Mar 4, 2012

நல்ல கேட்கிறாங்கய்யா டீடெய்லு...

எங்க பாப்பவுக்கு (9 மாதம்) மொட்டை அடித்துள்ளோம் பார்பவர்கள் எல்லோரும் கேட்கும் கேள்வி. எங்கே மொட்டை(எந்த கோவிலில்) அடிச்சீங்க? நாங்கள் எங்கள் வீட்டில் வைத்துத்தான் மொட்டை அடித்தோம்..வெகு மக்கள் நம்பிக்கை ஒரு பவுதீக சக்தி...
அவர்களுக்கு என் பதில் வேறெங்கே தலையில் தான் என்று (நல்ல கேட்கிறாங்கய்யா டீடெய்லு...)

ஏன்?ஏன்?ஏன்?

திரைப்படங்களில் நையாண்டி செய்யப்படும் சோதிடன்,வாஸ்துக்காரன்,பெயரியல் நிபுணர் போன்றவர்கள் மக்களால் பெரிதும் மதிக்கவும் நம்பவும் படுகிறார்கள்,ஆனால் திரைப்படங்களில் ஆதிக்கம் செலுத்துகிற புரட்சியாளர்கள்,சாதி ஒழிப்பவர்கள் மக்களால் பெரிதும் புறக்கணிக்கபடுகிறார்களே....ஏன்?

Feb 28, 2012

மகா மகத்துக்கு பெரியாரின் அழைப்பு.....

1956 இல் கும்பகோணம் மகாமகத்தின் போது பெரியார் அவர்கள் இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டார்கள்.

திருடர்களே,

பிக்பாக்கெட்களே,

மைனர்களே,

சினிமா ரசிகர்களே!

மகாமகக் கூட்டத்துக்கு இன்னும் ஒரு வாரம்தான்!

உங்களுக்கெல்லாம் நல்ல வேட்டை!!

பக்தர்கள் அழைக்கிறார்கள்! புறப்பட்டுச் செல்லுங்கள்.

பாவம் என்று பயப்படாதீர்கள்! உங்கள் திருப்பணியை முடித்துவிட்டு மூத்திரக் குட்டையிலே ஒரு முழுக்குப் போட்டுவிட்டால் போதும்.

பெரியார் திராவிடர் கழகம்...

தமிழ் நாட்டில் இன்று உள்ள இயக்கங்கள் பற்றி அதன் நோக்கம் தலைவர்களிடம் கேட்டால் என்ன சொல்லுவர்கள் சந்தேகம் தான்....

இதோ பெரியார் திராவிடர் கழகம் பற்றி அதன் தலைவர் கொளத்தூர்.மணி...

இந்திய சமூகத்தில் குறிப்பாய் தமிழ் சமூகத்தில் அதில் நிலவும் சிக்கல்களை புரிந்து கொண்டு அவற்றுக்கான தீர்வுகளை துல்லியமாக வகுத்தெடுத்து தோழமையுடன் அணி திரட்டி... துணிவுடன் களமிறங்கி.. துவழாமல் போராடி காலம் காலமாய் புறகணிக்கப்பட்டு வந்த உழைப்பாளிகளை பாட்டாளிகளை பெண்களை துறைதோறும் பங்கெடுக்கவும் முன்னேற்றவும் உழைத்து மறைந்த மாமேதை பெரியாரின் கொள்கைகளை பரப்பவும் செயல்படுத்தவும் அமைக்க பட்டதும், பெரியாரின் கொள்கைகளை பொறுப்புடன் பரப்பவும் அக்கறையுடன் நடைமுறைப்படுத்தவும் எவ்வித எதிர்பார்ப்புமற்றும் வளமான பொருளாதார பின்புலம் எதுமற்றும் கொள்கை உணர்வும் நிறைவேற்றுவதில் துடிப்பும் மட்டுமே கொண்ட கொள்கை மறவர்களின் ஒருங்கிணைப்பே.... தமிழ் நாட்டில் இன்று உள்ள இயக்கங்கள் பற்றி அதன் நோக்கம் தலைவர்களிடம் கேட்டால் என்ன சொல்லுவர்கள் சந்தேகம் தான்....

இதோ பெரியார் திராவிடர் கழகம் பற்றி அதன் தலைவர் கொளத்தூர்.மணி...
இந்திய சமுகத்தில் குறிப்பாய் தமிழ் சமுகத்தில் அதில் நிலவும் சிக்கல்களை புரிந்து கொண்டு அவற்றுக்கான தீர்வுகளை துல்லியமாக வகுத்தெடுத்து தோழமையுடன் அணி திரட்டி... துணிவுடன் களமிறங்கி.. துவழாமல் போராடி காலம் காலமாய் புறகணிக்கப்பட்டு வந்த உழைப்பாளிகளை பாட்டாளிகளை பெண்களை துறைதோறும் பங்கெடுக்கவும் முன்னேற்றவும் உழைத்து மறைந்த மாமேதை பெரியாரின் கொள்கைகளை பரப்பவும் செயல்படுத்தவும் அமைக்க பட்டதும், பெரியாரின் கொள்கைகளை பொறுப்புடன் பரப்பவும் அக்கறையுடன் நடைமுறைப்படுத்தவும் எவ்வித எதிர்பார்ப்புமற்றும் வழமான பொருளாதார பின்புலம் எதுமற்றும் கொள்கை உணர்வும் நிறைவேற்றுவதில் துடிப்பும் மட்டுமே கொண்ட கொள்கை மறவர்களின் ஒருங்கிணைப்பே.... பெரியார் திராவிடர் கழகம்

அப்பாவும் நானும்...

எப்போதும்
இரண்டாவது ரேங்க்
வாங்கும் என்னுடனே..
முதல் ரேங்க்
வாங்கிய சினிவாசனையும்
சேர்த்தே
பாராட்டி செல்வார் அப்பா...

அந்த காலாண்டு தேர்வை
மறக்கவே முடியாது

பண்ணையத்திலிருந்த
சுப்பன் மகன் வாங்கிய
இரண்டாவது ரேங்கிக்கு
விழுந்தது உதையெனக்கு...

அப்பா மேல் கோபமெனக்கு..

ஈரோட்டுக்கல்லூரியில்
படித்த பின்
கோபம் பரிதபமாய் மாறியிருந்தது....

Feb 22, 2012

ஏதாவது செய்யனுங்க...

படித்த பள்ளிக்கு எதாவது செய்ய வேண்டுமென எங்கள் பகுதி கட்டுமான பொறியாளர் நண்பர்கள் திட்டமிட்டோம்…
இன்று மதிய உணவு இடைவேளையில் பள்ளிக்கு போனபோது அதிர்ச்சி..கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்தில் அதிக மாணவர்களை கொண்ட பள்ளியாம் (316) அரசூர் துவக்கப்பள்ளி..
316 மாணவர்களுக்கும் ஒரே கழிப்பிடம்...
ஆசிரியை ஒருவர் துணையுடன் நாங்கள் சென்ற போது டீச்சர் பாய்ஷ் உள்ளே போய் கதவை சாத்திட்டாங்க என சத்தம்..5 பசங்க வெளியே வர 5 மாணவிகள் உள்ளே சென்றார்கள்..அங்கு நிற்க கூட முடியவில்லை....தண்ணிர் வசதி இல்லை...

இப்போது வரை அதன் தாக்கம் குறையவில்லை..விரைவில் இந்நிலை மாற ஆவண செய்ய உறுதியேற்று வந்தோம்..

தொழில் வளம் நிறைந்த பகுதியில் இப்படியென்றால்...பின் தங்கிய மாவட்டங்களில்...ஏதாவது செய்யனுங்க...

அரசு பணி பதவிகளில் இருப்பவர்கள் கட்டாயமாய் தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க குறைந்த பட்சம் ஆசிரியர்களாவது... ஏதாவது செய்யனுங்க... ஏதாவது செய்யனுங்க... ஏதாவது செய்யனுங்க... ஏதாவது செய்யனுங்க...

Feb 16, 2012

தப்பு என்ன செஞ்சீங்க...

நேற்று கலைஞர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தேன்
தமிழர்களே....தமிழர்களே.... நீங்கள் என்னை தூக்கி கடலில் போட்டாலும் கட்டுமரமாகத்தான் மிதப்பேன்....
நம் கேள்வியெல்லாம்....

கட்டுமரமாக மிதப்பதெல்லாம் இருக்கட்டும் உங்களை தூக்கி கடலில் போடும் அளவிற்கு தவறு என்ன செய்தீர்கள்......

மத வியாதி...

என்னிடம் 100 இளைஞர்களைத் தாருங்கள்; நான் இந்த உலகையே மாற்றிக் காட்டுகிறேன்'' என்று சிகாகோ மாநாட்டில் கூறானார் சுவாமி விவேகானந்தர்......

நம்ம கேள்வியெல்லாம் 100 இளைஞர்களை தந்த பின் இந்த உலகை மாற்றுவதில் என்ன வீரம் தெளிவான வலிமையான 100 இளைஞர்களை உருவாக்குவதே சிறப்பு....சரி எப்படியே உலகம் மாற வேண்டியிருப்பதையாவது ஒப்புக்கொண்டார்களே...

பார்பனர்கள் பற்றி பெரியார்...

3 சதவீதம் மட்டுமே உள்ள பார்ப்பனர்களையை குறை கூறிக்கொண்டு இருக்கிறீர்களே அவர்கள் 3 என்றால் நாம் 97 பிறகு எதற்கு எப்போதும் அவர்களை பற்றி பேசுகிறீர்கள் என பெரியாரை பார்த்து கேட்டதற்கு அய்யா பதில் இதுதான்........
நீங்க சந்தைக்கு போறீங்க அங்க பொருள் வாங்க வருகிறவன் 97 பேர் திருட்டு பயலுக 3 பேரு அப்பறம் என்னத்துக்கு பணப்பையை கவனமா பார்த்துக்கெறீங்க என்றார்......
அதாங்க பெரியார் வேற யாராவதா இருந்த 10 பக்கம் கட்டுரை எழுதி இருப்பாங்க..

குடி முழுகிப்போச்சாம்...

நினைவு தெரிந்த நாளிலிருந்து
வாரத்தில் 4 நாள் மட்டுமே
அப்பா வீட்டில் இருப்பார்....

மிட்டாய்க்காய் அழுதபடி
அப்பாவை கேட்டால்
மவுனமே பதிலாய் அம்மா...

புள்ள தாவணி போட்டுட்டா
இனியுமா முனங்கியபடி அம்மா ....

இப்பெல்லாம் எங்களுடனே
எப்போதும் அப்பா.....

இன்று என் காதலன்
வேறு சாதி
அம்மா குடி முழுகி போச்சாம்...

பாரதியாரு ????????

வெள்ளிபனி மலைமீதுலாவுமோம்...... பள்ளி தளமனைத்தும் கோயில் செய்குவோம் எங்கள் பாரதம் தேச என தோள் கொட்டுவோம்...

பாரதியாரு பள்ளிகூடத்தெல்லாம் கோவில் மாதிரி நடத்த சொல்கிறானு நம்மாளுக பள்ளிகூடத்தில ஆயுதபூசை நடத்தறானுக... ஆனா அது பள்ளிவாசல் எல்லாம் கோவிலா மாத்துற இந்துத்துவாங்க முதலில் மசூதியை இடிக்க சொன்னது அந்த கவிஞருதானுங்க.....

விகடன் வரவேற்பறையில் ...

 


தோழர்கள் அ.ப.சிவா, நீலவேந்தன் மற்றும் பெதிக தோழர்களின் முயற்சியால் எடுக்கப்பட்ட 'துக்கம்' குறும்படம் குறித்த பதிவு - விகடன் வரவேற்பறையில் வெளி வந்திருக்கிறது.....
Posted by Picasa