Oct 2, 2011

செயந்தி...காந்தி

 



இன்னிக்கி காந்தி செயந்தியாமா காந்தி தெரியும் யாரப்பா அது செயந்தி
சரி அவரு தேசப்பிதாவாமா ...அவரு பிறந்த நாளில் நம்ம அயிட்டம்....

காந் தி பற்றிய பல முரண்கள் நம்மிடமுன்டு ..... ஒரு முறை அவரு மதுரை வந்தப்ப தொடர் வண்டி பயணத்தின் போது வயலில் கோவணத்துடன் வேலை செய்து கொண்டிருந்தவர்களை பார்த்து
விட்டு அய்யகோ என் நாட்டு மக்களுக்கே மேலாடை இல்லை இனி எனக்கும் சட்டை வேண்டாமென மேலாடை துறந்தாராம்....

நம்ம கேள்வியெல்லாம் வயலில் வேலை செய்யும் உழைப்பாளர்கள் அந்த உடையில் இருப்பதுதான் இயல்பு ரேமன்ட் சூட் போட்டுட்டா வயல் வேலை செய்ய முடியும்...சரி உங்க மக்களின் நிலையை உலகுக்கு காட்ட காந்தி அப்படி செய்தார் என வியாக்கனம் பேசுவோருக்கு ..... சட்டை இல்லா மக்களை பார்த்து தன் சட்டையை துறப்பவன் தலைவனில்லை அவர்களுக்கு சட்டையை பெற்று தர போராடுபவனே தலைவன் அப்படி இருந்தவர் இருவர் வடக்கே அம்பேத்கர் தெற்கே பெரியார்.....
Posted by Picasa

வாகை சூட வா....

 


நீங்கெல்லாம் திருந்தவேமாட்டிங்களா.... களவானி இயக்குநரின் அடுத்த படைப்பு அப்படின்னு போனா திரையில தெரியிற நம்பியாரை சுடுவது முருங்கை காயுடன் நுழையும் பாக்கியராசுனு ஒரே கலக்கல் தான் போங்கன்னு பார்த்தா கண்டேடுத்தான் காடு செங்கல் சூளை.....நீங்கெல்லாம் திருந்தவேமாட்டிங்களா..

செங்கல் புழுதியில ஒரு குத்து பாட்டு பைட்டு அப்படின்னு போடாமா சின்னபுள்ள தனமா ஆடு,மீனு,குளம் குருவின்னு யாருங்க கேட்டா மண் கலச்சாரம் மொழி வாழ்வியல் பற்றியெல்லாம்....நீங்கெல்லாம் திருந்தவேமாட்டிங்களா..

ஒலகம் போற வேகத்தில நாங்கெல்லாம் கார்பரேட் துணையுடன் உண்னாவிரதம் நேரத்தில குழந்தை தொழிலாளர் கல்வி அப்படின்னு 1960 மேட்டர்களை பேசிட்டு,சரி போணப்போகுதுன்னு பார்த்த "காசு கொடுக்கின்ற எல்லோரையும் சாமி என்று நினைத்து விடாதீர்கள் , அவனும் ஒரு முதலாளி தான் " எப்படி இயக்குநரே இதுவா புரட்சி உங்களுக்கெல்லாம் ஒண்னுமே தெரியல புரட்சின்னா 10 பக்கம் வசணம் பேசனும் அப்படியே அடுத்த சீன்ல ஒரு அயிட்டம் சாங்கு இதுதாங்க புரட்சி

அட அது கூட இல்லையின்னா அந்த செங்கல் சூளை முதலாளி கிட்ட கொள்ளை அடிச்சு கதைநாயகன் ஒரு பள்ளிக்கூடம் கட்டியிருக்கலாம்....அதென்னங்க பாட்டு செங்கல் சூளைக்காரா,தஞ்சாவூரு மாடத்தின்னு கேட்டா மண் மணம் அப்படின்னு சொல்வீங்க .....நீங்கெல்லாம் திருந்தவேமாட்டிங்களா..

என்னவோ போங்க நல்ல சூதானமா பொழைச்சக்குங்க.... ஆனா ஒன்னூங்க.....
விதைச்சுட்டிங்க...
அறுவடை பண்னுடிவீங்க....
நல்ல இயக்குநர்,தரமான படம் அப்படின்னு....
வாகை சூடியாச்சுங்க .....
தொடர்ந்து சற்குணத்துடம் இது போன்ற படங்களையே எதிர் பாக்கும்......
Posted by Picasa