1985 ம் ஆண்டு அக்டோபர் 3,4,5,6,7 ஆகிய நாட்களில் தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் கலைஞர் ஆற்றிய உரையைத் தொகுத்து அதே ஆண்டில் தமிழனுக்கு ஒரு நாடு தமிழீழ நாடு எனும் தலைப்பில் திமுக வெளியிட்ட நூலிலிருந்து ஒரு சிறு பகுதி.....
இந்த பாவப்பட்ட தமிழன் இருக்கிறானே - தமிழன் என்று சொன்னால் - தமிழ் இனம் என்று சொன்னால் - தமிழனுடைய உரிமை என்று சொன்னால் அங்கேதான் அந்த தேசியம் வேகமாக வந்து பாய்ந்து குதறும். தமிழனுடைய உரிமையை நிலை நாட்ட பக்கத்து நாட்டிலே அழிந்து கொண்டிருக்கின்ற தமிழினத்தை காப்பாற்று என்று சொல்வது தேசியத்திற்கு விரோதம் என்று காங்கிரஸ் நண்பர்கள் சொல்வார்களேயானால் இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற தானோ பேராசிரியரோ, வீரமணியோ, நெடுமாறனோ, அய்யணன் அம்பலமோ ஆதீனகர்த்தரோ மற்றவர்களோ பாடுபடுவது ராஜ துரோகம் என்று சொன்னால் நாங்கள் அந்த குற்றத்தை செய்து கொண்டேயிருக்கத் தயாராக இருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். நாங்கள் மாத்திரம் அல்ல தமிழ்ச்சமுதாயமே தயாராயிருக்கிறது என்பதை தெரிவிக்கதான் நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.
ஆக 1985 ம் ஆண்டில் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை 24 ஆண்டுகள் கழித்து எடுத்துக்கொண்டால் அது குற்றமாகுமா ? தோழர் கருணாநிதி அவர்களே!!!
உங்களைப் போலவே நாங்களும் உறுதிமொழி எடுத்தோம் அதற்கு பலனாய் எங்கள் தோழர்கள் சீமான், கொளத்தூர் மணி இப்போது சிறையில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உங்களுக்கு இடைஞ்சல் ஏற்பட்டால் உங்கள் கூட்டணி தர்மத்துக்கு பங்கம் விளைத்தால் அது தேசியத்திற்கு எதிராணதா? தோழர் கருணாநிதி அவர்களே !!!!!
உங்கள் தேசத்தின் பாதுகாப்பு என்பது காங்கிரசின் பாதுகாப்பா? உங்கள் தேச மக்கள் என்பவர்கள் காங்கிரசு தலைவர்கள் மட்டுமா ?சொல்லுங்கள் தோழர் கருணாநிதி!!!
அவர்களே ஆயிரம் குறைகள் இருந்தாலும் எத்துனை இடர்பாடுகள் வந்தாலும் நாங்கள் உங்களைத்தான் நம்பினோம் ஏனெனில் நாம் மனுதர்மத்திற்கு எதிரானவர்கள் என்பதால், ஆனால் மறுவடிவம் கூட்டணி தர்மமாய் இல்லையா? தோழர் கருணாநித !!!! அவர்களே
மீண்டும் மீண்டும் சொல்கிறேம் நாங்கள் சட்டவிரோதமாக கூட நடப்போம் நியாய விரோதமாக அல்ல. நீங்கள் சட்டத்துக்கு உட்பட்டு உறுதிமொழி ஏற்று முதலமைச்சர் ஆக உள்ளீர்கள் ஆக உங்களுக்கு வேறு வழியில்லை என்பதை நாங்களும் உணர்கிறோம். உங்களிடம் எங்கள் வேண்டுகோள் இரயில் தண்டவாளத்தில் தன் தலைவைத்து படுத்த என் இனத்தை கொன்றுவிட்டு வரும் அமைதிப்படையை வரவேற்க மறுத்த எங்கள் தோழர் கருணாநிதியை எங்களுக்கு மீட்டுத்தாருங்கள் என்பதே எங்கள் சந்தேகம் இதுவே முத்தமிழ் அறிஞர், தமிழினத்தலைவர், கலைஞர் இப்படி எல்லாம் தங்களை அழைத்ததில் நாங்கள் எங்கள் தோழர் கருணாநிதியை தொலைத்துவிட்டோம் என நினைக்கிறோம். ஆக இனி உங்களை இப்படி அழைக்கலாம் என முடிவு செய்துள்ளோம் .
இதன்மூலம் உங்களுக்கு பழைய நினைவு திரும்கினால் எங்களுக்கு மகிழ்ச்சியே அனேகமாக தமிழகத்திலேயே உங்களை உரிமையுடன் பெயர் சொல்லி கூப்பிடுவது செயலலிதாதான் அப்புறம் உங்கள்மேல் விமர்சனம் உண்டு நீங்கள் எதிர்கட்சி தலைவராக இருக்கும்போது மட்டுமே தமிழினப்பிரச்சனை பற்றி பேசுவீர்கள் எனச்சொல்லுகிறார்கள் ..
எங்களுக்கு அதில நம்பிக்கையில்லை ஆனால் வெகு மக்கள் எண்ணம் அதுவெனில் எங்களுக்கு நீங்கள் தான்முக்கியம் எங்கள் அய்யாவின் பாசறையில் பயின்ற நீங்கள் அவர் வழியில் உழைப்பதுதான் எங்களுக்கு பெருமை ஆக என்ன செய்யலாம் ...
உங்களை எதிர்கட்சி தலைவராக்க நாங்கள் தயார் எதிர்கட்சி தலைவராக நீங்கள் தயாரா தோழர் ....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment