அய்யனாரு
சாமிகையில
அருவாளு
காக்குற தெய்வமுன்னு
கொடுத்து வச்சோம்....
சம்பாத்தியத்தில
பாதிக்குமேல
அய்யனாருக்கு
அருவா வாங்கவே போச்சு...
தின்னு கொழுத்தஅய்யனாரு
சும்மாவே சுத்தி திரிஞ்சான்...
ஆத்துக்கு
அந்தப்பக்கத்துருல
பாதி சனம் -எங்கசாதி சனம்....
மீதி சனம்போட்ட பிச்சையில
சாதி சனத்தஅடிக்க போன
அய்யனாரு
ரத்தம் சொட்டஓடினாரு
நீலாம்புர் பை-பாசுல.....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment