Oct 20, 2009

பேராண்மை- சனநாதன் மேல் பொறாமை....

 


நம்மூர்ல பழமொழி சொல்வாங்க 'அறுக்க மாட்டாதவன் கையில அம்பதெட்டு அருவாளு'....

15 ஆண்டுகளுக்கு முன் ஒரு இயக்குநர் என் படத்தில் நாயகனும் நாயகியும் இறுதிக்காட்சியில் தான் பார்ப்பார்கள் எனச்சொல்ல படம் மயிரு மாதிரியிருக்கும் என சில தாயாரிப்பாளர்கள் சொல்ல இறுதியில் சிறந்த இயக்குநருக்கான இந்திய தேசிய விருதை பெற்றது அப்படம்..

ஆக முதல் பாராவை படியுங்கள் ஐந்து நாயகிகள் டூயட் பாடாத நாயகன் 'அறுக்க மாட்டாதவன் கையில அம்பதெட்டு அருவாளு'....
தமிழ் சினிமாவின் பல விதிகளை மீறியிரிக்கிறார் இயக்குநர் சனநாதன்..அட பின்ன என்னங்க எப்ப பார்த்தாலும் இதே மாதிரி படத்த தர்றதே பொழப்பா போச்சு லட்டு மாதிரி 5 நாயகிகள் 5 பாட்டு ,4 பைட்டு,சில காமெடி பல காமநெடி சீன்னு காக்டெய்ல படத்த தராம...

கோவனம் கட்டிட்டு எருமைக்கு பிரசவம் பாக்கிற நாயகன் அடுத்த சீன்ல பொதுவுடமையோ புன்ணாக்கோன்னு கிளாசு எடுக்கிறான்.ஐந்து பெண்களோட காட்டுக்குள்ள போற நாயகன் சும்மா சண்ட போட்டே காலத்த ஓட்டுறான் தப்பு தப்பு காட்டுக்குள்ள போன எப்படி படம் எடுக்கறதுன்னு காதல் கொண்டு இளமை துள்ளிய செல்வராகவன் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்குங்க இயக்குநரே.....

அப்புறம் இந்திய ராக்கெட்ட தகர்க்க வர்றது உலக முதலாளிகளின் கூலிப்படையா என்ன காமெடி போங்க உங்களுக்கு அவ்வளவா அரசியல் அறிவு போதாது பளிச்சுன்னு பாகிசுதான் தாவிரவாதினு சொல்லாம...நீங்க படப்பிடிப்புக்கு முன்னடி நம்ம உள்ளூரு நாயகன் கமல் ஒரு அவதாரம படபடப்ப நடிச்ச உன்னை போல் ஒருவன் பார்க்கலைங்களா இயக்குநரே...
இப்படி படமெடுத்தா எப்படி கல்லா கட்டறது நீங்க படத்துல செஞ்ச தப்பெல்லாம் பாருங்க...

முதல்ல நாயகனை ஆதிவாசி இனத்துல பிறந்து ஒதுக்கீட்டில் படித்தவனாவா காட்றது அதுவும் அவன் உயர்சாதி கான்வென்ட் பெண்களுக்கு பயிற்சி கொடுக்கலாமா? அப்பறம் நாயகன் பேர் துருவன் என்னங்க இயக்குநரே அம்பி,ராகவன் இப்படி நல்ல பேரே கிடைக்கலையா உங்களுக்கு...
நாயகன் பேசற வசனமெல்லாம் சகிக்கல பாருங்க

பொதுவுடமை அரசியல் படிங்க பொருளாதாரம் படிங்க..

வெள்ளைக்காரன் ஊறுகாய் விக்க வந்தா கூட சந்தேகப்படனும்....

அந்த காலத்தில பெண்கள் முந்தானை எடுத்து விடவே நேரம் சரியா போச்சு இப்ப பெண்கள் முடியை ஒதுக்கவே நேரம் சரியா போகுது...

எங்க ஊர்ல நானே பிரசவம் பார்ப்பேன் நிர்வானம் எனக்கு ஒன்னுமில்லை...

அய்யோ நாங்க எங்க நாயகர்களை உலக அளவில கொண்டு போகும் போது 'வேப்ப மரத்துல எழுதி வெச்சா பணம் தர்றவனா' கருப்பு பணத்துக்கு வெள்ளை பெயின்ட் அடக்கிறவனா' துணை நடிகர்கள் நடிக்கற வேசம் உள்பட 15 வேசம் கட்டுறவனா' இப்படியெல்லாம் தமிழ் சினிமாவை துக்கி நிறுத்தும் போது 50 வருடம் பின்நோக்கி போறீங்களே சனநாதன் சாரே...
இதெல்லாம் தெரியாம ஒரு கூட்டம் எதோ நல்ல திரைப்படம் அப்படீனு செல்றாங்க கேட்டா....

பெண் மான்கள்,குயில்கள்,மயில்களை பார்த்த எங்களுக்கு பெண் புலிகளை திரையில் காட்டியுள்ளீர்களாம்...

தமிழர் வீரத்தை உலகே பார்த்தது நீங்களும் காட்டுங்கன்னு சொன்ன நாயகன் வழி எங்கள் தமபி தெரிஞ்சாராம்...

சாகும் தருவாயில் தனது விரனையே சுட்டுக்கோல்லும் கூலிப்படை ,வீரமரணமடைந்த தோழிக்கு மரியாதை செலுத்தும் தமிழ் பெண்கள் என ஈழ போரை கண் முன் காட்டியுள்ளீர்களாம்...

மூலதனம்,பொதுவுடமை என தமிழ் சினிமா பேசாததை பேசியிருக்கிறது பேராண்மை...

அராங்கத்த எதிர்த்து அரசியல் செஞ்ச இப்படித்தான் என கனபதிராம் கேரக்டர் வழியே சொல்லிய பல கருத்துகளுக்கு வெட்டு(நாங்க காட்டுல பாம்பே பார்க்கல காட்டுங்க என நாயகிகள் கேட்பதை எல்லாம் விட்டு விட்டு மற்ற முக்கிய இடங்களில் வெட்டிய வெட்டி பயல் யாரோ தெரிஞ்ச வெட்டியவனுதை வெட்டும் ஆத்திரமாம் அவங்களுக்கு)..

அப்புறம் இது எதோ ரசுய மொழி படத்தோட உல்டா அப்படினு சில விமர்சனங்கள் வருது சிறந்த 100 படங்களில் ஒன்றான நாயகனுக்கு எத்துனை நாள் முன்னாடி காட்பாதர் வந்தது..தெரியுமா ?பூணுலை கழட்டி வைச்சுட்டு பாருங்க....


வாழ்த்துகள் சனநாதன் சார் இப்படியொரு அருமையான படம் கொடுத்ததுக்கு என்னது அட ஆமாம்ப்பா இந்திய ராக்கெட்டுத்தான் ஒருமைப்பாடா அட விடுங்கப்பா இதெல்லாம் இல்லையினா பெட்டிகுள்ளேயே படம் தூங்கி விடும்...

ஓ.தமிழ் திரைப்பட இயக்குநர்களே உலக தரத்துக்கு தமிழ் சினிமாவை கொண்டு போறதா சொல்லி சிவாசி,தசாவதாரம்,கந்தசாமி மாதிரி மண்டையை பிச்சுக்க வைக்காம!!!!
தமிழ் தரத்துல நல்ல தமிழ் படங்களா சுப்பிரமணியபுரம்,பசங்க,பேராண்மை மாதிரி தாங்க!!!!!!

ஒலக தரத்த அப்பறம் பார்க்கலாம் முதல்ல உங்க தரத்த உயர்த்துங்க......
Posted by Picasa

1 comment:

  1. ungalin karuthupathivey padam paarkum aarvathai thoondukirathu. iyakkunarukku nanrigal. Ungalukkum nanri.

    ReplyDelete