Nov 8, 2009
தேசியம்....
கோவையில் இலங்கை தமிழர்களை பாதுகாக்கத்தவறிய மத்திய அரசை கண்டித்து தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழ்தேச பொதுவுடமைக்கட்சி உள்ளிட்ட தமிழ் இயக்கங்கள் மே-24 ஆம் தேதி கண்டண ஆர்ப்பாட்டம் நடத்தின.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 8 பேர் இந்தியக் கொடியை தீ வைத்து எரிக்க முயன்றதாக கூறி கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 8 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் 8 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆர்.ரகுபதி கொடிகை எரிக்க முயன்ற 8 பேரும் தினமும் காலை 6 மணி முதல், மாலை 6 மணிவரை தங்கள் வீடுகளின் முன்பு தேசியக் கொடியை ஏற்றிவைக்க வேண்டும்.
ஒருவாரம் தினமும் 3 மணிநேரம் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
சூன் 9 தேதி சென்னை உயர்நீதி மன்றத்தால் விதிக்கப்பட்ட நிபந்தனையை ஏற்று கைதான 8 பேரில் 6 பேர் விடுதலையானார்கள்,தமிழரசன்,பாரதி ஆகிய 2 இளைஞர்கள் மட்டும் சிறையிலேயே இருந்து கொண்டு ஜாமீன் நிபந்தனைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள்..
நாங்கள் இரானுவ வாகனத்தாக்குதலில் சிறையில் இருந்த நேரம் அப்போது.கைதான இருவர் சகோதரர்கள்(தமிழரசன்,சங்கர்)இதில் சங்கர் வெளியே சென்று விட்டார்,நான் தமிழரசனிடம் கேட்டேன் 'தோழர்! சங்கர் கொடியேற்றும் போது நிங்களும் வெளியே செல்லலாமே? 'இருவரும் ஒரே வீட்டில்தானே உள்ளீர்கள்!எனக் கேட்டதற்கு மாநாட்டு பணி காரணமாகவே சங்கர் வெளியே செல்கிறார்,நாங்களும் சென்று விட்டால் அவர்கள் விதித்த நிபந்தனை சரி என்றாகி விடும்.எத்துனை நாட்கள் ஆனாலும் சிறையில் இருந்தே வழக்கை சந்திப்போம்.
தோழர்களின் உறுதி வெற்றி பெற்றுள்ளது நவம்பர் 3 ல் உச்சநீதிமன்றம் அந்நிபந்தனைகள் சட்டத்திற்குற்பட்டது இல்லையெனவும் இனி இது மாதிரியான முன்மாதிரிகளை எந்த வழக்குக்கும் கொள்ளக்கூடாதெனவும் கூறியுள்ளது..
உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு
http://courtnic.nic.in/supremecourt/temp/6138200923112009p.txt
நமமளுக்கு சட்டம் எல்லாம் தெரியாதுங்க ஆனா கெஞ்சம் நியாயம் தெரியுங்க..தேசிய கொடிய எரிக்க நாட்டின் குடிமக்கள் முயற்சி செய்கிறார்கள் என்றால், .அதற்கான காரணத்தை கண்டு அதை களையாமல்,ஏதோ நாட்டுபபற்றை ஊட்டுகிறேன் என இம்மாதிரி நிபந்தணை விதித்தால்,உருவ பொம்மையை எரித்தால் எரிக்கப்பட்டவர்களை குளிப்பாட்டி விட வேண்டும் என நிபந்தனை விதிப்பார்கள் என எதிர்பார்த்து பயபுள்ளைகள் அசின்,நயன்தாரா,திரிசா உருவ பொம்மையை எரிக்கப்போறானுக சாக்கிரதை...
குறிப்பு- ஆறு மாத கால சிறைவாசத்திற்கு பின் தோழர்கள் தமிழரசன்,பாரதி ஆகியோர் வரும் செவ்வாய் மாலை கோவை சிறையிலிருந்துவெளிவர உள்ளார்கள் வாய்ப்பிருக்கும் தோழர்கள் வரவேற்க வரவும்,தேதி நேரம் உறுதி செய்ய தோழர்.சங்கர்-9865555275..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment