Mar 14, 2009

பெண்....

பண்டைய அரண்மனை அந்தப்புரங்களில் இருந்த பெண்களில் பெரும்பாலோர் எதிரி நாட்டிலிருந்து சிறை எடுத்துவரப்பட்டவர்கள். அரசன் இறந்தவுடன் அரசி உடன்கட்டை ஏறுவதும் எதிரியின் வல்லாங்குக்கு அஞ்சியே. இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பெண்கள் அணியும் தாலி வட்டச்சிமிழ் வடிவத்தில் இருக்கும். அந்தச் சிமிழுக்குள் உயிர்க்கொல்லி நஞ்சு வைத்து அடைத்து கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டது, போரில் தங்கள் நாட்டவர் தோற்றுவிட்டால் வென்ற அரசனின் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான். சொல்லப்போனால் ஒருவகையில் பெண்கள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள பயன்படுத்திய கடைசி ஆயுதமான சையனைட் குப்பிகள் தான் அவை. இந்த சையனைட் குப்பிகளே பிற்காலத்தில் பெண்களின் தாலி என்றும் புனிதம் என்றும் மங்களம் என்றும் மாறிப்போனது பெரிய கதை!

போர்க்களத்தில் ஒவ்வொரு வீரனிடமும் எதிரியின் தாயை தாரத்தை மகளைப் புணரும் விலங்கு மனம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல.. நீண்ட கால போர்மேகங்கள் சூழ்ந்த மண்ணில் வாழும் குடும்பத்தில் தொடரும் வறுமையும் ஆதரவின்மையும் அக்குடும்பத்தின் பெண்ணைக் கட்டாய பாலியல் தொழிலுக்குத் தள்ளுகிறது. இக்கதை வீரவசனங்களும் வீரவணக்கங்களும் நிறைந்து வழியும் மண்ணில் எழுதப்படாமல் மறைக்கப்படுகிறது. தொடர்ந்து போர் நடக்கும் இலங்கை மண்ணில் தமிழ்ப்பெண், இசுலாமிய பெண், சிங்களப் பெண் என்று அனைத்துப் பெண்களுமே பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை உலக வங்கியின் ஆதரவுடன் இலங்கையில் நடந்த கருத்தரங்கில் அப்பெண்கள் பதிவு செய்திருக்கிறார்கள். (The meeting was organised and facilitated by the National Peace Council, as part of the World Bank sponsored Needs Assessment Study on Relief, Rehabilitation and Reconciliation.)அகதிகள் முகாம்களில் வாழும் வாழ்க்கை, அகதிகளாக மொழி தெரியாத தூர தேசங்களுக்கு ஓடிவந்து உயிர்வாழ்தலைக் காப்பாற்றிக்கொள்ள பெண்கள் இழந்துப் போகும் கனவுகள்.. இப்படி பட்டியல் நீளும்.போரின் பண்டைய அரண்மனை அந்தப்புரங்களில் இருந்த பெண்களில் பெரும்பாலோர் எதிரி நாட்டிலிருந்து சிறை எடுத்துவரப்பட்டவர்கள். அரசன் இறந்தவுடன் அரசி உடன்கட்டை ஏறுவதும் எதிரியின் வல்லாங்குக்கு அஞ்சியே. இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் பெண்கள் அணியும் தாலி வட்டச்சிமிழ் வடிவத்தில் இருக்கும். அந்தச் சிமிழுக்குள் உயிர்க்கொல்லி நஞ்சு வைத்து அடைத்து கழுத்தில் தொங்க விட்டுக்கொண்டது, போரில் தங்கள் நாட்டவர் தோற்றுவிட்டால் வென்ற அரசனின் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத்தான். சொல்லப்போனால் ஒருவகையில் பெண்கள் எதிரிகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள பயன்படுத்திய கடைசி ஆயுதமான சையனைட் குப்பிகள் தான் அவை. இந்த சையனைட் குப்பிகளே பிற்காலத்தில் பெண்களின் தாலி என்றும் புனிதம் என்றும் மங்களம் என்றும் மாறிப்போனது பெரிய கதை!