நீ போப்பா வெளியே.. உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நீ 2000 மைல் 1500 மைல் தூரத்தில் இருக்கிறாய் ,உன் பேச்சு எனக்கு புரியாது என் பேச்சு உனக்கும் புரியாது. என் பழக்கம் வேற உன் பழக்கம் வேற, மரியாதையாய் போ ரகளை வேணாம். என்னாத்துக்கு இவ்வளவு தூரத்தில் இருக்கிறவன் எங்களுக்கு இராஜாவாகனும்? நீ இல்லாவிட்டால் எங்களுக்கு என்ன நஷ்டம் எங்கள் உப்பு இல்லையா? மலை இல்லையா? தண்ணீர் இல்லையா? நெல்கம்பு விலையவில்லையா?....
பெரியார் 19-12-73
மேற்கூரிய கூற்றை தவறாக புரிந்துகொண்டு எதிர்வரும் தேர்தலில் ஓட்டு பொறுக்க வரும் காங்கிரஸ் குலவிளக்குகளை ..ஒளிகுன்ற மாணிக்கங்களை ..வருங்கால பாரத பில்லர்களை.. யாரேனும் செருப்பாலோ விளக்குமாற்றாலோ முட்டையாலோ அல்லம் சானியாலோ அடித்தால் அது மிகவும் தவறு கண்டிக்கத்தக்கது. இந்திய இறையாண்மைக்கு எதிரானது தேசத்துரோகமானது தமிழன் நலம் என்ற மிகக்குறுகிய பிற்போக்கு எண்ணம் கொண்டதுஆக இத்தவறுகளை செய்ய வேண்டாம் என தாய்குலத்தை, உடன்பிறப்புகளை, மாணவச் செல்வங்களை, பெரியார் பேரன்கள் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment