May 23, 2010
மங்களூர் விமான விபத்து...
கனவு தின்ற பறவை
கட்டிடங்கள் சூழ்ந்த
மொட்டை மாடி
நிலவை இரசித்த படி
கனவுகள் காண்பதுண்டு
அண்ணனும் நானும் ...
இரவின் அழகில்
ஊறும் பறவை
விளக்கடித்து
காற்றை கிழித்தபடி ...
மதிய பாடவேளைக்கு
முழுக்கு போட்ட படி
விமான நிலையம் செல்வோம்
பறவை காண ...
விமானப்பயணம்
கனவாக இருந்திருக்கலாம் ...
கட்டிடங்கள் சூழ்ந்த
மொட்டை மாடி
நிலவை இரசித்த படி - தனியே
அதோ
கனவு தின்ற பறவை !
அந்த விமான விபத்தில்
இறந்தவர் பட்டியலில்
அண்ணன் பெயர்
இல்லாமல் இருந்திருந்தால் ...
விபத்தில் உயிரிழந்த அணைவரின் குடுபங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment