Mar 31, 2010

அங்காடித் தெரு- அரோக்கியமான திரைப்படத்திற்கான பாதை...

கடந்த 6 மாதங்களுக்கு முன் சாலை ஓரங்களில் இந்தியா மேப் விற்பவர் ஒருவர் என்னிடம் தம்பி காலையிலிருந்து போணியாகலை வாங்கிக்குங்க தம்பி என்ற போது வாங்கி மாட்டிய தமிழ் நாடு வரைபடத்தையும்,

கோவை ராச வீதியில் பெரிய கடை ஒன்றில் அம்மா வாங்கி வந்த சட்டையையும்

மேலாடை கிழிந்து போன சிறுவன் ஒருவனிடம் வாங்கிய டீ.வி ரிமோட்டையும்

வெறித்து பார்த்த படி வெகு நேரம் அமர்ந்திருந்தேன், ஆம் நான் வசந்த பாலனின் அங்காடித் தெருவில் நுழைந்து வந்த பின் தான் இப்படி ஆயிற்று.

இணையங்களில் பரவலாக பார்த்த விமர்சனங்களும் இயக்குநரின் முந்தைய படைப்பான வெயிலுமே இக்கோடை வெயிலிலும் ஆர்வமாக படத்தை பார்க்க தூண்டியது.

சாமான்ய மக்களின் வாழ்க்கையை பற்றிய எத்துனையோ படங்களைத் தாண்டியும் அங்காடித் தெரு நம்மை ஈர்க்க காரணம் கொடிது கொடிது இளமையில் வறுமை என்பதை திரையில் சொல்லிய விதமே.

இந்திய சூழல் நமக்கு தந்திருக்கிற குடும்ப அமைப்பு முறை அது சார்ந்திருக்கும் சிக்கல்கள் சிறு வயதில் குடும்ப பாரம் சுமக்கும் நாட்டின் மிக பெரும்பான்மையான கல்வி வசதி அற்ற கடைக்கோடி கிராமத்தின் இளசுகளை கதாபாத்திரமாக்கி பெரு நகரங்களில் அவர்களின் இளமையையும் இரத்தத்தையும் உறிஞ்சுகிற அடுக்குமாடி கடையை களமாக்கியதே அங்காடித் தெரு

அத்தெருவில் இறங்கி நடந்தபோது,

பருவம் அடைந்த வேலைக்கார சிறுமியை வீட்டன் பின் புறத்தில் நாயோடு அடைத்து வைத்திருக்கும் பார்ப்பன பெண் இந்தாம்மா மாமா மடி ஆச்சாரமெல்லாம் பார்க்கிறவா அவளை கூட்டி போய் தீட்டு கழித்து வா என்ற போது அப்பெண்னையை வரவழைத்து நீராட்டுகிற சூத்திர சாமி என மத இல்லை மட நம்பிக்கைகளின் மேல் சம்மட்டி அடி வைத்திருக்கிறார் இயக்குநர்.

பார்வையற்ற வியாபாரி, கழிவறையில் கட்டணம் வசூலிக்கும் ஆள், குள்ள மனிதரைக் கைப்பிடித்துக் குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண் என ஒரே தெருவில் பல விதமான வாழ்க்கைகளைத் தொட்டுச் செல்லும் இடங்கள் நெகிழச் செய்யும் காட்சிகள் அட்டா நல்ல கவிதை ...

மசாலா படங்கள் கதை நாயகனுக்கான பஞ்ச் என அரை நிர்வானமாகத் திரியும் இயக்குநர்கள் வசந்தபாலனின் அங்காடித் தெருவுக்கு போய் நல்லதா 4 சட்டை வாங்கி போடுங்கப்பா...

No comments:

Post a Comment