எப்போதும்
இரண்டாவது ரேங்க்
வாங்கும் என்னுடனே..
முதல் ரேங்க்
வாங்கிய சினிவாசனையும்
சேர்த்தே
பாராட்டி செல்வார் அப்பா...
அந்த காலாண்டு தேர்வை
மறக்கவே முடியாது
பண்ணையத்திலிருந்த
சுப்பன் மகன் வாங்கிய
இரண்டாவது ரேங்கிக்கு
விழுந்தது உதையெனக்கு...
அப்பா மேல் கோபமெனக்கு..
ஈரோட்டுக்கல்லூரியில்
படித்த பின்
கோபம் பரிதபமாய் மாறியிருந்தது....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment