Aug 26, 2009

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய அவலம்......

இன்று பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறிலங்காயில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது.

கண்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், பூட்ஸ் காலால் உதைத்து பின்னர் தமிழ் இளைஞரைச் சுடும் காட்ச்சியைப் பார்த்தும் நாம் சும்மா இருந்துவிட முடியுமா ? சாகப் போகிறோம் என்று தெரிந்து ஒன்றும் பேசாமல் நிசப்தமாக நிற்கும் ஒரு நிராயுதபாணியை சிங்கள அரக்கன் கொல்கிறானே. இரண்டாவதாகச் சுடப்படும் தமிழ்ச் சகோதரன் எந்தப்பக்கத்தில் இருந்து வெடிவெடித்து சன்னம் பாயப்போகிறது என்று தெரியாமல் தலையை அங்கும் இங்குமாக அசைக்கிறான் , அவன் நிலையைச் சற்றி நினைத்துப்பாருங்கள் தமிழர்களே ! இனியும் நாம் சும்மா இருக்க முடியுமா ? இதற்கான பதிலடியை நாம் எப்போதுகொடுக்கப்போகிறோம்.

http://www.athirvu.com/target_news.php?subaction=showfull&id=1251225978&archive=&start_from=&ucat=4&

No comments:

Post a Comment