இராணுவ தாக்குதல் வழக்கில் கைதாகி சிறையில் இருந்ததுபற்றி சில கேள்விகளை வெளி நாடுவாழ் தமிழர்கள் நம்மிடம் வைத்துள்ளனர் அதை எனக்கு தோழர் தமிழச்சி அவர்கள் அனுப்பி வைத்தார் அவை...
கேள்வி: இந்திய ராணுவத்தை தாக்கிய சம்பவம், ஏற்கனவே ஒருதலைபட்சமாகசெயல்படுவதாக நீங்கள் கூறும் இந்திய அரசின் வெறும் வாய்க்கு அவல் கொடுத்ததாய் ஆகாதா? இதனால் இந்திய அரசின், தமிழகத்தை ஓரம்கட்டும் செயல்கள் அதிகரிக்கத்தான் செய்யுமேயொழிய குறையாது என்பதை நீங்கள் உணரவில்லையா?
இளவரசன் அவர்களே ஈழப்போராட்டத்தில் ஒருதலைபட்சமாக செயல்படும் இந்திய அரசுக்கு தமிழகம் ஒரு பொருட்டல்ல தெற்காசியாவில் தன் வல்லாதிக்கத்தை நிறுவ சீனாவுடன் நடக்கும் போட்டியும் ஆளும் நபர்களின் தனிப்பட்ட வெறுப்பும்தான் .
ஈழ அதரவு என வரும் போது தனி ஈழம் அமைந்தால் தமிழ்நாடு தனியே பிரிந்து விடும் என்ற பல்லவியை பாடி இந்திய ஒருமைப்பாடு காப்போம் என்ற பெயரில் சிங்கள எச்சில் எலும்பு தின்னும் பார்ப்பனிய ஊடகங்கள் மக்களை முளைச்சலவை செய்து வருகின்றன அதையும் தாண்டி தமிழ் மக்கள் வாக்குகள் சில்லறை விற்பனைக்கு தயாராக இருக்கும் போது மத்திய அரசுக்கு தமிழகத்தை சர் செய்ய 5 அமைச்சர் பதவிகள் போதும் ஈழ ஆதரவு தேவையில்லை அதை மத்திய அரசும் உணர்ந்துள்ளது..
அரசியல் கைதிகளாக நடத்தப் பட்டீர்களா? இல்லை கிரிமினல் குற்றவாளிகளுடன் தங்க வைக்கப்பட்டீர்களா?
அரசியல் கைதிகளாகவே நடத்தப்பட்டோம்.கிமனல் குற்றவாளிகளை சந்திக்கலாம் ஆனால் உணவு தங்குவது வேறு இடம்.
கடைசி வரை தேசையப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தான் கைதில் இருந்தீர்களா?
இல்லை வேறேனும் வழக்கு பதியப்பட்டதா?
கைதான 52 பேரில் 5 பேர்தான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
நீங்கள் ஈழ மக்களுக்காக செய்த இப்போராட்டம், எதேனும் ஒரு வகையில் அவர்களுக்கு உதவியதென்று எண்ணுகிறீர்களா? மேலும், தற்போதுள்ள நிலையில் உங்கள் போராட்டம் வேறு வடிவங்கள் எடுக்குமா? ஆம் எனில் அவை என்ன?
நிச்சயமாய் எங்களால் மறிக்கப்பட்ட அயுதங்களால் செத்து மடியும் எம் ஈழத்தமிழர் மரணத்தை தள்ளி போட முடிந்த்து மற்றபடி நாங்கள் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை இருந்தாலும் இண அழிப்பின் போது கூட்டம் மட்டும் நடத்தி பேசிக்கொண்டிருக்காமல் ஏதோ செய்த நிறைவு..உறுதியாக எங்கள் போரட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது வடிவங்கள் சூழலை பொறுத்தே..
மற்ற பதில்கள் அடுத்த
அஞ்சலில்தோழமையுடன்அ.ப.சிவா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment