தினமலர் செய்தி
பெற்றோருக்கு தெரியப்படுத்திய பிறகே காதல் திருமணத்தை பதிவு செய்ய முடிவு: மே.வங்கத்தில் புதிய நடைமுறை அமல்
ஜனவரி 10,2010,00:00 IST
கோல்கட்டா:பெற்றோருக்கு தகவல் தெரியப்படுத்திய பிறகே காதல் திருமணத்தை பதிவு செய்யும் விதத்தில் மேற்கு வங்கத்தில் புதிய சட்டவிதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. படிக்கிற காலத்திலோ அல்லது வேலை தேடுகிற காலத்திலோ, இளம் வயதினர் காதல் வயப்பட்டு காதலிக்கின்றனர். மதம் மாறி, இனம் மாறி, தகுதி, அந்தஸ்தை விட்டுக் கொடுத்து காதலிப்பவர்களை பெரும்பாலும் பெற்றோர் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால், காதலர்கள் தங்களது நண்பர்கள் அல்லது உறவினர் துணையுடன் சாட்சி கையெழுத்து போட்டு, போலியான சான்றுகளை அளித்து, திருமணம் செய்து கொள்கின்றனர்.
இப்படி திருமணம் செய்யும் பலரது வாழ்க்கை நிலைப்பது இல்லை. வாழ்க்கையில் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். சமயத்தில் தற்கொலைகள் கூட நடக்கின்றன. இதைத் தடுக்கும் விதத்தில் மேற்கு வங்கச் சட்டம் மற்றும் நீதித்துறை, திருமண சட்டத்தில் புதிய திருத்தங்களை செய்துள்ளது.அதன்படி காதலர்கள் பதிவு திருமண விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, அவர்களது சமீபத்திய புகைப் படங்களை அளிக்கவேண்டும். பெற் றோர் அல்லது பாதுகாவலரின் பெயர், முகவரி பற்றிய அசல் சான்றுகளை சமர்ப்பிக்கவேண்டும். காதலர்கள் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை இணைக்கவேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை விதித்துள்ளது.
இந்த ஆவணங்கள் அனைத்தையும் பெற்ற பின்னர், கடிதம் மூலம் பெற்றோரது சம்மதத்தை கோருகிறது, அவர்கள் சம்மதம் கிடைத்த பின்னரே திருமணத்தை பதிவு செய்கிறது. இப்படி பல விதிமுறைகளை வகுத்துள்ளது.அரசின் இந்த முடிவு குறித்து, மாநில சட்ட அமைச்சர் மொய்த்ரா கூறுகையில், காதலர்கள் போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, பெற் றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்கின்றனர். பின்னர் பல எதிர்மறையான விளைவுகளை சந் திக்கின்றனர். ஏற்கனவே, இது போன்று பல நடந்துள்ளன. அதை தடுக்கும் விதத்தில் இந்த திருத்தங் கள் செய்யப்பட்டுள்ளன' என்று கூறினார்.
பார்த்தீங்களா!!!
என்ன கொடுமை சரவணன் இது??
பொது உரிமை வராத நாட்டில எப்படி பொதுவுடமை வரும்?
நீங்க எத்தனைதான்
நியாயமான காரணம் சொன்னாலும் மிகப்பெரிய அநியாயங்க இது, குசராத்தில் இச்சட்டத்தை இயற்றியிருந்தால் சரி கலாச்சார காவலர்கள் அப்படித்தான் பண்னுவாங்க சொல்லி ஆறுதல் அடைந்திருக்கலாம், அருவாளில் கழுத்தை அறுத்து சுத்தியை தலையில போட் காதல் ரோசாக்கள் என்ன செய்யும் பாவம்....
காதல் திருமணங்களில் மணமுறிவு அதிகம் என்ற கருத்து பொதுவாகவே நிலவி வருகிறது. நன்றாக மனது ஒத்துப்பொகும் இருவர் மட்டும் எடுக்கும் முடிவே காதல் திருமணங்கள்,அவர்களுக்குள் ஏற்படும் மணமுறிவும் அவர்களாலேயே தீர்மானிக்கப்படுகிறது அதற்கான காரணியாக இம்முட்டாள் சமுகத்தின் அழுத்தம் வேண்டுமாணால் காரணமாக இருக்கலாம்.
சமிபத்தில் வெளியான நாடோடிகள் என்ற திரைப்படத்தில் கூட இதே போன்ற நச்சு கருத்து விதைக்கப்பட்டிருக்கும், பிரிந்து வாழும் காதல் இணைகளை நண்பர்கள் கட்டாயமாக இணைப்பார்கள் எனென்றால் அவர்களை நண்பர்களே பல்வேறு இழப்புகள் மூலம் சேர்த்திருப்பார்கள், இப்ப நம்ம கேள்வியேல்லாம் பெற்றோர்களால் நடத்தப்படும் திருமணங்களில் பிரிந்து வாழும் இணைகளை சேர்க்க பந்தல்காரன்,சமையல்காரன்,கேடிப்பயல்கள் ராகு,கேது அதைச் சொல்லும் சோதிடன்,பிச்சை வாங்கிய பார்ப்பான் என எல்லோரும் வருவார்களா ? என்பதே!!!
இந்த பெற்றோர்கள் எத்துகிட்டா அப்பறம் எதுக்கு பதிவு அலுவலகம் வர்றாங்க? அப்பறம் இந்த மேசர்,மைனர் இதெல்லாம் என்னங்க? சரி,போலி ஆவணங்களை பெற்றோர் தருவதில்லையா? பல சாதி வெறியர்கள் சாதிக்காக வயதை குறைத்து சொல்வதை அறிந்திருக்கிறோம்., இணைகளின் பெற்றோர்களை உறுதி செய்ய டி.என்.எ சோதனையும் செய்யுமா வங்க அரசு?
இதே நிலமை நம்மளுக்கு நாளைக்கு வராமல் இருக்க நாம் செய்ய வேண்டியதென்ன..
தமிழ்நாட்டில பாருங்க யாரும் சாதி பேர தன் பெயருக்கு பின்ன போடுவதில்லை என மேடைகளில் முழங்காமல் சாதி மறுப்பு திருமணங்கள் அதிகமாக நடக்க வைக்க வேண்டும்....அதற்காய்,
1.சாதி மறுத்து திருமணங்கள் செய்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்..
2.சாதி மறுத்து திருமணம் புரிபவர்களின் வாரிசுகளை சாதியற்றவர்கள் என பதிவு செய்யச் சொல்லி அவர்களுக்கென தனி இட ஒதுக்கீடு கல்வியில் தர வேண்டும்.
3.சாதி மறுப்பு திருமணங்களுக்கு தடை செய்பவர்களை தே.பா சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
4.தமிழ் பெயர் வைத்தால் வரி விலக்களிப்பது போல் இவர்களுக்கு தனி குடும்ப அட்டை கொடுத்து வரிகள் இல்லாது எல்லாப் பொருட்களும் தர வேண்டும்.
5.கல்விக்கடன்,வீட்டுக்கடன்,மற்ற வங்கி பரிமாற்றங்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் தரப்பட வேண்டும்
தோழர்களே!! இந்த 5 கோரிக்கைகள் சும்மா சாம்பிள் தான் இது போல உங்களுக்கும் தோணும் கோரிக்கைகளை சேருங்கள் இதை ஒரு இயக்கமாக்கி வரும் பிப் 14 காதலர் திணத்தன்று அரசுக்கு அனுப்பலாம்...
Jan 18, 2010
Subscribe to:
Posts (Atom)