Mar 31, 2009
கருப்பு துணி...
இதை வைத்து கொண்டு அவர்கள் எப்படி காமராசர் ஆட்சி அமைப்பார்கள்? என்று கேள்வி கேட்டால் அது இறையாண்மைக்கு எதிரானது ஆக ஓட்டு போடுங்கள் அதை விட்டு ஓட்டு பொறுக்க வரும் காங்கிரஸ் குலவிளக்குகளை ..ஒளிகுன்றா மாணிக்கங்களை ..வருங்கால பாரத பில்லர்களை.. யாரேனும் செருப்பாலோ விளக்குமாற்றாலோ முட்டையாலோ அல்லது சானியாலோ அடித்தால் அது மிகவும் தவறு கண்டிக்கத்தக்கது. இந்திய இறையாண்மைக்கு எதிரானது தேசத்துரோகமானது ........
Mar 28, 2009
தமிழகத்தில் உலவும் புதிய காணொளிகள் !!!! புதுவகை தேர்தல் பரப்புரை !!!
புதிய பராசக்திhttp://www.youtube.com/watch?v=NPtY1tORY-o
யாருக்கு வாக்களிப்போம்?http://www.youtube.com/watch?v=0syPC6mUWIM\par
வணங்காமண்http://www.youtube.com/watch?v=B1ydYAK582k
கலைஞர் தமிழினக் கொலைஞர்http://www.youtube.com/watch?v=tjk4Tbwv6kE
இனி என்ன செய்யப்போகிறோம் ? http://www.youtube.com/watch?v=8NwZIeRWSrw தொடர்ச்சி.. http://www.youtube.com/watch?v=gKp5Tqn2npw&feature=related
Mar 27, 2009
காங்கிரஸ்காரர்கள் தமிழர்களின் துரோகிகள்
நன்றி- தமிழச்சி
Mar 18, 2009
புதிய பராசக்தி
ஒரு தமிழனின் குமுறல்
//www.youtube.com/watch?v=NPtY1tORY-o
Mar 14, 2009
பெண்....
பண்டைய அரண்மனை அந்தப்புரங்களில் இருந்த பெண்களில் பெரும்பாலோர் எதிரி நாட்டிலிருந்து சிறை எடுத்துவரப்பட்டவர்கள். அரசன் இறந்தவுடன் அரசி உடன்கட்டை ஏறுவதும் எதிரியின் வல்லாங்குக்கு அஞ்சியே. இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பெண்கள் அணியும் தாலி வட்டச்சிமிழ் வடிவத்தில் இருக்கும். அந்தச் சிமிழுக்குள் உயிர்க்கொல்லி நஞ்சு வைத்து அடைத்து கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டது, போரில் தங்கள் நாட்டவர் தோற்றுவிட்டால் வென்ற அரசனின் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான். சொல்லப்போனால் ஒருவகையில் பெண்கள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள பயன்படுத்திய கடைசி ஆயுதமான சையனைட் குப்பிகள் தான் அவை. இந்த சையனைட் குப்பிகளே பிற்காலத்தில் பெண்களின் தாலி என்றும் புனிதம் என்றும் மங்களம் என்றும் மாறிப்போனது பெரிய கதை!
