தோழர் அதிஅசுரனின் கருந்திணை பற்றி...
http://thozharperiyar.blogspot.com/2010/02/blog-post.html
கடைசிகாலத்தில் சொந்த ஜாதிக்காரனின் தயவு வேண்டும்’ என்பதற்காக வாழ்நாளெல்லாம் தாம் பேசிவந்த கருத்துக்களுக்கு மாற்றான காரியங்களைச் செய்யவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு பெரியார் தொண்டர்கள் ஆளாகி றார்கள். பெரியார் இயக்கங்களில் தீவிரமாக பணியாற்றும் தோழர்கள்கூட தமது வாரிசுகளின் எதிர்காலத்தை எண்ணி பயந்து தம் இல்லங்களில் காதுகுத்து, கருமாதி, பூப்புனிதநீராட்டுவிழா, தாய்மாமன் சீர், பங்காளிச்சீர், மொய் முறைகளை செய்திட வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.
ஒரு இந்து கடைசிவரை இந்துவாகவே வாழமுடிகிறது. தனது வாரிசுகளை இந்துவாகவே உருவாக்க முடிகிறது. ஒரு கிறிஸ்துவராலும், இஸ்லாமியராலும் தனது மதத்தை இறுதிவரைப் பின்பற்ற முடிகிறது. ஆனால் ஒரு பெரியாரியல்வாதி இறுதிக்காலங்களில் இந்துவாக ஜாதிக்காரனாக மாறவேண்டிய அவலம் உள்ளது.
ஒரு ஆரியன் தான் தனது பண்பாட்டைக் கட்டிக்காப்பது மட்டுமல்லாமல் நமது திராவிடர் பேரினத்தையும் அவனது ஆரியப் பண்பாட்டை பின்பற்றச் செய்து விட்டான். அந்த ஆரியத்துக்கு எதிரான களத்தில் நிற்கும் பெரியார் தொண்டர்களாவது தமது வாழ்விலாவது ஆரியத்துக்கு எதிரான அறிவியல் பண்பாட்டை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தோழர் தங்கள் முயற்சிகளை நான் நன்கறிவேன் கண்டிப்பாக என்னால் முயன்ற உதவிகளை செய்வேன்.
நமது மேற்கூறிய நிலைக்கு அடிப்படை காரணம் என்ன என்று பார்த்தால் இரண்டு மட்டும்தான்
1.மாற்றிக் கொள்ள முடியும் என வெகு மக்களுக்கு தெரியாதது.
2.பகுத்தறிவுவாதிகளாகிய நாம் வெகு தோலைவு செல்ல வேண்டியுள்ளது.
மதவாதிகள் அதிகமாக தனி மனித தேவைகளை பற்றி பேசுகிறார்கள்,நாம் சமூகத்தைப் பற்றி பேசுகிறோம், ஆக தியானத்திற்கு செல்ல தயராக உள்ள மக்கள் போராட்டங்களுக்கு வருவதில்லை,தனக்கு அவசியம் ஏற்படும் போது வரலாம் என்றும் வந்தாலும் அடக்குமுறை கண்டு அஞ்சுபவர்களும் எராளம்.
முதலில் நாம் நமக்கான தெளிவான வாழ்வியல் முறைகளை(ஏற்கனவே உள்ளவை, புதியவை) வகுக்க வேண்டும் வெளி நாட்டு கூற்று ஒன்று உள்ளது 'நாத்திகர்களை ஓர் அமைப்புக்குள் கோண்டுவருவது பூனைகளை ஒன்று திரட்டுவதற்கு ஒப்பானது, ஏனெனில் அவர்கள் சுதந்திர சிந்தனையாளர்கள்'- என்று.
ஒருவனுக்கு இருக்கும் பொய் நம்பிக்கை மன பேதலிப்பு,பல பேருக்கு இருந்தால் அது மதம்,தனி மனிதனை குணமாக்க மருத்துவன் போதும், சமூகத்தை குணமாக்க சமூக மருத்துவர்கள் தேவை, ஆம் அது நாம் தான்.
எந்த ஒரு அமைப்பு மற்றும் செயல் முறைகளில் இருக்கும் குறைகளை(இழிவு,அடிமைத்தனம்) சுட்டிக் காட்டி ஒருவரை மாற்று வழிக்கு வரச் சொல்ல அவ்வழி நெறிப்படுத்தப்பட வேண்டும்.
சரி, இங்கே அடிமைப்பட்டவன் எப்படியுள்ளான் நாம் எப்படியுள்ளோம் ஓர் எடுத்துக்காட்டு
முகூர்த்த நேரம், வாசுது நேரம்,நல்ல நேரம், இவ்வகையான முட்டாள்த்தனமான கட்டுப்பாட்டிலாவது அவர்கள் செயல்களை(இழிவானதை) சரியாக செய்கிறார்கள், ஆனால் நாம் என்ன செய்கிறோம் தோழர்களே இவ்வித கட்டுப்பாடுகள் எதுவுமில்லாமல் நம் செயல்களை(உயர்வானவை) நேரம் தவறி செய்கிறோம், 5 மனிக்கு நிகழ்ச்சி தொடங்க வேண்டுமென்றால் நடத்துபவர்கள் 4 மனி என அழைப்பது வருபவர்கள் 4 மனியின்னா எப்படியும் 6 ஆகி விடும்(போர் களத்திலிருந்தா எதிரியை வீழ்த்த நேரமாகி விட்டதா?) என வருவது.
சற்று நிதானமாக சிந்தியுங்கள் சொந்த வாழ்வில் சரியான நேரத்தை கடைபிடிக்காமல் எப்படி சமூக மாற்றத்தை விரும்ப முடியும்.
ஆக, தோழர்களே கடந்த தலைமுறைகளை பாதுகாப்ப தோடு வரும் நம தலைமுறை பகுத்தறிவுவாதிகள் சமூகத்தோடு ஒன்றி இறுதி வரை கொள்கையோடு வாழவும் விவாதிப்போம்.
பூனைக்கு யார் மணி கட்டுவது பூனைகளே கட்டட்டும் கருந்திணை அதற்கு உதவட்டும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment