Aug 21, 2009

ஒத்தப் பனமரம்

 






சனிக்கிழமை
மதியங்களில்
கிணத்தடி குளியல்
திரும்புகையில்
தலையாட்டி இரசிக்கும்
ஒத்த பனமரம் ...

பேய் புடிச்ச
எதிர்வீட்டு
சரசுவின்
ஞாபகம் எட்டிப்பார்க்கும் ...

வருசத்துக்கொருமுறை
குலதெய்வப் பொங்கல்
நேரத்தில் களைகட்டும்
பனமரத்து
ஒத்தயடிப்பாதை ...
கள்ளச்சாராயம்
காய்ச்சுபவனை
புடிக்கையில் ...

அவிழ்ந்த வேட்டியுடன்
ஓடிய
சீனிவாச அய்யர்
இன்னும்
கண்ணுக்குள்ளே ...

ஒத்தையடிப்பாதை
முப்பதடியாய்
பன்னாட்டு நிறுவன
ஒளி வெள்ளத்தில்
கருப்பு வெள்ளை
கதை சொன்னபடி
ஒத்தப்பனமரம் ...
Posted by Picasa

No comments:

Post a Comment