Oct 23, 2009
எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்திலே....
அமைதிப்படை திரைப்படத்தில் ஒரு வசனம் வரும் வில்லனை பார்த்து நாயகன் செல்வார் உன்னையெல்லாம் அவ்வளவு சீக்கிரம் கொன்னுட்டா தியாகி அக்கிடுவானுக. அப்புறம் 8 ம் வகுப்பு பாடப்புத்தகத்தில எழுதி வருங்கால தலைமுறை அதைப்படிப்பாங்க..என்பார்...
இயக்குநர் தோழர்.மணிவனணின் வசனம் இப்போது நிசமாகி விட்டது...தமிழ் நாடு அரசு பாட நூல் 8 ம் வகுப்பு சமுக அறிவியல் பாடத்தில் அப்படித்தான் சிலரை தியாகி ஆக்கியுள்ளனர்..
அந்நுலில் 113 ம் பக்கத்தில் தமிழ் புதினங்களின் வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ் சமூக கருத்துக்களை மையமாக வைத்து 19 ம் நூற்றாண்டின் முக்கிய ஆசிரியர்கள் எனும் பட்டியலில் செயகாந்தன் ,டி.சானகிராமன்,நா.பார்த்தசாரதி,சுஐஐதா,வை.மு.கோதைநாயகி அம்மாள்,சிவசங்கரி,இந்துமதி,லட்சுமி,இராசம் கிருசுணன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அக்கிரகாரங்களை தாண்டி புதினங்கள் வளரவேயில்லையா அதிலையும் பாருங்க நம்ம சுஐஐதா எழுதிய பாய்சு பட வசணம் சிறந்த புதினம் போங்க..8 ம் வகுப்பிலையே தெரிஞ்சுக்க வேண்டிய மா மேதைங்க இவங்கெல்லாம் நாடு விளங்கிரும் இப்ப எனக்கொரு சந்தேகம் இந்த அண்னாதுரை,கருணாநிதி,புலவர் குழந்தை, இவங்கெல்லாம் யாருங்க....
51 ம் பக்கத்தில வ.வே.சு.அய்யர் சேரன்மாதேவியில் திவிரவாதிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக குருகுலம் நடத்தினார்...வாஞ்சி நாதன் தேசபக்தி முத்திபோய் அசுதுரையை சுட்டு கொன்றார்
அப்புறம் பெரியார் துறவி போல் எளிமையாக வாழ்ந்தார்.
இந்த அபத்தமெல்லாம் இதில் உள்ளது.(இதுபற்றி நக்கீரன் கட்டுரை படிச்சு தேடுதுனது). இப்ப எனக்கிருக்கிற பயமெல்லாம் இது இன்னும் எத்துனை வகுப்புகளில் உள்ளதோ என்பதே...
படிக்கும் வயதில் விதைக்கப்படும் நச்சு மிகவும் அபாயகரமானது பாரதிய சனதா அட்சியில் இல்லையில்லை அவசர நிலையின் போதே 1 ம் வகுப்பில் சிங்கம் முழங்கும் என்ற வார்த்தையை மாற்றி சிங்கம் கர்சிக்கும் என பதிப்பதற்கு புது நூலையே கொண்டு வந்தார்கள்...
அக அசிரியர் துறையில் இருக்கும் தோழர்களே ! தயவு செய்து கவனியுங்கள், இவைகளை மாற்ற அறிவுறுத்துங்கள்...
ஐந்தில் வளையாததை இருப்பத்தைந்தில் கூட்டம் போட்டு வளைக்க முடியாது...
எனக்கு கழிவறையில் அமர்ந்திருக்கும் போது கண நேரத்தில் தோன்றிய யோசனை வரலாறு முக்கியம் மண்னா!கல்வி மத்திய தொகுப்போ,மாநில தொகுப்போ அது அக்கிரகார தொகுப்பாக மாறவிட்டால் நாளைய வரலாறு எழுதும் ஆடோட்டி வந்தவன் நாடாண்டான், நாடாண்டவர்கள் வேறன்ன ஆடுதான் ஓட்டனும் அமாவாசை.... எய் டிரியோ, டிரியோ,டிர.ியோ,ட்ட்ட்ட்டுரு....
Subscribe to:
Post Comments (Atom)
இதை பற்றிய பதிவு உங்களின் பதிவுகளில் மிக
ReplyDeleteமுக்கியமான இடத்தை பெறுகிறது என்று நான்
நினைக்கிறேன்.
இந்த பக்கங்களை எழுதியிருக்கும்
நபர்களும் அதை அனுமதித்தவர்களையும்
நாம் அடையாளம் காண முடிகிறது
என்ன செய்வது? ஆனால், உண்மை
மறைந்து போகாது என்ற நம்பிக்கை நமக்கு உண்டு.
ஒரு சோகம் என்னவென்றால் அதில் பயின்ற
மாணவர்கள் எத்தனை பேர் பாடபுத்தகத்தில் இருந்து வெளியேறி தெரிந்து கொள்வார்கள் என்று தெரியவில்லை.
நம்மால் முடித்தவரை நம் குழந்தைகளுக்கோ,
தெரிந்தவர்களுக்கும் அவர்களின் வழியே அவர்களின்
குழந்தைகளுக்கும் சொல்லவேண்டும்.