள மனிதரைக் கைப்பிடித்துக் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் என ஒரே தெருவில் பல விதமான வாழ்க்கைகளைத் தொட்டுச் செல்லும் இடங்கள் நெகிழச் செய்யும் காட்சிகள் அட்டா நல்ல கவிதை ...

மசாலா படங்கள் கதை நாயகனுக்கான பஞ்ச் என அரை நிர்வானமாகத் திரியும் இயக்குநர்கள் வசந்தபாலனின் அங்காடித் தெருவுக்கு போய் நல்லதா 4 சட்டை வாங்கி போடுங்கப்பா...

Mar 15, 2010

வேருக்காய் விசும்பும் பூக்கள் ....

 


ஈழத்தமிழ் மாணவர் தோழர்.அபிதவன் அவர்களின் வேருக்காய் விசும்பும் பூக்கள் என்ற கவிதை தொகுதியின் வெளியீட்டு விழா நேற்று (14-3-10 ஞாயிறு) காலை 10 மணியளவில் கோவை பெரியார் படிப்பகத்தில் என்னுடைய தலமையில் நடைபெற்றது தமிழறிஞர் கோவை. ஞாநி அவர்கள் நூலை வெளியிட கோவை கு.இராமகிருட்டிணன் அவர்கள் பெற்றுக்கொண்டார் விழாவில் நூல் பற்றிய மதிப்புரையை கவிஞர்.அறிவன் அவர்களும் ஓவியர் கல்பனா நாகராசு மற்றும் கழகத்தின் ஆட்சிக்கழு உறுப்பினர் வே.ஆறுச்சாமி ஆகியோர் வழங்கினர்.

ஈழத்தமிழரின் சோகங்களையும் வலிகளையும் அழகாய் பிரதிபலித்த இந்நூலை எழுதியவர் ஈழ மாணவர் அபிதவன் கோவை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு பயின்று வருகிறார்.நல்ல தமிழில் அழகாய் நேர்த்தியாகவும் தன் முதல் பதிவை பதித்துள்ள அபிதவனின் எழுத்துக்கள் ஈழ மற்றும் தமிழக மக்களால் என்றும் போற்றப்படும்

விழாவிற்கு ஈழ மாணவர்கள் பெரியார் தி.க வினர் என 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்
Posted by Picasa

ராசிக்கல் " சேசாசலம்

 ரியாத்: பேராசிரியரும் சினிமாவில் அவ்வப்போது நடித்து வந்தவருமான பெரியார்தாசன் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாக அறிவித்துள்ளார்.

இனி தனது பெயர் அப்துல்லாஹ் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நீண்டக் காலம் தத்துவ இயல் பேராசிரியராக பணியாற்றி ஒய்வுப் பெற்றவர் பேராசிரியர் பெரியார்தாசன்.

திராவிடர் கழகத்தின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாத்திகராக வாழ்ந்த இவர் தனது இயற்பெயரான சேசாசலத்தை பெரியார்தாசன் என்று மாற்றிக் கொண்டார்.

புகழ்பெற்ற மேடைப் பேச்சாளரான இவர் பாரதிராஜாவின் திரைப்படமான கருத்தம்மாவில் நடித்தார். தொடர்ந்து பல படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டார்.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதிற்கு சென்ற வாரம் வருகை தந்த பெரியார் தாசன் அங்கு வைத்து இஸ்லாத்தைத் தழுவினார். நேற்று மார்ச் 12 அன்று ரியாதில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தான் இஸ்லாத்தைத் தழுவியதை அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

தான் பல மதங்களையும் ஆய்வு செய்ததாகவும் அம்மதங்களின் வேதங்கள் நேரடியாக இறைவனிடமிருந்து அருளப்படவில்லை என்றும் திருக்குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து அருளப்பட்ட வடிவில் இன்றும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"நான் ஊரறிந்த நாத்திகனாக இருந்தேன். பிறகு மத நம்பிக்கை தான் இவ்வுலக மற்றும் மறுவுலக வாழ்விற்கு உகந்தது என்று உணர்ந்தேன். இந்த தேடல் என்னை இஸ்லாத்திற்கு அழைத்து வந்தது" என்றும் அவர் ரியாதில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சனிக்கிழமை (மார்ச் 13) அன்று அவர் புனித மக்கா சென்று உம்ரா நிறைவேற்றுகிறார்.