போர்க்களத்தில் ஒவ்வொரு வீரனிடமும் எதிரியின் தாயை தாரத்தை மகளைப் புணரும் விலங்கு மனம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல.. நீண்ட கால போர்மேகங்கள் சூழ்ந்த மண்ணில் வாழும் குடும்பத்தில் தொடரும் வறுமையும் ஆதரவின்மையும் அக்குடும்பத்தின் பெண்ணைக் கட்டாய பாலியல் தொழிலுக்குத் தள்ளுகிறது. இக்கதை வீரவசனங்களும் வீரவணக்கங்களும் நிறைந்து வழியும் மண்ணில் எழுதப்படாமல் மறைக்கப்படுகிறது. தொடர்ந்து போர் நடக்கும் இலங்கை மண்ணில் தமிழ்ப்பெண், இசுலாமிய பெண், சிங்களப் பெண் என்று அனைத்துப் பெண்களுமே பெரும்பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதை உலக வங்கியின் ஆதரவுடன் இலங்கையில் நடந்த கருத்தரங்கில் அப்பெண்கள் பதிவு செய்திருக்கிறார்கள். (The meeting was organised and facilitated by the National Peace Council, as part of the World Bank sponsored Needs Assessment Study on Relief, Rehabilitation and Reconciliation.)அகதிகள் முகாம்களில் வாழும் வாழ்க்கை, அகதிகளாக மொழி தெரியாத தூர தேசங்களுக்கு ஓடிவந்து உயிர்வாழ்தலைக் காப்பாற்றிக்கொள்ள பெண்கள் இழந்துப் போகும் கனவுகள்.. இப்படி பட்டியல் நீளும்.போரின் விளைவாக எல்லா வகையிலும் பாதிக்கப்படும் பெண்களின் வரலாற்றுடன் இணைந்து அச்சுறுத்துவது எதிர்கால இளம்தலைமுறையின் எண்ணங்களூம் உணர்வுகளும். பகை, வன்மம் என்பதெல்லாம் எந்த ஒரு சமுதாயத்திலும் திடீரென முளைப்பதில்லை. மனித நேயமற்ற செயல்களின் பின்விளைவுகளாக முளைத்து வளர்வதுதான் தீவிரவாதம். தொடர்ந்து 25 வருடங்களாக போர்நடக்கும் இலங்கை மண்ணில் பதுங்குகுழிகளில் வளரும் வாழ்க்கையில் இளம்தலைமுறை எதிர்காலம்..? நினைத்துப் பார்த்தால் அணு ஆயுத்தத்தைவிட அதிகமாக என்னை அச்சுறுத்துகிறது.விளைவாக எல்லா வகையிலும் பாதிக்கப்படும் பெண்களின் வரலாற்றுடன் இணைந்து அச்சுறுத்துவது எதிர்கால இளம்தலைமுறையின் எண்ணங்களூம் உணர்வுகளும். பகை, வன்மம் என்பதெல்லாம் எந்த ஒரு சமுதாயத்திலும் திடீரென முளைப்பதில்லை. மனித நேயமற்ற செயல்களின் பின்விளைவுகளாக முளைத்து வளர்வதுதான் தீவிரவாதம். தொடர்ந்து 25 வருடங்களாக போர்நடக்கும் இலங்கை மண்ணில் பதுங்குகுழிகளில் வளரும் வாழ்க்கையில் இளம்தலைமுறை எதிர்காலம்..? நினைத்துப் பார்த்தால் அணு ஆயுத்தத்தைவிட அதிகமாக என்னை அச்சுறுத்துகிறது.

புதியமாதவி, மும்பை (puthiyamaadhavi@hotmail.com)

நன்றி கீற்று இணையம்

No comments:

Post a Comment