Feb 26, 2009

கடையாணிகள்

வடக்குத் தெருவில்
கட்டம் போட்ட படி
சடுகுடு ஆட்டம்.

சனி மதியங்களில்
சின்ராசு காட்டு
திருட்டுச்சோளக்கதிர்.

வாய்க்கால் மேட்டில்
மீனும் பிடிப்பதுண்டு.

ஒத்தையடி பாதையில
ஒய்யார நடை
பள்ளி நோக்கிய படி.

இப்படித்தானடி - தோழி
பள்ளிப்பருவத்திலே.
சம்பரதாய படுகுழியில்
புறந்தள்ளி - உனை
புதைத்தார்கள்
பூப்பெய்தி விட்டாயாமே?
விடலைக்கால
விளையாட்டு
மூச்சுமுட்ட கல்லூரி
முதல் மாணவனாய்
அப்பாவுக்கு ஆறுதலாய்
அரசாங்க உத்தியோகம்
அப்பப்ப நினைப்பது உனை !
அன்று
விதவைகள் உதவித்தொகை
விண்ணப்பத்துடன் - நீ
எரித்தே விடலாம்
காலச்சக்கரத்தையும்
சில
கடையாணிகளையும் ...

No comments:

Post a Comment