May 17, 2010

நம்மாளா ????

 



எதிர் வீட்டு
சரசு மக ஓடிப் போயிட்டா...
பையன் நம்மாளா ????

நம்மூர் பேங்குக்கு
புது மேனேசரு....
எப்படி நம்மாளா ????

ரொம்ப நாளா
கேட்கனுமினிருந்தேன்....
தம்பி நம்மாளா ????

வசதி இல்லைனா
தொலஞ்சி போகுது .....
பொண்னு நம்மாளா ????



அய்யா நாங்க
கணக்கெடுக்க வந்திருக்குறோம்
நீங்க எந்த சாதி......

அய்யோ...அநியாயம்.....
அரசாங்கம் சாதி கேக்குது !!!!!!!
Posted by Picasa

No comments:

Post a Comment