அப்படி இப்படி என ஒருவழியாக இந்தபூனைக்கும் மணி கட்டியாகிவிட்டது யாரு கட்டினாங்க என்பது முக்கியமல்ல ஆனா ரொம்ப நல்லதுங்க இந்த விசயம். நம்ம தாய் திருநாடான தமிழ்நாட்டின் ஒவ்வொரு தெருவிலும் ஏதோ ஒருவகையில் இலங்கையில் வாழும் அப்பாவி தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இப்ப என்ன பிரச்சனையினா எல்லோரும் சேர்ந்து கதவை தட்டுறோம் ஆனா ஏனோ கதவு திறக்கமாட்டேங்குது. மூட்டை தூக்கும் சுப்பன் முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைவரும் தட்டியாயிற்று. தமிழனும் தட்டியாச்சு, இந்தியனும் தட்டியாச்சு, முதல்ல நான் இந்தியன் அப்புறம்தான் தமிழன்கறவனும் தட்டியாச்சு ஒன்னும் முடியலை. திரைப்படத்துல ஒரு நகைச்சுவை காட்சி ஒன்னு வரும் அடிவாங்குபவன் முகத்துல சோடாவை தெளிச்சு பின்பு தெளிவா அடிப்பாங்க, அதுபோல டியர் பிரதர்ஸ் அண்டு சிஸ்டர்ஸ், இந்த பிடியுங்க ! சாப்பிட்டுவிட்டு தெளிவா அடிவாங்குங்க எனச் சொல்லி நிவாரணமும் கொடுத்தாயிற்று. இந்த சூழலில் நம் அண்ணன் தம்பிகளுக்கு மிக முக்கியமா சில விசயங்களை சொல்லியாகணும்
1. இலங்கை தமிழர்கள் எனச் சொல்லாதீங்க, அவர்கள் ஈழத்தமிழர்கள்
2. அவர்கள் பூர்வீககுடிகள் அங்கே பிழைக்க போனவர்கள் அல்ல
3. தங்கள் மீதான மேலதிக அடக்கு முறை காரணமாகவே ஆயுதமின்றி போராடுகிறார்கள் இதைச்சொல்லப்போனா இங்க இவனுக ( அதுதான் காவிரித்தண்ணி வாங்க வக்கில்லாத, மும்பையில அடிபட்டு வந்த, சேட்டானுககிட்ட முல்லை பெரியார் அணையில நீர்மட்டத்தை உயர்த்த முடியாத தமிழ்நாடு வாழ் இந்தியர்கள் ) தெல்லை தாங்கமுடியல.அட இந்த இறையாண்மையை எங்கேயோ நேத்துதா புதுச கண்டுபிடிச்ச மாதிரி ஒரே அளப்பாரை, எனக்கு தெரிஞ்சு புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா ? என்பதுக்கு அடுத்தபடியா தமிழ் நாட்டுல கேட்கப்பட்ட கேள்வி இந்திய இறையாண்மைக்கு ஆபத்து வருமா ? என்பதுதான். இறையாண்மை என்பது என்ன ? உங்களுக்கு தெரியுமோ தெரியாதோ நான் என் மக்களுக்கு சொல்லியாகணும். சொந்தங்களே ! இறையாண்மை என்பது ஒருநாட்டு மக்கள் தங்களின் பாதுகாப்புக்காக அந்நாட்டு அரசாங்கத்தை நம்பி இருப்பது என்பது இதைச்சொன்ன உடனே போனவாரம் வூட்டுல யாருமில்லாத நேரமாபாத்து பின்கதவை உடைச்சுட்டு பீரோவை கடப்பாரை போட்டு நெம்பி நம்ம சுப்பன் வீட்டுல கொள்ளையடிச்சுட்டு போயிட்டாங்க, அதுக்கு அந்த கிறுக்குபயபுள்ள இந்திய இறையாண்மையே