ஒரு மதமும் வேண்டாம் - தம்பி

உண்மை உடையார்க்கேபெரு மதங்கள் என்னும் - அந்தப்

பேய் பிடிக்க வேண்டாம்

பாவேந்தர்


கருத்தம்மா எனக்கோர் உண்மை தெரிஞ்சாகனும்
Posted by Picasa

Mar 5, 2010

வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும்....

 வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் என காப்பீட்டு துறையின் பிரபலமான வாசகம் ஒன்று உள்ளது, அதைப்போல வாழ்ந்து மறைந்த பெரியார் தொண்டர் கோவை மாவட்டம் இருகூர் தோழர் சிவராசு அவரது முதலாமாண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டமானது அவரது மகன் சி.உமாசங்கர் (வயது 13 - 8 ம் வகுப்பு அரசு பள்ளியில் பயின்று வருகிறார்) கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியாக நடை பெற உள்ளது...

தான் வாழ்ந்த காலத்தில் நடுத்தர வர்க்க குடும்ப சூழ்நிலையிலும் பெரும் பொருளாதார நெருக்கடியிலும் தாய் தமிழ் பள்ளி நடத்தி வந்த தோழர் சிவராசு தன் 52 ம் அகவையில் காலமானார்.

மற்ற செய்திகள் நிகழ்ச்சிக்கு (07.03.2010 ஞாயிறு) பின்....
Posted by Picasa

Mar 3, 2010

கதவை திற கொசு வரும்...

 

 அன்று கீதா உபதேசம் செய்தவன் கண்னபிரான் பிறகு கோபியரோடு கொஞ்சி மகிழ்ந்தார்.

இன்று கீதா உபதேசம் செய்பவன் சாமியார் நித்தியானந்தா பிறகு நடிகையோடு கொஞ்சி மகிழ்கிறார்.

ஆக முதலில் கண்னபிரானை கைது செய்யுங்கள் பிறகு எங்க சிங்கத்து மேல கை வைங்க.....

குரு வழியில் நடக்கும் சீடனுக்கு எத்தனை சோதணைகளடா??
Posted by Picasa

Mar 2, 2010

சுவாமி நித்தியானந்தா ???????

 அட, இப்பத்தான் சன் செய்திகள் தொலைக்காட்சியில் சாமியார் நித்தியானந்தா பற்றி செய்தி வந்தது உடனே அந்தளை கைது செய்யனுமெனவும் ஆசிரமத்தை அடித்தும் சுவரொட்டியை கிழித்தும் தங்களின் எதிர்ப்பை காட்டியுள்ளனர் சிலர்...

நம்முடைய கேள்வியெல்லாம் சுவாமிச்சீ அவர்கள் என்ன தப்பு புதுசா செஞ்சுட்டாரு என்பதுதான் வீடியோ காட்சிகளை பார்த்தால் அந்த ர நடிகையை சுவாமிச்சீ கட்டாயபடுத்தவில்லை என்பது தெரிகிறது ஆக வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்களின் விருப்பங்களோடு இச்சைகளை தீர்த்துக்கொள்வது எப்படி தப்பாகும்..

சரி அப்ப தப்பு எங்கதாங்க இருக்குது நம் தமிழ் மக்களின் எண்ணங்களில் தான், ஆம் எவன் சாமியாருன்னு வந்தாலும் அவன் முற்றும் துறந்தவன், கடவுளுக்கு நேரடி புரோக்கருன்னு அவன் பின்னடி போற எண்ணங்களில் தான் தவறு, என் இனிய தமிழ் சொந்தங்களே அதை நிறுத்துங்கள் எல்லாம் சரியாகி விடும்......

சுவாமிச்சீயை பொறுத்தவரை எது நடந்ததோ(மாத்திரை போட்ட பின்னாடி) அது நன்றாகவே நடந்தது...

சுவாமிச்சீயை அவமானப்படுத்தும் முக்கியமாக இந்து மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக ஏதாவது செய்தால் நாங்கள் சும்மா பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்...
Posted by Picasa