Feb 22, 2012

ஏதாவது செய்யனுங்க...

படித்த பள்ளிக்கு எதாவது செய்ய வேண்டுமென எங்கள் பகுதி கட்டுமான பொறியாளர் நண்பர்கள் திட்டமிட்டோம்…
இன்று மதிய உணவு இடைவேளையில் பள்ளிக்கு போனபோது அதிர்ச்சி..கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்தில் அதிக மாணவர்களை கொண்ட பள்ளியாம் (316) அரசூர் துவக்கப்பள்ளி..
316 மாணவர்களுக்கும் ஒரே கழிப்பிடம்...
ஆசிரியை ஒருவர் துணையுடன் நாங்கள் சென்ற போது டீச்சர் பாய்ஷ் உள்ளே போய் கதவை சாத்திட்டாங்க என சத்தம்..5 பசங்க வெளியே வர 5 மாணவிகள் உள்ளே சென்றார்கள்..அங்கு நிற்க கூட முடியவில்லை....தண்ணிர் வசதி இல்லை...

இப்போது வரை அதன் தாக்கம் குறையவில்லை..விரைவில் இந்நிலை மாற ஆவண செய்ய உறுதியேற்று வந்தோம்..

தொழில் வளம் நிறைந்த பகுதியில் இப்படியென்றால்...பின் தங்கிய மாவட்டங்களில்...ஏதாவது செய்யனுங்க...

அரசு பணி பதவிகளில் இருப்பவர்கள் கட்டாயமாய் தன் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க குறைந்த பட்சம் ஆசிரியர்களாவது... ஏதாவது செய்யனுங்க... ஏதாவது செய்யனுங்க... ஏதாவது செய்யனுங்க... ஏதாவது செய்யனுங்க...

No comments:

Post a Comment