போச்சு அப்படின்கறான். அதுபோல அவனுகல ஆதரிக்கறீங்க இவனுகல ஆதரிக்கிறீங்க. அய்யோ ! இந்திய இறையாண்மை பாதிக்குது. அப்பப்பா ! உங்க நாட்டுப்பற்றை பார்த்து நமக்கு உச்சந்தலையில முடி நட்டுகிச்சு போங்க இறையாண்மை பற்றிபேசும் gentelmen( முக்கியமா கோயிலுக்குள்ள பிச்சை எடுக்கும் gentelmen) உங்களுக்கு சின்னதா ஒரு கேள்வி அதுவும் முதல்மரியாதை பாணில மரியாதையான கேள்வி எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும் ? மும்பையில பீகார்வாசி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதும், அதற்கு முன்னும் பின்னுமாக மும்பை, பீகார் மாநிலங்களில் நடந்த பிரச்சனையின்போதும் ... ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்குசெல்லும் தொடர்வண்டியை எரித்தபோதும், மராட்டியத்திற்குள் தொடர்வண்டிகளே நுழையாது என நடுவன் அமைச்சர் எச்சரித்த போதும் ... உச்சநீதிமன்றமே அறிவித்தாலும் சரி, நிபுணர்குழுவே அறிவித்தாலும் சரி, அணையின் அடியில் நாலுகல்லு நழுவி நிக்குது நீர் மட்டத்தை உயர்த்தினா அணை உடைஞ்சுபோகும் என சிமெண்ட் எடுத்துபோயி அணையை அடைக்க துடிக்கும் பொலிட்பிரோ புகழ் அச்சுதானந்தன் அறிவித்தபோதும் ... ஒக்கேனக்கல் எங்களது காவிரி நீர்பற்றி எவனும் பேசப்படாது என கர்நாடகம் நடுவர்மன்ற தீர்ப்புகளை மீறி அறிவித்தபோதும் ...உங்கள் இறையாண்மைக்கு நீங்கள் லீவு விட்டுட்டீங்களா gentelmen?
இதுவரையிலும் தமிழ்நாடு முழுவதும் ஈழத்தமிழர் பிரச்சனைக்காக ஏதேனும் ஒருவகையில் வன்முறைகள் நடந்துள்ளதா இல்ல அஞ்சு வருசத்துக்கு ஒருமுறை வடக்கிருந்துவந்து வண்க்கம் போட்டு ஓட்டு பிச்சை எடுத்தப்ப நாங்க பிச்சை போடலையா, பிறகு எதற்காக இப்படி இறையாண்மை போனதாக துள்ளி குதிக்கிறீர்கள் அப்படி உங்க நாட்டுப்பற்று ?! நியாயமானதா உங்களுக்குபட்டா வெச்சுக்குங்க ஈழத்தமிழர் பிரச்சனையில உங்க நிலைப்பாடு என்ன என்று கேட்ட, அங்க அமைதி நிலவவேண்டும் என்கிறீர்கள். எப்படி gentelmen அது ? எங்களுக்கு ஒன்னுமே புரியலே, கேட்டா பேச்சுவார்த்தை மூலம் தீர்வுவேண்டும் பல்லவியா பாடறீங்க. சரி வாங்க குந்தி பேசலாமுனு கூட்பிட்ட அவ போரை நிறுத்தமாட்டீங்கிறான் அப்புறம் எப்படி gentelmen குந்தி பேசறது. கடந்து வந்த பேச்சு வார்த்தை பாதையை திரும்பிப்பார்த்தா அதுல தமிழனுக்கு இழைத்த துரோகங்கள் எவ்வளவு என்பது தெரியும், அதுசரி அதை நீங்க எதுக்கு பார்க்கறீங்க உங்களுக்கு உங்க பொழப்பு சரியாப்போனாச் சரி, இந்த இறையாண்மை விசயத்தில் கை யைத் தூக்கிக்கொண்டு gentelmen பின்னாடி செல்லும் சொந்தங்களே புரிந்துகொள்ளுங்கள் ஈழப்பிரச்சனைக்கு ஒரே தீர்வு மிகத்துல்லியமான தீர்வு தனிஈழம்தான் என... உலகம் முழுவதும் பரவிக்கிடக்கும் ஒருஇனம் ஏறக்குறைய 10 கோடி மக்கள் தொகை கொண்ட ஒர் இனம். அதற்காக தனியாக ஒர் நாடு அமைவதால் இங்கே யாருக்கு என்ன ஈழப்பு ? தேங்காய்போல ஒரு தீவு அதில் நம் குடுமியை தனியாகப் பிரிப்பதுதான் பிரச்சனை, அதனால் இங்கிருக்கிற குடுமிப்பசங்களுக்குத்தான் எரியுது என்றால் அதில் அவனுக இனப்பற்று நீங்க ஏனுங்க கை யை தூக்கிட்டு முன்னால போறீங்க என்பதே நம் கேள்வி.அதுக்கு முன்னாடி இந்த gentelmen சில பேர் நடத்துற பத்திரிக்கைகளை பத்தி சொல்லியே ஆகணும்... ஒன்று தெளிவாக புரிஞ்சுக்கங்க gentelmen நீங்க போரில் இறந்ததாக சொல்லப்படும் போராளிகளின் எண்ணிக்கை ஒருநாள் ஈழ மக்கள் தொகையைத் தாண்டாம பார்த்துக்குங்க... அவனவன் பொண்டாட்டிக்கு சேவை செஞ்சு அவன் புருசன்னு பேர் வாங்கறதுதான் பெருமை அதைவிட்டுட்டு அடுத்தவன் பொண்டாட்டிக்கு சேவை செஞ்சு அவன் கூப்பிட்டு உங்களுக்கு விருதெல்லாம் தந்தானுகளாம உங்க சேவையே சேவை போங்க... உங்க பாசையில பத்திரிகா தர்மம் என்பது சந்திரிகா தர்மமா ? இதோ 80 சதவீதம் பிடிபட்டாகிவிட்டது. அதோ முக்கிய நகரம் கைப்பற்றியாகிவிட்டது. இப்பதான் முக்கிய தளபதியை கொன்றோம் இதெல்லாம் வருச கணக்கில் போடக்கூடாதுங்க gentelmenஅப்படி பிடிச்சிருந்தா உலகெல்லாம் பிச்சையயடுக்கும் உங்கள் நண்பன் ஏன் இன்றும் ஆயுதப்பிச்சை எடுக்க நாடு நாடாப்போறான். எதற்கும் கொஞ்சம் நஞ்சமாவது ஈழத்தமிழர்களையும், போராளிகளையும் உயிரோடு இருக்கிறார்கள் என்று எழுதுங்கள், இல்லையினா நாளை ஈழம் மலர்ந்ததற்கான சிறப்பு மலரோ, தலையங்கமோ எழுதும் போதும் உங்க கணக்குப்படி யாருமே இல்லாத நாட்டிற்கு எப்படி எழுதுவது என முடியை பிச்சக்கனும் soory gentelmen உங்களுக்குத்தான் முடியே இல்லியே soory. இவனுகள விட்டுத்தொலைங்க, நூலுல முதுகு சொறியர பசங்க திருந்தவே மாட்டாங்க, அப்புறம் பார்த்துக்கலாம் இவனுகள... உங்களுக்கென்ன பிரச்சனை, நல்லா படிச்சு பார்த்து, தேவையினா வரலாற்றை மீண்டும் ஒருமுறை ஆய்வு செஞ்சு ஒரே குரலில் கைகளை ஒன்றுசேர்த்து சொல்லுங்க. ஈழத்தமிழர் பிரச்சனை தீர ஒரே தீர்வு தனிஈழம்தான் என... நம் வரிப்பணத்தில் செய்யும் உதவிகளை நிறுத்து என மத்திய அரசுக்கு ஒரே குரலில் சொங்லுங்கள்... தெற்காசியாவிலேயே வல்லரசு என இந்தியப்பேரரசு தன் அதிகாரத்தை பயன்படுத்தி போரை நிறுத்தச் சொல் என... இப்படியயல்லாம் சொல்லவிடில் நாளைய வரலாறு நம்மை துரோகிகள் எனக்கூறும் அப்புறம் ஈழம் தனியாப்பிரிஞ்சு இங்க தனித்தமிழ்நாடு கேட்பாங்க என பழைய பல்லவி பாடாதீங்க... அப்படி ஒன்று நடக்கறதுக்கு வாய்ப்பில்லை. அப்படீங்கிறது உங்களுக்கு நல்லாவே தெரியும் ஏன்னா, இந்த ஈழப்பிரச்சனையை நம்மாளுககிட்ட சொல்லறதுக்குள்ளேயே அம்மாகிட்ட குடிச்ச பால் வெளியே வந்திரும்போல, வழக்கமா நம்மாளுக இங்க அர்ஜீன் படத்தை பார்த்து விரைச்சுப்போயி சல்யூட் அடிப்பாங்க அப்படி இல்லீனாலும் டோனி ஒரு சதம் போட்ட போதும் அப்படியே சிலிர்துது போயிடுவாங்க
அப்புறம் இந்தந கட்டுரை தலைப்பில சொன்ன ஈழத்தமிழரும் ஈனததமிழரும் என்ற தலைப்பில் ஈனத்த்மிழர் யார் அப்படினு சந்தேகம் இப்ப உங்களுக்கு சதம் போட்டா சிலிர்த்துக்கிற எங்கள் செந்தங்களா ? ஈனத்தமிழர்கள் ... இல்ல வடக்க பார்த்தாப்பல எதுவுமே தெரியாத மாதிரி கையை கட்டி நிக்கிறவங்களா ? இல்ல நூலுல முதுகு சொறியிற பசங்களா ? இல்லையில்ல இவனுகளை தமிழன்னு சொன்ன வரலாற்று பிழையாகிவிடும். தோழர்களே, ஆக இதையயல்லாம் பார்த்துட்டு வெறும் ஆர்ப்பாட்டம் மட்டும் நடத்திட்டு, கட்டுரை மட்டும் எழுதிட்டு கிழவன் கொடுத்த தடியை இன்றும் எடுக்காம இருக்கிறேமே நாமதான் ஈனத்தமிழர்கள்... இதெல்லாம் இருக்கிற வரைக்கும் உங்க பொழப்பு ஜோரா ஓடும். ஆக கவலைப்படாதீங்க, இந்த இந்தியாங்கிற துணைக்கண்டம் ஒரு மெல்லிய நூலில் கட்டிஇருக்குது அது இத்துபோகிற வரைக்கும் நீங்க ஆடலாம், பாடலாம், கும்மியடிக்கலாம் என்ன வேனா பண்ணலாம் போங்க ஏன்னா 95 வயதில் மூத்திர சட்டியைக் கட்டி தொங்கவிட்டுட்டு கிழவன் கத்தின அப்ப முழிக்கதவனுங்க இப்பவா முழிக்க போறாங்க இப்ப அதில்லீங்க பிரச்சனை தைரியமா கைகளை கொடுங்கள் நம் ஈழத்தமிழர்களுக்காய் ... உயிரையும் உடைமையையும் இழந்து கவலைப்படும் நம் சொந்தங்களுக்காக குரல் கொடுங்கள் இதையயல்லாம் மீற இறையாண்மை போச்சுனா ஒரே ஒரு யோசனை இருக்குதுங்க ... பேசாம சேலம் சித்த வைத்திய சாலைக்குப்போங்க...
Subscribe to:
Post Comments (Atom)
கவிதை சிவாவை நாடறியும். கட்டுரை சிவாவை , இப்போது காண்கிறது.
ReplyDeleteநல்ல நையாண்டி நடை.
வாழ்த்துகள்.
புகழ்