போர்க்களத்தில் ஒவ்வொரு வீரனிடமும் எதிரியின் தாயை தாரத்தை மகளைப் புணரும் விலங்கு மனம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல.. நீண்ட கால போர்மேகங்கள் சூழ்ந்த மண்ணில் வாழும் குடும்பத்தில் தொடரும் வறுமையும் ஆதரவின்மையும் அக்குடும்பத்தின் பெண்ணைக் கட்டாய பாலியல் தொழிலுக்குத் தள்ளுகிறது. இக்கதை வீரவசனங்களும் வீரவணக்கங்களும் நிறைந்து வழியும் மண்ணில் எழுதப்படாமல் மறைக்கப்படுகிறது. தொடர்ந்து போர் நடக்கும் இலங்கை மண்ணில் தமிழ்ப்பெண், இசுலாமிய பெண், சிங்களப் பெண் என்று அனைத்துப் பெண்களுமே பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை உலக வங்கியின் ஆதரவுடன் இலங்கையில் நடந்த கருத்தரங்கில் அப்பெண்கள் பதிவு செய்திருக்கிறார்கள். (The meeting was organised and facilitated by the National Peace Council, as part of the World Bank sponsored Needs Assessment Study on Relief, Rehabilitation and Reconciliation.)அகதிகள் முகாம்களில் வாழும் வாழ்க்கை, அகதிகளாக மொழி தெரியாத தூர தேசங்களுக்கு ஓடிவந்து உயிர்வாழ்தலைக் காப்பாற்றிக்கொள்ள பெண்கள் இழந்துப் போகும் கனவுகள்.. இப்படி பட்டியல் நீளும்.போரின் பண்டைய அரண்மனை அந்தப்புரங்களில் இருந்த பெண்களில் பெரும்பாலோர் எதிரி நாட்டிலிருந்து சிறை எடுத்துவரப்பட்டவர்கள். அரசன் இறந்தவுடன் அரசி உடன்கட்டை ஏறுவதும் எதிரியின் வல்லாங்குக்கு அஞ்சியே. இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பெண்கள் அணியும் தாலி வட்டச்சிமிழ் வடிவத்தில் இருக்கும். அந்தச் சிமிழுக்குள் உயிர்க்கொல்லி நஞ்சு வைத்து அடைத்து கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டது, போரில் தங்கள் நாட்டவர் தோற்றுவிட்டால் வென்ற அரசனின் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான். சொல்லப்போனால் ஒருவகையில் பெண்கள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள பயன்படுத்திய கடைசி ஆயுதமான சையனைட் குப்பிகள் தான் அவை. இந்த சையனைட் குப்பிகளே பிற்காலத்தில் பெண்களின் தாலி என்றும் புனிதம் என்றும் மங்களம் என்றும் மாறிப்போனது பெரிய கதை!போர்க்களத்தில் ஒவ்வொரு வீரனிடமும் எதிரியின் தாயை தாரத்தை மகளைப் புணரும் விலங்கு மனம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல.. நீண்ட கால போர்மேகங்கள் சூழ்ந்த மண்ணில் வாழும் குடும்பத்தில் தொடரும் வறுமையும் ஆதரவின்மையும் அக்குடும்பத்தின் பெண்ணைக் கட்டாய பாலியல் தொழிலுக்குத் தள்ளுகிறது. இக்கதை வீரவசனங்களும் வீரவணக்கங்களும் நிறைந்து வழியும் மண்ணில் எழுதப்படாமல் மறைக்கப்படுகிறது. தொடர்ந்து போர் நடக்கும் இலங்கை மண்ணில் தமிழ்ப்பெண், இசுலாமிய பெண், சிங்களப் பெண் என்று அனைத்துப் பெண்களுமே பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை உலக வங்கியின் ஆதரவுடன் இலங்கையில் நடந்த கருத்தரங்கில் அப்பெண்கள் பதிவு செய்திருக்கிறார்கள். (The meeting was organised and facilitated by the National Peace Council, as part of the World Bank sponsored Needs Assessment Study on Relief, Rehabilitation and Reconciliation.)அகதிகள் முகாம்களில் வாழும் வாழ்க்கை, அகதிகளாக மொழி தெரியாத தூர தேசங்களுக்கு ஓடிவந்து உயிர்வாழ்தலைக் காப்பாற்றிக்கொள்ள பெண்கள் இழந்துப் போகும் கனவுகள்.. இப்படி பட்டியல் நீளும்.போரின் விளைவாக எல்லா வகையிலும் பாதிக்கப்படும் பெண்களின் வரலாற்றுடன் இணைந்து அச்சுறுத்துவது எதிர்கால இளம்தலைமுறையின் எண்ணங்களூம் உணர்வுகளும். பகை, வன்மம் என்பதெல்லாம் எந்த ஒரு சமுதாயத்திலும் திடீரென முளைப்பதில்லை. மனித நேயமற்ற செயல்களின் பின்விளைவுகளாக முளைத்து வளர்வதுதான் தீவிரவாதம். தொடர்ந்து 25 வருடங்களாக போர்நடக்கும் இலங்கை மண்ணில் பதுங்குகுழிகளில் வளரும் வாழ்க்கையில் இளம்தலைமுறை எதிர்காலம்..? நினைத்துப் பார்த்தால் அணு ஆயுத்தத்தைவிட அதிகமாக என்னை அச்சுறுத்துகிறது.விளைவாக எல்லா வகையிலும் பாதிக்கப்படும் பெண்களின் வரலாற்றுடன் இணைந்து அச்சுறுத்துவது எதிர்கால இளம்தலைமுறையின் எண்ணங்களூம் உணர்வுகளும். பகை, வன்மம் என்பதெல்லாம் எந்த ஒரு சமுதாயத்திலும் திடீரென முளைப்பதில்லை. மனித நேயமற்ற செயல்களின் பின்விளைவுகளாக முளைத்து வளர்வதுதான் தீவிரவாதம். தொடர்ந்து 25 வருடங்களாக போர்நடக்கும் இலங்கை மண்ணில் பதுங்குகுழிகளில் வளரும் வாழ்க்கையில் இளம்தலைமுறை எதிர்காலம்..? நினைத்துப் பார்த்தால் அணு ஆயுத்தத்தைவிட அதிகமாக என்னை அச்சுறுத்துகிறது.
புதியமாதவி, மும்பை (puthiyamaadhavi@hotmail.com)
நன்றி கீற்று இணையம்
Mar 13, 2009
அந்த நாள்...
இந்த பாவப்பட்ட தமிழன் இருக்கிறானே - தமிழன் என்று சொன்னால் - தமிழ் இனம் என்று சொன்னால் - தமிழனுடைய உரிமை என்று சொன்னால் அங்கேதான் அந்த தேசியம் வேகமாக வந்து பாய்ந்து குதறும். தமிழனுடைய உரிமையை நிலை நாட்ட பக்கத்து நாட்டிலே அழிந்து கொண்டிருக்கின்ற தமிழினத்தை காப்பாற்று என்று சொல்வது தேசியத்திற்கு விரோதம் என்று காங்கிரஸ் நண்பர்கள் சொல்வார்களேயானால் இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற தானோ பேராசிரியரோ, வீரமணியோ, நெடுமாறனோ, அய்யணன் அம்பலமோ ஆதீனகர்த்தரோ மற்றவர்களோ பாடுபடுவது ராஜ துரோகம் என்று சொன்னால் நாங்கள் அந்த குற்றத்தை செய்து கொண்டேயிருக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். நாங்கள் மாத்திரம் அல்ல தமிழ்ச்சமுதாயமே தயாராயிருக்கிறது என்பதை தெரிவிக்கதான் நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஆக 1985 ம் ஆண்டில் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை 24 ஆண்டுகள் கழித்து எடுத்துக்கொண்டால் அது குற்றமாகுமா ? தோழர் கருணாநிதி அவர்களே!!!
உங்களைப் போலவே நாங்களும் உறுதிமொழி எடுத்தோம் அதற்கு பலனாய் எங்கள் தோழர்கள் சீமான், கொளத்தூர் மணி இப்போது சிறையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உங்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டால் உங்கள் கூட்டணி தர்மத்துக்கு பங்கம் விளைத்தால் அது தேசியத்திற்கு எதிராணதா? தோழர் கருணாநிதி அவர்களே !!!!!
உங்கள் தேசத்தின் பாதுகாப்பு என்பது காங்கிரசின் பாதுகாப்பா? உங்கள் தேச மக்கள் என்பவர்கள் காங்கிரசு தலைவர்கள் மட்டுமா ?சொல்லுங்கள் தோழர் கருணாநிதி!!!
