Mar 1, 2009

தீண்டாமை


பொதுக் கொளத்துல
தண்ணி மோக்காதே ...
பொதுக் கோயில்ல
கும்படாதே ...
பொது டம்ளர்ல
டீ குடிக்காதே ...

உச்சமாய்
பொது சுடுகாட்டுல
பொதைக்காதே ...

இப்படியயல்லாம்
சொன்ன
எங்கூரு நாட்டாமை
ஒரு நாளு
காசி போற வழியில
வடநாட்ல அனாதை பொணமா
விழுந்தாரு....

No comments:

Post a Comment