Feb 15, 2011

LOOOOOOOOVE

காதலர் தினம் முடிந்த பின் மீண்டும் காதலுக்காக குரல் காதலர் நாளில் வழக்கம் போல நம் தோழர்கள் காதலை போற்ற இந்த மாமா பசங்க கையில் தாலியோடு பூங்காக்கலில் உள்ள காதலர்களுக்கு திருமணம் செய்ய முயல மற்றும் சிலர் நாயுக்கும் பூனைக்கும் திருமணம் செய்தார்கள்.

அதுக்கு பார்ப்பான் மந்திரம் ஓதுறான் இப்ப நம்ம சந்தேகமெல்லாம் இந்த பூளு கிராசு காரனுகளை நோக்கி எதோ வயித்து பொழப்புக்கு கிளியை வைத்து சாலை ஓரங்களில் சோதிடம் காட்டுபவனை எதிர்க்கும் நீங்கள் இதற்கு என்ன செய்ய போகிறீர்கள்.

எப்போதும் மதவாதி காதலுக்கு எதிரிதான் ஏன்

காதல்-கடவுள் ஓர் ஒப்பீடு

கடவுள் சாதியை காப்பாற்ற மதவாதி வைத்திருக்கும் கருவி
காதல் சாதியை உடைக்கும் கருவி ஆக அவன் காதலை எதிர்ப்பதில் ஆச்சரியமில்லை

ஆக பெரியார் பேரன்கள் எப்போதும் காதலை ஆதரிப்போம் என்னை சில நண்பர்கள் கேட்டார்கள் பெரியாருக்கும் காதலுக்கும் என்ன சம்பந்தம்
என் பதில் முதன் முறையாக காதலுக்காக தாடி வைத்தவர் பெரியார் என்றேன் எப்படி என்றால்

வழக்கமாக நம்மை போல முகச்சவரம் செய்து கொண்டிருந்தவர் தான் அந்த நேரத்தைக்கூட என் மக்களுக்கு எதாவது சொல்ல எழுத படிக்க ஒதுக்கி மக்கள் மேல்கொண்ட காதலால் தாடி வைத்தவர் பெரியார் ஆக காதல் செய்யுங்கள் தம்பிகளே வேறு சாதியாய்பார்த்து காதலியுங்கள்.....