அவர்களே ஆயிரம் குறைகள் இருந்தாலும் எத்துனை இடர்பாடுகள் வந்தாலும் நாங்கள் உங்களைத்தான் நம்பினோம் ஏனெனில் நாம் மனுதர்மத்திற்கு எதிரானவர்கள் என்பதால், ஆனால் மறுவடிவம் கூட்டணி தர்மமாய் இல்லையா? தோழர் கருணாநித !!!! அவர்களே
மீண்டும் மீண்டும் சொல்கிறேம் நாங்கள் சட்டவிரோதமாக கூட நடப்போம் நியாய விரோதமாக அல்ல. நீங்கள் சட்டத்துக்கு உட்பட்டு உறுதிமொழி ஏற்று முதலமைச்சர் ஆக உள்ளீர்கள் ஆக உங்களுக்கு வேறு வழியில்லை என்பதை நாங்களும் உணர்கிறோம். உங்களிடம் எங்கள் வேண்டுகோள் இரயில் தண்டவாளத்தில் தன் தலைவைத்து படுத்த என் இனத்தை கொன்றுவிட்டு வரும் அமைதிப்படையை வரவேற்க மறுத்த எங்கள் தோழர் கருணாநிதியை எங்களுக்கு மீட்டுத்தாருங்கள் என்பதே எங்கள் சந்தேகம் இதுவே முத்தமிழ் அறிஞர், தமிழினத்தலைவர், கலைஞர் இப்படி எல்லாம் தங்களை அழைத்ததில் நாங்கள் எங்கள் தோழர் கருணாநிதியை தொலைத்துவிட்டோம் என நினைக்கிறோம். ஆக இனி உங்களை இப்படி அழைக்கலாம் என முடிவு செய்துள்ளோம் .
இதன்மூலம் உங்களுக்கு பழைய நினைவு திரும்கினால் எங்களுக்கு மகிழ்ச்சியே அனேகமாக தமிழகத்திலேயே உங்களை உரிமையுடன் பெயர் சொல்லி கூப்பிடுவது செயலலிதாதான் அப்புறம் உங்கள்மேல் விமர்சனம் உண்டு நீங்கள் எதிர்கட்சி தலைவராக இருக்கும்போது மட்டுமே தமிழினப்பிரச்சனை பற்றி பேசுவீர்கள் எனச்சொல்லுகிறார்கள் ..
எங்களுக்கு அதில நம்பிக்கையில்லை ஆனால் வெகு மக்கள் எண்ணம் அதுவெனில் எங்களுக்கு நீங்கள் தான்முக்கியம் எங்கள் அய்யாவின் பாசறையில் பயின்ற நீங்கள் அவர் வழியில் உழைப்பதுதான் எங்களுக்கு பெருமை ஆக என்ன செய்யலாம் ...
உங்களை எதிர்கட்சி தலைவராக்க நாங்கள் தயார் எதிர்கட்சி தலைவராக நீங்கள் தயாரா தோழர் ....
வேணா... விட்டுடு..வலிக்குது...
பெரியார் 19-12-73
மேற்கூரிய கூற்றை தவறாக புரிந்துகொண்டு எதிர்வரும் தேர்தலில் ஓட்டு பொறுக்க வரும் காங்கிரஸ் குலவிளக்குகளை ..ஒளிகுன்ற மாணிக்கங்களை ..வருங்கால பாரத பில்லர்களை.. யாரேனும் செருப்பாலோ விளக்குமாற்றாலோ முட்டையாலோ அல்லம் சானியாலோ அடித்தால் அது மிகவும் தவறு கண்டிக்கத்தக்கது. இந்திய இறையாண்மைக்கு எதிரானது தேசத்துரோகமானது தமிழன் நலம் என்ற மிகக்குறுகிய பிற்போக்கு எண்ணம் கொண்டதுஆக இத்தவறுகளை செய்ய வேண்டாம் என தாய்குலத்தை, உடன்பிறப்புகளை, மாணவச் செல்வங்களை, பெரியார் பேரன்கள் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம்.
Mar 12, 2009
கை கை கை.....
எங்களின் இலக்கு இங்கு மக்கள் சமமாக வாழ வேண்டுவதே அதற்கு தடையாக சாதி இருக்கிறதென்றால் அதை ஒழித்தாக வேண்டியுள்ளது. அப்படி சாதி என்ற ஒன்றை ஒழிக்க முற்படும்போது சாதி மதம் ஆகிய இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பினைந்துள்ளது என்றால் இந்த இரண்டையும் வீழ்த்தியாகத்தான் வேண்டும். முன்பிருந்த அந்த உயர்சாதி கபடர்கள் அவ்வளவு தந்திரமாக சாதியையும் மதத்தையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கமுடியாதபடி பிணைத்து இறுகக்கட்டி வைத்திருக்கிறார்கள். ஆகையால் சாதியை அழிக்க தழைப்படுகையில் மதமும் வெட்டப்படுகிறது என்று பயப்படாமல் சாதி மரத்தையும் மத மரத்தையும் சேர்த்து நெருப்பு வைத்து சாம்பல் ஆக்க வேண்டியது அவசியமாகிறது. இதிலும் ஒரு சங்கடமிருக்கிறது அதாவது மதமானது வேதம் புராணம் ஆகியவற்றால் கட்டி பிணைக்கப்பட்டிருக்கிறது ஆகையால் இந்த வேதம் புராணங்களிலிருந்து மதத்தை பிரிக்கவேண்டும். இதிலும் பிரிக்கமுடியாதபடி கட்டுபலமாக இருந்தால் இங்கு இரண்டையும் சேர்த்து நெருப்பு வைக்க வேண்டியதுதான், வேறுவழியில்லை ஆனால் வேதம் கடவுளோடு சேர்த்து கட்டப்பட்டிருக்கிறது என்றால் கடவுள் தலையிலும் கை வைத்துதான் ஆகவேண்டியிருக்கிறது.
பேரன்...
எங்கள் இலக்கு ஈழத்தில் எங்கள் சகோதரர்கள் சுயநிர்ணய உரிமை கொண்ட முதல்தர குடிமக்களாக வாழவேண்டும் என்பதே அதற்கு சிங்கள பேரினவாதம் தடையாக இருந்தால் அதை ஒழிக்க வேண்டியிருக்கிறது அப்படி சிங்கள பேரினவாதத்தை பின்னி பிணைத்துள்ளான் என்றால் சிங்களவனை வீழ்த்தியாக வேண்டியிருக்கிறது. முன்பிருந்த பார்பன பெளத்த கபடர்கள் அவற்றை தந்திரமாக ஒன்றோடு ஒன்று பிரிக்கமுடியாத படி கட்டியிருந்தால் சிங்கள பேரினவாதத்தோடு சிங்களவனையும் சேர்த்து நெருப்பு வைத்து சாம்பலாக்க வேண்டியிருக்கிறது. இதிலும் ஒரு சங்கடமிருக்கிறது இந்த சிங்களவனுக்கு துணை போய்கொண்டிருக்கிறது இந்திய அரசு. ஆக சிங்களவனுக்கு உதவாமல் இந்திய அரசை தடுக்கவேண்டியிருக்கிறது மீறி உதவினால் இந்திய அரசு மீதும் நெருப்புவைக்க வேண்டியிருக்கிறது. ஆக இந்திய அரசானது காங்கிரசால் ஆளப்படுகிறதென்றால் வேறு வழியில்லாமல் காங்கிரசோடும் அத¼ னாடு கூட்டுவைப்பவர்கள் மீது கை வைத்தே ஆகவேண்டியிருக்கிறது.
Mar 5, 2009
யார் தமிழர்???
தங்களின் மிக நியாயமான நேர்மையான கால் நூற்றாண்டு கால போராட்டத்திற்கு, உலக நாடுகள் முழுவதும் வேர் பரப்பி வாழும் தம் சொந்தங்களின் மூலம் ஆதரவு திரட்டுபவர்கள் ஈழத்தமிழர்களே ....
தீதும் நன்றும் பிறர்தர வாரா....
எதிரி தன் பலத்தை கூட்ட உலகம் முழுவதும் ஆயுதப்பிச்சை ஆள்பிச்சை எடுத்து மிக உக்கிரமாக தாக்கினாலும் தன் தாயக விடுதலையை உயிர் மூச்சாக கொண்டு தனித்து போராடி வரும் இராணுவம் ஈழத்தமிழர்களே ...
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு .....
ஈழத்தமிழர் நலனுக்காய் இங்கிலாந்தில் ஆஸ்திரேலியாவில் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் ஒரு சமயத்தில் இலட்சக்கணக்கான மனித சக்தியை திரட்ட முடிகிறது. இது இவர்களால் முடிந்தது. உலகம் முழுதும் ஓடி ஓடி உழைத்து தம் நாட்டு விடுதலைக்கு வலு சேர்க்கும் தன்னலமற்ற உறவுகள் ஈழத்தமிழர்களே...
ஆறுவது சினம் .. ஊக்கமது கைவிடேல் ....
தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகுதியான துரோகங்களுக்கிடையேயும் தங்கள் உறுதியான நம்பிக்கையை கை விடாமலும் இந்தியாவை தொடர்ந்து தன் நண்பனாகவே நினைப்பவர்கள் ஈழத்தமிழர்களே ....
யாகாவாராயினும் நா காக்க.....
சிறுபிள்ளைத்தனமாகவும் தன் நலமாகவும் எந்தவொரு கருத்தையும் கூறாமலும் மிகுந்த வேதனைமிக்க வாழ்க்கையிலும் துரோகங்களையே தொடர்ந்து சந்தித்தபோதிலும் நா காத்து எதிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் இருப்பவர்கள் ஈழத்தமிழர்களே ...
கபடி.... கபடி....
இது தமிழனின் விளையாட்டு தமிழனின் குணமே காலை வாரி விடுவதுதான் என்று கேலி பேசியபோது, இல்லை இல்லை இது என் எல்லை அது உன் எல்லை , எல்லை தாண்டி வரும் எதிரியை ஒன்று சேர்த்து வீழ்த்துவதே கபடி, இதை உலகுக்கு உணர்த்தியவர்கள் ஈழத்தமிழர்களே....
சொந்தங்களே....
நம் அடையாளங்கள் யாரால் காக்கப்படுகிறது?
அவர்களின் நிலை என்ன?
மிக அழகான தமிழ் பெயருடன் ஒருவர் ஐரோப்ப, அமெரிக்க கண்டங்களில் அறிமுகமானால், நீங்கள் சிறிலங்காவில் இருந்து வந்தீர்களா? என கேட்பான்
இப்படியோர் இனம் முற்றாக அழிக்கப்பட்டால்?....
கடைத்தமிழனும் இலங்கைத்தீவில் அழித்தொழிக்கப்பட்டால்?....
நாளைய வரலாறு நம் பிணங்களை கூட விட்டுவைக்காது !!!
உங்களை துப்பாக்கி தூக்க சொல்லவில்லை ஒரு குரல் நம் சொந்தங்களுக்காய்...
நம் போராட்டங்கள் தொடர வேண்டும் .
மெரீனாவில் புதைக்க காத்திருப்பவர்கள் பின்னால் செல்லாமல்,
மூலக்கொத்தளத்தில் விதைக்கப்பட்டிருக்கும் நம் தோழன் விட்டுச்சென்ற பணி தொடர்வோம்....
தோழர் முத்துக்குமாரின் மரண சாசனத்தை மிக வெளிப்படையாகவும் நேரிடையாகவும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளாக தரும் அரசியல் கட்சிகளையே தேர்வு செய்யுங்கள்.....
Mar 1, 2009
தீண்டாமை
நறுக்குகள்
சும்மா ஆடாது
காணிக்கை போடுங்கோ !
அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்
தோழா !
முகமூடி கிழி..
தோழர்களே
இன்னும் சத்தமாய்
நிறுத்தினால் கேட்கும்
தெய்வத்தின் குரல் ...
ஒரு நாள்
பகுதி
தொகுதியை மிதிக்க
தகும் எங்கள்
பின்னம் ...